சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு.. நடந்தது என்ன?.. இபிஎஸ் தரப்பு விளக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: சசிகலா சிறைக்கு சென்றபின்னர் நடந்தது குறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கியது.

அதிமுக பொதுக் குழு முடிவை எதிர்த்து ஓ பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது முதலில் ஓபிஎஸ் தரப்பு தன் வாதத்தில் அதிமுக பொதுக் குழு கூட்டப்பட்டது கட்சி விதிகளுக்கு எதிரானது.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியானால், பொருளாளர், தலைமை கழக செயலாளர் அந்த பதவிகளுக்கான பணிகளை மேற்கொள்வர்.

சாயம் வெளுத்திருச்சு.. சசிகலா, ஓபிஎஸ், தினகரன் மூவரும் இணையலாம்.. ஆனால்.. விளாசிய ஜெயக்குமார்! சாயம் வெளுத்திருச்சு.. சசிகலா, ஓபிஎஸ், தினகரன் மூவரும் இணையலாம்.. ஆனால்.. விளாசிய ஜெயக்குமார்!

தேர்தல் விதி

தேர்தல் விதி

தேர்தல் விதி திருத்தத்துக்கு, பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்காவிட்டால் பதவிகள் காலியாகி விடும் என்றால், அது பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் பொருந்தும் என ஓபிஎஸ் தரப்பு தன் வாதத்தை முன்வைத்தது. அப்போது நீதிபதி" அதிமுகவில் இரு பதவிகளும் காலியாக உள்ள நிலையில் பொதுக் குழுவை யார் கூட்டலாம் என கேள்வி எழுப்பினார்.

ஓபிஎஸ் தரப்பு

ஓபிஎஸ் தரப்பு

அப்போது ஓபிஎஸ் தரப்பு இரு பதவிகளும் காலியாக உள்ள நிலையில் பொதுக்குழுவை தலைமை கழக நிர்வாகிகள் கூட்டலாம் என எடப்பாடி பழனிசாமி தரப்பு பதில் அளித்தது. இந்த நிலையில் பொதுச் செயலாளர் பதவியை உருவாக்கியது ஏன்? பெரியாரை மட்டுமே தலைவராக ஏற்றுக் கொள்வதாக கூறியே பொதுச் செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது.

ஜெயலலிதா

ஜெயலலிதா

நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா தான் என கூறிவிட்டு மீண்டும் அந்த பதவியை உருவாக்கியது ஏன்? பொது குழு கூட்டம் கட்சி விதிப்படி நடத்தப்பட்டதா என விளக்க வேண்டும். கட்சி விதிகளை பின்பற்றாமல் இருந்திருந்தால், நீதிமன்றமே உத்தரவு பிறப்பிக்கும் என நீதிபதி அதிரடியாக தெரிவித்துள்ளார்.

2016 இல் உறுப்பினர்கள்

2016 இல் உறுப்பினர்கள்

இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பு தனது வாதத்தில் கூறுகையில் 2016ல் உறுப்பினர்கள் கோரிக்கையை ஏற்று பொதுக்குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. சசிகலா சிறைக்கு பின்விதிகளில் மாற்றம் செய்யப்பட்டது. கட்சி விதிகளில் திருத்தம் செய்து ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 ஒருங்கிணைப்பாளர்

ஒருங்கிணைப்பாளர்

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் தொடர்பாக கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வந்த 2021ம் ஆண்டு டிசம்பர் முதல் கடந்த ஜூலை 11 வரை இருவரும் எடுத்த முடிவுகள் செல்லும் என்பதால் அவர்களால் நியமிக்கப்பட்ட அந்த பொதுக்குழு உறுப்பினர்கள் நியமனமும் செல்லும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வலியுறுத்தப்பட்டது என எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிவித்துள்ளது.

English summary
Edappadi Palanisamy faction says in Chennai HC that How General Secretary post created?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X