எல்லா ஏற்பாடுகளும் தயார்... அழைப்பு விடுத்த தி.நகர் சத்யா.. களத்தில் குதித்த எடப்பாடி பழனிசாமி..!
சென்னை: சென்னையில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்ததோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களையும் வழங்கியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை முதல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று ஆறுதலும், தைரியமும் கூறி வரும் சூழலில் இப்போது எடப்பாடி பழனிசாமியும் மக்களை சந்திக்க வந்திருக்கிறார்.
கோடம்பாக்கம் ரங்கராஜபுரத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர் பிரட், பிஸ்கெட் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகளை பொதுமக்களுக்கு வழங்கினார்..

முதல்வர் ஆய்வு
கடந்த சனிக்கிழமை இரவு சென்னை முழுவதும் கொட்டித்தீர்த்த கனமழையால் நகரே வெள்ளக்காடானது. திரும்பிய பக்கமெல்லாம் தண்ணீர் சுழ்ந்துநின்றதால், அதனை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கையில் முதலமைச்சரே நேரில் ஈடுபடத் தொடங்கினார். மகேந்திரா தார் ஜீப்பில் அமர்ந்தவாறு இடுப்பளவு தண்ணீர் தேங்கி நின்ற பகுதிகளில் கூட ஆய்வு செய்த அவர், பல இடங்களில் மழை நீரில் நடந்தும் சென்றார். முதலமைச்சரின் இந்த ஆய்வு தமிழக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்தது. ஸ்டாலின் ஆய்வு செய்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

திடீர் நிகழ்வு
இந்தச் சூழலில் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இன்று பிற்பகல் ஆய்வு செய்திருக்கிறார். முன்னதாக இது குறித்த எந்த திட்டமிடலும் இல்லாத நிலையில், ஸ்டாலினின் செயல்பாடு பாராட்டு பெற்று வருவதை கவனத்தில் கொண்ட எடப்பாடி பழனிசாமி தரப்பு திடீர் நிகழ்வாக இதனை ஏற்பாடு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்பாடுகள்
இதையடுத்து எடப்பாடி பழனிசாமியின் படைத்தளபதிகளில் ஒருவரும், தீவிர ஆதரவாளருமான முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா மூலம் இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுவென காலை முதல் நடைபெற்றதாக கூறப்படுகிறது. எல்லா ஏற்பாடுகளும் தயாராகிய பிறகு கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பகுதிக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி, வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு மழைநீரில் நடந்து சென்று ஆய்வு செய்தார். பின்னர் அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த பிரட், பிஸ்கட், போர்வை உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகளை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கினார்.

ஊரில் இல்லை
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அவரது மகனும் சென்னை மேயர் வேட்பாளராக அதிமுக சார்பில் களமிறக்கப்படுவார் எனக் கூறப்படுபவருமான ஜெயவர்தன் ஆகியோரும் உடனிருந்தனர். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல், இந்த ஆய்வின் மூலம் தன்னை அதிமுகவின் ஒற்றை பிரதிநிதியாகவும், பிரதான எதிர்க்கட்சித் தலைவராகவும் அவர் அடையாளம் காட்டிக் கொண்டதாக தெரிகிறது. இதனிடையே அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இல்லாதது குறிப்பிடத்தக்கது.
-
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்! -
Mithun: எடப்பாடி பழனிசாமி மகன் மிதுனை அரசியலுக்கு அழைப்பது தவறு! ராஜசத்யன் கடும் எதிர்ப்பு -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
விஜய், உதயநிதி, அண்ணாமலைக்கு செக்! அதிமுகவில் களமிறங்குகிறாரா எடப்பாடி பழனிசாமி மகன் மிதுன்? -
அதிமுக 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லுமா? எடப்பாடி பழனிசாமி வழக்கு! சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை -
மிதுன் பழனிசாமியை அரசியலுக்கு அழைத்து வர எடப்பாடி பழனிசாமி டிராமா ஆடுகிறார்.. சிவி சண்முகம்! -
"மதிக்காத இடத்தில் பயணம் சாத்தியமா" அதிமுகவில் இருந்து விலகுவதை சூசகமாக சொன்ன விஜயபாஸ்கர்? -
"எங்கே சென்றது சிங்கப்பெண் அதிரடி படை?" கும்மிடிப்பூண்டி வழக்கில் இபிஎஸ், அன்புமணி கண்டனம் -
இன்னமும் ஒத்துக்க மாட்றாங்க பாருங்களேன்! அதிமுகவை விழுங்கும் தவெக! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
ரீல்ஸ் போடுங்கப்பா..ஆட்சியை பிடிக்கலாம்! அதிமுக கூட்டத்தில் அள்ளி விட்ட எடப்பாடி! ஆடிப்போன ஐடி விங்! -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ்












Click it and Unblock the Notifications