ஏய்.. ஏய்.. எடப்பாடி உள்ளே வரும்போதே நடந்த "அந்த" சம்பவம்.. பட்டென மாறிய முகம்.. நடந்தது என்ன?
சென்னை: அதிமுக அலுவலகத்தில் தற்போது மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்திற்கு முன்பாக அதிமுக அலுவலகத்தில் சில சுவாரசியமான சம்பவங்கள் நடைபெற்றன.
அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சம் தொட்டுள்ளது. வெளியில் இருந்து பார்த்தால் ஒரே ஒரு வழக்கு மட்டுமே நடப்பது போல தோன்றலாம். ஆனால் உள்ளே பல மோதல்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. முக்கியமாக எடப்பாடி ஒரு பக்கம் பல்வேறு மீட்டிங்குகளை போட்டுகொண்டு இருக்கிறார். அதேபோல் ஓ பன்னீர்செல்வமும் தொடர்ந்து ஆலோசனைகளை செய்து வருகிறார்.
அந்த வகையில்தான் கடந்த வாரம் அதிமுக ஓ பன்னீர்செல்வம் அணி மாவட்ட செயலாளர்கள் சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. போட்டி பொதுக்குழுவை நடத்துவது தொடர்பாக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை செய்தனர்.

மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
சென்னை வேப்பேரியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ திருமண மண்டபத்தில் இந்த கூட்டம் நடந்தது. அதிமுகவின் அரசியல் ஆலோசகராக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை சமீபத்தில் ஓபிஎஸ் நியமித்தார். இதையடுத்து அவர் வழிகாட்டுதலின் பெயரில், தற்போது அவரின் தலைமையில்தான் இந்த கூட்டம் நடந்தது. இதில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டது. இதில் ஓ பன்னீர்செல்வம் எடப்பாடியை கடுமையாக விமர்சனம் செய்தார். ஜெயலலிதாதான் நிரந்தர பொதுச்செயலாளர். அவரை நீக்க உனக்கு எப்படி மனம் வந்தது. மகா படுபாவி.. உன்னை அதிமுக மன்னிக்காது. ஓபிஎஸ் ஆகிய நான் சாதாரண தொண்டன். ஆனால் நீ தனியாக கட்சியை கைப்பற்ற துடிக்கிறாய். என்ன மணி அடித்தாலும் பப்பு வேகாது. எடப்பாடி பழனிசாமியே உனக்கு தைரியம் இருக்கா? அப்படி தைரியம் இருந்தால் தனிக்கட்சி தொடங்கி பார் என்று கடுமையாக பேசினார்.

சவால்
ஓ பன்னீர்செல்வம் இப்படி திடீரென அதிரடியாக பேச தொடங்கி இருப்பது கவனம் பெற்றுள்ளது. முக்கியமாக தனிக்கட்சி தொடங்கு என்றும் சவால் விட்டுள்ளார். இதற்கு எதிராக ஓ பன்னீர்செல்வத்திற்கு எடப்பாடி பழனிசாமி நோட்டீஸ் அனுப்பியும் உள்ளார். அதிமுகவின் கட்சி சின்னம் மற்றும் லெட்டர் பேடை பயன்படுத்த கூடாது என்று எடப்பாடி ஓபிஎஸ்ஸுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். இந்த நிலையில்தான் ஓ பன்னீர்செல்வம் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக அலுவலகத்தில் தற்போது மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. முன்னதாக ஓ பன்னீர்செல்வம் மாவட்ட செயலாளர்களை கூட்டியது தொடர்பாக அவர் தேர்தலில் அறிக்கை தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.

போட்டி
அதாவது பாருங்கள் மாவட்ட செயலாளர்கள் எல்லோரும் என் பக்கம்தான் இருக்கிறார்கள் என்று ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் வாதம் வைக்க இந்த கூட்டத்தை நடத்தியதாக கூறப்பட்டது. இதற்கு பதிலடியாகவே.. உண்மையான மாவட்ட செயலாளர்கள் என் பக்கம் இருக்கிறார்கள் என்று காட்டும் விதமாக எடப்பாடி பழனிசாமி இன்றைய கூட்டத்தை நடத்துவதாக கூறப்படுகிறது. இன்று நடைபெறும் இந்த கூட்டத்திற்கு முன்பாக அதிமுக அலுவலகத்தில் சில சுவாரசியமான சம்பவங்கள் நடைபெற்றன. அதன்பின் எடப்பாடிதான் கடைசி ஆளாக கூட்டத்திற்கு வந்தார்.

கூட்டம்
அவரை வரவேற்க ஆயிரக்கணக்கில் நிர்வாகிகள், தொண்டர்கள் வெளியே காத்து இருந்தனர். எடப்பாடி வந்த போது அவரை சூழ்ந்து கொண்டு நின்றனர். முக்கியமாக பெண் நிர்வாகிகள் பலர் எடப்பாடியை சூழ்ந்து கொண்டு சென்றனர். அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். முதலில் காரில் இருந்து இறங்கிய போது எடப்பாடி கொஞ்சம் டென்ஷனாக இருந்தார். அதன்பின் தொண்டர்களை பார்த்ததும் உற்சாகமாகி சந்தோஷமாக சிரித்தபடி அனைவரிடமும் பூங்கொத்துகளை வாங்கினார். எடப்பாடி உள்ளே வரும்போதே அவரை சூழ்ந்து கொண்ட தொண்டர்கள் சிலர் அவரை நகர விடாமல் நின்றனர்.

சுற்றி நின்றனர்
எடப்பாடியை சுற்றி நின்று கொண்டு அவருக்கு வணக்கம் வைத்தனர். இதனால் எடப்பாடி உள்ளே வருவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு இருந்த மூத்த நிர்வாகிகள் சிலர் தொண்டர்களை பார்த்து ஏய்.. ஏய்.. அவரை உள்ளே விடுங்கள்.. நேரம் ஆகிறது என்று கூறினார்கள். இதையடுத்தே தொண்டர்கள் நகர்ந்து சென்று எடப்பாடிக்கு வழிவிட்டனர். தற்போது மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் ஓ பன்னீர்செல்வத்தை அதிமுகவில் மீண்டும் சேர்க்கவே கூடாது என்று மாவட்ட செயலாளர்கள் பலர் எடப்பாடியிடம் வலியுறுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications