மிகப்பெரிய இரும்பு ராட்சசன்.. சென்னையில் ஓஎம்ஆர், ஈசிஆர் பக்கம் போறீங்களா? வரப்போகும் மாற்றம்!
சென்னை: பக்கிங்ஹாம் கால்வாய்க்கு குறுக்கே அமைக்கப்படவுள்ள கிழக்கு கடற்கரை சாலை (ECR) - ஓல்ட் மகாபலிபுரம் சாலை (OMR) இரும்பு இணைப்புப் பாலத்திற்கான திட்ட வரைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த புதிய சாலை தோராயமாக 1.465 கிலோமீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும். இது தோராயமாக நான்கு வழிப்பாதையாகவும், இருவழிப் போக்குவரத்து வசதி கொண்டதாகவும் அமையவுள்ளது.
தற்போது தோரைப்பாக்கம் பகுதியில் இந்த திட்டம் செயல்படுத்துவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டம் அப்பகுதி போக்குவரத்து நெரிசலைக் கணிசமாக குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே பாலம்
பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே கட்டப்படவுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ECR-OMR இணைப்புச் சாலைப் பாலத்திற்கான CRZ அனுமதிக்கு தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை விண்ணப்பித்துள்ளது.
இதன் மூலம் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கிழக்கு கடற்கரை சாலையையும் (ECR) பழைய மகாபலிபுரம் சாலையையும் (OMR) இணைக்கும் திட்டம் விரைவில் நிறைவேறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
பக்கிங்ஹாம் கால்வாயின் மீது இதற்காக இரும்பு பாலம் அமைக்கப்பட உள்ளது. தொரைப்பாக்கம் (ஓஎம்ஆர்) முதல் நீலாங்கரை (ஈசிஆர்) ஆகியவற்றை இணைக்கும் இரும்புப் பாலத்தை ₹37 கோடிக்கு மாநில நெடுஞ்சாலைத் துறை அமைக்க உள்ளது. இதற்கான டெண்டர் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சோழிங்கநல்லூர் மற்றும் திருவான்மியூரில் நெரிசலைக் குறைக்கும் வகையில் ஆறு வழிச்சாலை, 36 மீட்டர் நீளமுள்ள பாலத்தில் bund மற்றும் அப்ரோச் சாலைகள் அமைக்கப்படும்.
4 மீட்டர் தூரத்திற்கு வெள்ளம் வெளியேறும் வசதியுடன் , படகு இயக்கத்தையும் அனுமதிக்கும் வகையில் பாலம் அமைக்கப்படும். ஏற்கனவே OMR பக்கத்திலிருந்து 1.4 கிமீ இணைப்புச் சாலை ஒரு பகுதி முழுமையடைந்துள்ளது. ஒரு கட்டமாக தொரைப்பாக்கம் மற்றும் நீலாங்கரையை இணைக்கும் பக்கிங்ஹாம் கால்வாயின் குறுக்கே நகரின் OMR-ECR இணைப்பு இரும்பு பாலம் கட்டும் பணி இரண்டு மாதங்களில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
21 கோடியில் வெங்கடேசபுரம்-இளங்கோ நகர், மணியம்மை தெரு-வீரமணி தெரு, அறிஞர் அண்ணாசாலை-பாண்டியன் சாலை ஆகிய சாலைகளை இணைக்கும் வகையில் 3 இரும்பு பாலங்கள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. 2019 டிசம்பரில் கால்வாயின் குறுக்கே ஆறு இடங்களை குடிமை அமைப்பு இறுதி செய்து வடிவமைப்புகள் தயார் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
OMR ECR சாலை இணைப்பு
சென்னை கிழக்கு கடற்கரை சாலை ( ecr) மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை (omr) ஆகிய சாலைகளை இணைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டம் பல காலமாக நிலுவையில் இருந்த நிலையில் ஒருவழியாக இதற்கு தற்போது டெண்டர் விடப்பட்டு உள்ளது.
மொத்தமாக 1000 கோடி செலவில் உருவாக உள்ள இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் மொத்தமாக சென்னையே அடியோடு மாறும். ஓஎம்ஆர், ஈசிஆரில் தற்போது உள்ள ஒன்றரை மணி நேர பயணம் அதிகபட்சம் 20 நிமிடமாக குறையும் என்கிறார்கள்.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக கிழக்கு கடற்கரை சாலையை (ECR) சென்னை பெரிஃபெரல் ரிங் ரோட்டுடன் (CPRR) இணைக்கும் பூஞ்சேரியில் ட்ரம்பெட் இன்டர்சேஞ்ச் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும். 1.8 கிமீ நீளம், ₹40 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த குறிப்பிட்ட இணைப்பு வசதி, ECR இல் போக்குவரத்தை குறைக்கவும், நகரத்திற்குள் செல்லாமல் எண்ணூருக்கு வசதியாக பயணிக்கவும் அனுமதிக்கும்.
இந்த சாலைக்கு CPRR என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த CPRR முடிந்ததும், பல இடங்களுக்கு இணைப்பு அதிகரிக்கும். எண்ணூரில் இருந்து ஒருவர் புதுச்சேரிக்கு சாலை மார்க்கமாக ஐந்தரை மணி நேரத்திற்குப் பதிலாக மூன்றரை மணி நேரத்தில் செல்ல முடியும் என்று கற்பனை செய்து பாருங்கள். இது நேரத்தையும், எரிபொருளையும் மிச்சப்படுத்தவும், வாகனங்களின் தேய்மானத்தைக் குறைக்கவும் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக ன்னையில் உள்ள ஓஆர்ஆர் சாலை அதாவது அவுட்டர் ரிங் ரோடு சாலையும் விரிவுபடுத்தப்பட உள்ளது. அதன்படி சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) டெல்லியைச் சேர்ந்த ருத்ராபிஷேக் எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு 62 கிமீ வெளிவட்டச் சாலையின் (ஓஆர்ஆர்) இருபுறமும் மேம்படுத்துவதற்கான வரைபடத்தைத் தயாரிக்க ரூ.2.9 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது.
-
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே












Click it and Unblock the Notifications