நேருக்குநேர் பாராமல் தவிர்த்த ஓபிஎஸ்- ஈபிஎஸ்.. ஒரே டேபிளில் அமரவைத்த ஆளுநர் ஆர்என் ரவி.. சுவாரசியம்!
சென்னை: சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் இன்று ஆளுநர் ஆர்என் ரவி தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் ஒருவரையொருவர் நேருக்கு நேர் பார்க்காமல் தவிர்த்த நிலையில் இருவரையும் அழைத்து ஒரே டேபிளில் ஆளுநர் ஆர்என் ரவி உட்கார வைத்த சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது. அதன் விபரம் வருமாறு:
ஆண்டுதோறும் ஆளுநர் மாளிகையில் பொங்கல் பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகை கொண்டாட ஆளுநர் ஆர்என் ரவி முடிவு செய்தார். இதற்காக அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டு முதல்வர் முக ஸ்டாலின், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், நீதிபதிகள், ஆதீனங்கள், பிஷப்கள், முஸ்லிம் குருமார்கள், விளையாட்டு துறையில் சாதனை படைத்த வீரர், வீராங்கனைகள், தமிழ் ஆர்வலர்கள், சமூக சேவகர்கள் உள்பட 1800க்கும் அதிகமானவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

ஆளுநர்-ஆளும் கட்சி மோதல்
தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநர் ஆர்என் ரவிக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு உள்ளது. இந்நிலையில் தான் கடந்த திங்கட்கிழமை சட்டசபை கூட்டத்தொடரில் ஆளுநர் ஆர்என் ரவி உரையாற்றியபோது அச்சிடப்பட்ட அரசு உரையில் சிலவற்றை வாசிக்காமல் விட்டதோடு, புதிய விஷயங்களை அவர் படித்தார். இதையடுத்து ஆளுநர் ஆர்என் ரவிக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் சட்டசபையிலேயே தீர்மானம் கொண்டு வந்து அச்சிடிக்கப்பட்ட உரையில் இருப்பதை மட்டுமே அவை குறிப்பில் ஏற்ற வேண்டும் என்றார். இதையடுத்து ஆளுநர் ஆர்என் ரவி சபையில் இருந்து பாதியில் வெளியேறினார். இது தற்போது பெரும் விவாதத்தை கிளப்பி உள்ள நிலையில் ஆளுநர் ஆர்என் ரவிக்கு அறிவுரை வழங்க வேண்டும் என திமுக சார்பில் இன்று ஜனாதிபதி திரெளபதி முர்முவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

பொங்கல் விழாவை புறக்கணித்த தமிழக அரசு
இந்நிலையில் தான் இன்று ஆளுநர் மாளிகையில் நடந்த பொங்கல் விழாவில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக கூட்டணி கட்சியினர் பங்கேற்க மாட்டார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி இன்று மாலை ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அப்போது எதிர்பார்த்தபடியே முதல்வர் ஸ்டாலின் உள்பட திமுக கூட்டணியில் இருப்பவர்கள் பங்கேற்கவில்லை. மாறாக விழாவில் முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, தனது அணியின் எம்எல்ஏக்களுடன் பங்கேற்றார். முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அவரது ஆதரவாளர்களுடன் பங்கேற்றனர். மேலும் பாஜக எம்எல்ஏக்கள் உள்பட ஏராளமானவர்கள் விழாவில் பங்கேற்றனர்.

ஒரே டேபிளில் அமர்ந்த ஈபிஎஸ்-ஓபிஎஸ்
ஆளுநர் ஆர்என் ரவி தமிழ் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் வேஷ்டி, சட்டை, பரிவட்டம் கட்டி இருந்தார். அவரது மனைவி பட்டுப்புடவை அணிந்திருந்தார். இவர்கள் அனைவரையும் வரவேற்றனர். இதையடுத்து பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அதன்பிறகு அனைவருக்கும் விருந்து பரிமாறப்பட்டது. இந்த வேளையில் ஆளுநர் ஆர்என் ரவியுடன் ஒரே டைனிங் டேபிளில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் அமர்ந்திருந்தனர். இருவரும் எதிரெதிராக அமர்ந்திருந்தனர். இதுதொடர்பான படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

நேருக்கு நேர் பார்க்க தவறிய நிலையில்..
முன்னதாக, எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் ஒருவரையொருவர் நேருக்கு நேர் பார்ப்பதை தவிர்த்தனர். அதாவது விழாவின்போது எடப்பாடி பழனிச்சாமி முதல் வரிசையில் அமர்ந்திருந்த நிலையில் நிகழ்ச்சிக்கு ஓ பன்னீர் செல்வம் வந்தார். அப்போது இருவரும் ஒருவரையொருவர் நேருக்கு நேர் பார்க்காமல் தவிர்த்த நிலையில் ஆளுநர் ஆர்என் ரவியுடன் இருவரும் ஒன்றாக ஒரே மேஜையில் அமர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சட்டசபைக்கு பிறகு ஆளுநர் மாளிகையில்..
முன்னதாக, ஒற்றை தலைமை விவகாரம் அதிமுகவில் எழுந்தபோது பொதுக்குழு மூலம் எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஓ பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். அவரிடம் இருந்த எதிர்க்கட்சி துணை தலைவர் பொறுப்பு பறிக்கப்பட்டு ஆர்பி உதயக்குமாரிடம் வழங்கப்பட்டது. இதில் இன்னும் சபாநாயகர் அப்பாவு முடிவு எடுக்காததால் சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் அருகருகே அமர்ந்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தற்போது இருவரும் ஆளுநர் ஆர்என் ரவி முன்னிலையில் ஒரே மேஜையில் அமர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம் -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை












Click it and Unblock the Notifications