ஈசிஆர் ரூட்டில் பயணம் செய்கிறீர்களா? உங்களுக்குத்தான் இந்த செய்தி.. இனி சல்லுனு போகலாம்.. செம!
சென்னை: சென்னையில் பல்லாவரம் ஈசிஆர் சாலையை விரிவுபடுத்துவதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது.
சென்னையின் மிக முக்கியமான சாலையாக ஈசிஆர் சாலை உள்ளது. 10.5 தொலைவு கொண்ட திருவான்மியூர் - அக்கரை இடையிலான சாலை மிக முக்கியமானது ஆகும். இந்த சாலை 70- 80 அடி அகலம் கொண்டது.

மொத்தமாக 4 லேன்கள் கொண்ட சாலையாக இது உள்ளது. இங்கே நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. ஓ எம்ஆர் சாலையில் தற்போது மெட்ரோ பணிகள் நடந்து வருகின்றன. அந்த பணிகள் காரணமாக ஈசிஆர் சாலையில் போக்குவரத்து நெரிசல் கூடி வருகிறது.
இதையடுத்து தற்போது ஈசிஆர் சாலையை விரிவாக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த சாலையை இன்னும் 8 மாதங்களில் விரிவாக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. கிட்டத்தட்ட இங்கே விரிவாக்கம் செய்ய 175 கோடி ரூபாய் நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
சிங்கார சென்னை திட்டம்: இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இன்னொரு பக்கம் சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் சென்னையில் முக்கிய சாலைகள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக சென்னையில் முக்கிய சாலைகள் பல்வேறு மாற்றங்களை பெற உள்ளன. சாலைகளை அகலப்படுத்துவது, புதிய புட் கோர்ட்டுகளை உருவாக்குவது, சாலை ஓரம் புதிய அலங்கார அமைப்புகளை உருவாக்குவது போன்ற பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்த உள்ளனர்.
பூந்தமல்லி நெடுஞ்சாலை, ராஜீவ்காந்தி சாலை, கத்தீட்ரல் சாலை ஆகிய சாலைகளில் இந்த மாற்றங்கள் செய்யப்படும். அதன்பின் எலியடஸ் கடற்கரை சாலை, காமராஜர் சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை ஆகிய சாலைகளிலும் இந்த மாற்றம் செய்யப்படும். இப்படி மொத்தம் 18 சாலைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. சென்னையில் சிங்கார சென்னை 2.0 திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையை விரிவுபடுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மாநில நெடுஞ்சாலைத்துறை 15.7 கோடி ரூபாயை செலவு செய்ய உள்ளது. இதன் மூலம் கிண்டியில் இருந்து தாம்பரம் வரை போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில்தான் ஜிஎஸ்டி சாலையில் சாந்தை ரோடு மற்றும் குன்றத்தூர் சாலை சந்திப்பில் ரூ. 82 கோடி செலவில் அரசு மேம்பாலம் கட்டியது. இந்த பாலம் 12 மீட்டர் அகலம் கொண்டது, 1.5 கிமீ நீளம் கொண்டது என்றாலும் கூட, இது ஒரு வழி சாலையாக உள்ளது. அதாவது தாம்பரம் டூ கிண்டி செல்லும் ஒரு வழி சாலையாக உள்ளது.
இதனால் கீழே பல்லாவரம் - குரோம்பேட்டை செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசல் எதிர் திசையில் ஏற்படுகிறது. இந்த நிலையில்தான் பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையை விரிவுபடுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இங்கே இருக்கும் பாதுகாப்பு படைக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்த அரசு முயன்று வந்தது.
அந்த பணிகள் முடிந்த நிலையில் வரும் நாட்களில் சாலை விரிவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்திற்காக 15.7 கோடி மதிப்பிலான சொத்துகள் இடிக்கப்பட உள்ளன.
-
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்!












Click it and Unblock the Notifications