மாஜி ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட் மனைவி பர்வீன், சொத்துக்கள் முடக்கம்..அமலாக்கத்துறை அதிரடி
சென்னை: வீட்டு வசதி வாரியத்தில் முறைகேடாக வீடு ஒதுக்கீடு செய்த விவகாரத்தில் ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி ஜாபர்சேட்டின் மனைவி பர்வீன் ஜாபர் மற்றும் லேண்ட் மார்க் கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளரும், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் செயலாளர் ராஜ மாணிக்கத்தின் மகன் துர்கா சங்கர் ஆகியோரின் 14.23 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
கடந்த 2006-2011 திமுக ஆட்சியின் போது, வீட்டு வசதி வாரியத்தில் நில ஒதுக்கீடு பெற்று அதில் வீடு கட்டி விற்பனை செய்து சட்ட விரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக ஜாபர் சேட் மீது வழக்குப்பதியப்பட்டு அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
ஜாபர் சேட்டுக்கு நில ஒதுக்கீடு செய்த காரணத்தால் அப்போதைய வீட்டுவசதித்துறை அமைச்சரும் இப்போதைய கூட்டுறவுத்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமிக்கும் சேர்ந்து சிக்கல் எழுந்துள்ளது.

ஜாபர் சேட்
கடந்த 2006-2011 திமுக ஆட்சிக்காலத்தில் அப்போதய முதல்வர் கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமான ஐ.பி.எஸ். அதிகாரியாக திகழ்ந்தவர் ஜாபர் சேட். 1989 பேட்ச் அதிகாரியான இவர் தமிழக காவல்துறையில் உளவுத்துறை ஐ.ஜி., சிபிசிஐடி டிஜிபி, என பல உயர் பதவிகளை வகித்தவர்.

வீட்டு வசதி வாரியத்தில் நில ஒதுக்கீடு
கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆட்சி மாற்றத்தின் போது அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமிற்கு பந்தாடப்பட்டார். காரணம் அந்தளவுக்கு இவர் மீது ஜெயலலிதா கோபத்தில் இருந்தார். இதனிடையே ஜாபர் சேட் தனது மனைவி சமூக சேவகர் எனக் கூறி 2006-2011 திமுக ஆட்சிக்காலத்தில் வீட்டு வசதி வாரியத்தில் நில ஒதுக்கீடு பெற்றிருந்தார். பெசன்ட் நகர் கோட்டத்தின் திருவான்மியூர் புறநகர் திட்டத்தில் இந்த நில ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது.

சட்ட விரோத பணப்பரிமாற்றம்
இதனிடையே அங்கு வர்த்தக நோக்கில் அடுக்குமாடு குடியிருப்பு கட்டி அதன் மூலம் சட்ட விரோத பணப்பரிமாற்றம் நிகழ்ந்ததாக ஜாபர் சேட் மீது 2011ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. ஐ.பி.எஸ். அதிகாரியான தன் மீது வழக்குப்பதிய மத்திய அரசின் அனுமதியை லஞ்ச ஒழிப்புத்துறை பெறவில்லை எனக் கோரி ஜாபர் சேட் நீதிமன்றத்தை நாடினார். அப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது.

அமலாக்கத்துறை
இதையடுத்து ஜாபர் சேட் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. உயர்நீதிமன்ற உத்தரவை மீறி லஞ்ச ஒழிப்புத்துறைத் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இப்படியாக இந்த வழக்கு சென்று கொண்டிருந்த நிலையில் 2020ஆம் ஆண்டு அமலாக்கத்துறை இதை கையில் எடுத்தது. ஜாபர் சேட் மீதான அமலாக்கத்துறையின் பிடிகள் இறுகத் தொடங்கின.

அமலாக்கத்துறை சம்மனை
இதனிடையே அமலாக்கத்துறை சம்மனை ஏற்று கடந்த ஜூன் மாதம் விசாரணைக்கு ஆஜரான ஜாபர் சேட்டிடம் 4 மணி நேரத்துக்கு மேலாக கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. ஜாபர் சேட்டுக்கு சர்ச்சைக்குரிய நிலம் ஒதுக்கீடு செய்த விவகாரத்தில் அப்போதைய வீட்டுவசதித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சிக்கல் எழுந்துள்ளது. ஐ.பெரியசாமி இப்போது கூட்டுறவுத்துறை அமைச்சராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சொத்துக்கள் முடக்கம்
லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்கில் அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்குபதிவு செய்து திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. அதனடிப்படையில் தற்போது ஜாபர்சேட்டின் மனைவி பர்வீன் ஜாபர் மற்றும் லேண்ட் மார்க் கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளரும், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் செயலாளர் ராஜ மாணிக்கத்தின் மகன் துர்கா சங்கர் ஆகியோரின் 14.23 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications