வேண்டுமென்றே தாமதமாக வந்த எடப்பாடி? தனி அறையில் காத்திருந்த ஓபிஎஸ்.. மேடையில் நடந்த பரபர சம்பவம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி வரும் வரை காத்து இருந்த ஓபிஎஸ்.. தனி அறையில் அமர்ந்து இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Recommended Video

    AIADMK பொதுக்குழு கூட்டம் | Court case -> பொதுக்குழு என்ன நடந்தது? |Oneindia Tamil

    சென்னை: அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் தற்போது சென்னை வானகரத்தில் நடந்து வருகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். ஓபிஎஸ், எடப்பாடி இருவரும் அருகருகே அமராமல் நடுவே வேறு ஒரு இருக்கை போடப்பட்டு அதில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அமர வைக்கப்பட்டார்.

     கார்

    கார்

    இந்த நிலையில் பொதுக்குழு நோக்கி செல்வதற்கு எடப்பாடி பழனிசாமி காரில் ஏறும் முன் அவருக்கு அதிமுக நிர்வாகிகள் சார்பாக பூர்வ கும்ப மரியாதை கொடுத்தனர். அவரின் வீட்டிற்கு வெளியே ஏராளமான தொண்டர்கள் கூடி உள்ளனர். இந்த நிலையில் பொதுக்குழு கூட்டத்திற்கு வந்த எடப்பாடிக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுக்கப்பட்டது. அவர் வரும் வழி முழுக்க மிகப்பெரிய வரவேற்பு அவருக்கு கொடுக்கப்பட்டது.

    தாமதம்

    தாமதம்

    இதனால் அவர் கார் வருவதற்கு தாமதம் ஆனது. 9 மணிக்கு கிளம்பியவர் 11 மணிக்குத்தான் வானகரம் வந்தார். கிட்டத்தட்ட 2 மணி நேரம் அவர் மெதுவாக ஊர்ந்து வந்தார். தேர் வலம் வருவது போல பெரிய ஆரவாரத்தோடு எடப்பாடி பழனிசாமி வந்தார். முன் பக்கமும், பின் பக்கமும் தொண்டர்கள் கூட்டம் சூழ.. கார்கள் படை சூழ எடப்பாடி வந்தார். இதனால் அவர் வர நீண்ட நேரம் ஆனது.

    ஓபிஎஸ் வந்தார்

    ஓபிஎஸ் வந்தார்

    ஆனால் ஓபிஎஸ் அவருக்கு முன்பவாகவே வந்துவிட்டார். இதனால் அவர் மேடைக்கு ஏற சென்றார். ஆனால் மேடையில் எடப்பாடி இல்லாததால் கீழே இறங்கி அவர் செல்ல முயன்றார். அப்போது கீழே இருந்த எடப்பாடி ஆதரவாளர்கள்.. ஹே மேடை ஏறாதே வெளியே போ என்று கூறி கோஷம் எழுப்பினார்கள். இதனால் அங்கும் பெரிய பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் வெளியே சென்ற ஓபிஎஸ் தனி ரூமில் காத்து இருந்தார். எடப்பாடி வரும் வரை ஓபிஎஸ் தனி அறையில் இருந்தார்.

     குற்றச்சாட்டு

    குற்றச்சாட்டு

    இந்த நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்களோ வெளியே செய்தியாளர்களிடம்.. எடப்பாடி வேண்டும் என்றே தாமதமாக வருகிறார். ஓபிஎஸ் வந்த பின் வர வேண்டும். ஓபிஎஸ்ஸை காக்க வைக்க வேண்டும். அவருக்கு பின்பாக மேடைக்கு வர வேண்டும் என்று லேட்டாக வருகிறார் என்று குற்றஞ்சாட்டி உள்ளனர். மேடைக்கு தலைவருக்காக எல்லோரும் காத்திருப்பது போல எடப்பாடி எல்லோரையும் காக்க வைத்துவிட்டார் என்று ஓபிஎஸ் நிர்வாகிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+