எடப்பாடி கையில் எடுத்த அஸ்திரம்.. பன்னீரின் பலத்தை அசைக்கும் அதிமுக நியமனங்கள் - மாஸ்டர் ப்ளான்
சென்னை: ஓ.பன்னீர்செல்வம் வகித்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பொறுப்பை தென் மாவட்டத்தை சேர்ந்த ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்கியதன் மூலம் மேலும் தென் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி முக்கியத்துவம் கொடுத்து வருவது மேலும் உறுதியாகிறது.
ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் தொடர் முட்டுக்கட்டைகள், வழக்குகளை கடந்து கடந்த 11 ஆம் தேதி சென்னையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் பிரம்மாண்டமாக கூடியது.
அதில் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக பொறுப்பேற்க தென் மாவட்டத்தை சேர்ந்த திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளராக பொறுப்பேற்றார்.

சமூக அரசியல்
முன்னதாக ஒற்றைத் தலைமை விவகாரத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பு கிளப்பியதிலிருந்தே, தென் மாவட்டம் மற்றும் சமூக ரீதியான ஆதரவை திரட்டத் தொடங்கினார் ஓ.பன்னீர்செல்வம். எடப்பாடி பழனிசாமிக்கு மேற்கு மாவட்டங்களிலும் அவரது சமூகத்திலும் இருக்கும் செல்வாக்கு ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இருப்பதை காட்ட அவரது ஆதரவாளர்களும் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கினர்.

எடப்பாடிக்கு அதிகரித்த ஆதரவு
ஆனாலும், தென் மாவட்டங்களை சேர்ந்த ஓ.பி.எஸின் சொந்த சமுதாயத்தை சேர்ந்த அதிமுக மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் பலரின் ஆதரவு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கே சென்றுகொண்டிருந்தது. அண்மையில்கூட ஓபிஎஸின் சொந்த மாவட்டமான தேனி அதிமுக நிர்வாகிகள் மற்றும் ஓபிஎஸின் போடி தொகுதி அதிமுக நிர்வாகிகள் பலர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

எடப்பாடியின் மாஸ்டர் ப்ளான்
இந்த நிலையில், தென் மாவட்டங்கள் மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் சமுதாய ஆதரவும் தன் வசமே இருப்பதை காட்டவும், முழு ஆதரவையும் ஈர்க்கவும் எடப்பாடி தரப்பு முயன்றதை பொதுக்குழுவில் பார்க்க முடிந்தது. அதன் அடிப்படையில் தென் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அதிமுக பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொதுக்குழுவில் முன்னுரிமை
இதேபோல், பொதுக்குழுவின் 16 தீர்மானங்களில் 8 தீர்மானங்களை வாசித்து ஒப்புதல் பெற்றவர் தென் மாவட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். மீதமுள்ள 8 தீர்மானங்களை வாசித்தவர் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன். தீர்மானங்களை முன்மொழிந்தவர் நத்தம் விஸ்வநாதன். கட்சி வரவு செலவு கணக்கை வாசித்து ஒப்புதல் பெற்றவர் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவருமே தென் மாவட்டங்களையோ அல்லது ஓபிஎஸ் சமுதாயத்தையோ சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தென் மாவட்ட தலைவர்களுக்கு பொறுப்பு
பொதுக்குழுவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி நியமித்த 2 துணைப் பொதுச்செயலாளர்களில் நத்தம் விஸ்வநாதனும் தென் மாவட்டமான திண்டுக்கலை சேர்ந்தவர். அதேபோல், அமைப்புச் செயலாளர்களில் செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜூ, ராஜன் செல்லப்பா ஆகியோருக்கு அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில் தென் மாவட்டமான மதுரையை சேர்ந்த சேர்ந்த முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு ஓ.பன்னீர்செல்வம் வகித்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகலா.. ஆதரவாளர்களுடன் ஆலோசனை குறித்து சரத்குமார் பரபரப்பு விளக்கம் -
ஆதரவாளர்களுடன் சரத்குமார் ரகசிய ஆலோசனை.. மீண்டும் உதயமாகிறதா சமக.. அதிர்ச்சியில் பாஜக -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
சிறிய கட்சிகளுக்கு தாமரை சின்னம்.. வாக்கு வங்கியை காக்க பாஜக ஐடியா.. எடப்பாடி காதுக்கு போன மெசேஜ்! -
இன்னும் 4 நாள் ஆகும்.. அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு காலதாமதம்.. அமித்ஷா – எடப்பாடி மீட்டிங் முடிவு -
தொகுதிப் பங்கீடு என்னாச்சு? டெல்லிக்கு பறந்த எடப்பாடி பழனிசாமி.. நயினார் சொன்ன மேட்டர்! -
திருச்செந்தூர் சென்ற புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.. பேச்சுவார்த்தையில் எஸ்கேப்.. பரிதவிக்கும் பாஜக -
"மிஷன் கேரளா.." சத்தமே இல்லாமல் இறங்கிய ஆர்எஸ்எஸ்.. தேர்தலில் காத்திருக்கும் ட்விஸ்ட்! -
நாளை டெல்லிக்கு பறக்கும் தினகரன், அன்புமணி? அமித் ஷா முன்னிலையில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு டீல்?












Click it and Unblock the Notifications