அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. 15 காளைகளை பிடித்த ரஞ்சித்குமாருக்கு முதல் பரிசு வழங்கிய முதல்வர்
Subscribe to Oneindia Tamil
சென்னை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளை மற்றும் வீரருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.
உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. இந்த ஜல்லிகட்டில் மொத்தம், 729 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 7 குழுக்களாக மொத்தம், 697 வீரர்கள் பங்கேற்றனர்.

இதில் சிறந்த வீரராக 15 காளைகளை பிடித்த ரஞ்சித் குமார் தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 10 காளைகளை அடக்கிய கார்த்திக் இரண்டாவது இடம் பிடித்தார். 9 காளைகளை பிடித்த அஜய் மூன்றாவது இடம் பிடித்தார்.
சிறந்த காளையாக பரம்பப்பட்டி சென்னியம்மன் காளை தேர்வு செய்யப்பட்டது.
இதையடுத்து, இன்று, 15 காளைகளை அடக்கிய ரஞ்சித் குமாருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதல் பரிசு வழங்கினார்.












Click it and Unblock the Notifications