Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாநாடு முடிச்சி நிம்மதியாக இருந்த.. எடப்பாடிக்கு போன கெட்ட செய்தி.. பெரிய சிக்கலாமே? ஸ்டாலின் செக்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுரையில் அதிமுகவின் பிரம்மாண்ட மாநாட்டை நடத்திவிட்டு நிம்மதியாக இருந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று தற்போது சென்றுள்ளது.

மதுரையில் சமீபத்தில் அதிமுக சார்பாக பிரம்மாண்ட மாநாடு நடத்தப்பட்டது. அதிமுகவை கைப்பற்றியதை கொண்டாடும் விதமாக, அதிமுக தன்னுடைய கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்பதை காட்டும் விதமாக எடப்பாடி பழனிசாமி மிகப்பெரிய மாநாடு ஒன்றை நடத்தினார்.

 Edappadi Palanisamy is in huge shock even after the successfull AIADMK Madurai meeting

இந்த மதுரை மாநாட்டில் கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் கலந்து கொண்டனர். 3 லட்சத்திற்கும் மேல் கூட்டம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 1 - ஒன்றரை லட்சம் பேர் இதில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மதுரை மாநாட்டை முடித்துவிட்டு.. அந்த மகிழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி இருப்பார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாநாடு நடந்த சுவடே தெரியாத அளவிற்கு அவர் வருத்தத்தில் இருக்கிறாராம்.

காரணம் கோடநாடு கேஸ். இந்த வழக்கில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் அளித்த பரபரப்பு பேட்டிதான் இந்த பரபரப்பிற்கு காரணம் என்கிறார்கள் அதிமுகவில் விவரம் அறிந்தவர்கள், எனது தம்பி உயிரிழந்தது விபத்து அல்ல; திட்டமிட்ட கொலை.. எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என்று ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.,

கோடநாடு பங்களாவில் இருந்து எனது தம்பி கனகராஜ் 5 பெரிய பைகளை எடுத்து வந்தார்; அதன் உள்ளே ஏராளமான சொத்து ஆவணங்கள் இருந்தன; எடப்பாடி பழனிசாமி கூறியதன் பேரில் எடுத்து வந்ததாக என்னிடம் தெரிவித்தார். கனகராஜ் உயிரிழந்தது விபத்து அல்ல; திட்டமிட்ட கொலை என்று ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது வழக்கில் பெரிய திருப்பத்தை அவருக்கு எதிராக ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

என்ன கேஸ் இது?: தமிழ்நாட்டு அரசியலை அதிர வைத்து.. இப்படியெல்லாம் கூட கொலைகள் நடக்குமா என்று யோசிக்க வைத்த சம்பவம் என்றால் அது கோடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவம்தான். ஒரு கொள்ளை.. அதை செய்வதற்கு ஒரு கொலை.. அதை செய்தபின் கொள்ளை அடித்தவர்கள் எல்லோரும் வரிசையாக கொலை செய்யப்படுவது என்று அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் இந்தியாவையே உலுக்கின.

ஜெயலலிதா மரணத்திற்கு பின் கடந்த 2017 ஏப்ரல் 24ல் கோடநாட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தில் பல பொருட்கள், கோப்புகள் கொள்ளை அடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதில் எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் என்பவரும் கொள்ளையர்களால் கொல்லப்பட்டார். அதன்பின் கொள்ளையில் குற்றஞ்சாட்டப்பட்ட பலர் அடுத்தடுத்து மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். இந்த கோடநாடு மர்ம மரணங்கள் மற்றும் கொள்ளை பற்றி தமிழ்நாடு போலீஸ் 5 தனிப்படை அமைத்து விசாரித்து வந்தது.

 Edappadi Palanisamy is in huge shock even after the successfull AIADMK Madurai meeting

இந்த கொள்ளை மற்றும் கொலை சம்பவத்திற்கு பின் சரியாக 4 நாட்கள் கழித்து கொள்ளையில் ஈடுப்பட்ட கனகராஜ் விபத்து ஒன்றில் மர்மமாக மரணம் அடைந்தார். இவர் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர். அதேபோல் இன்னொரு முக்கிய குற்றவாளி சயான் குடும்பத்தினர் விபத்தில் கொல்லப்பட்டனர். இதில் சயான் நூலிழையில் உயிர் தப்பினார்.

இந்த வழக்கில் சயான் நேரடியாக எடப்பாடி பழனிசாமி மீதே குற்றஞ்சாட்டி இருக்கிறார். எடப்பாடி பழனிசாமியை நோக்கி இவர் தனது கையை திருப்பி உள்ளார். எடப்பாடி பழனிச்சாமி சொல்லித்தான் கனகராஜ் இந்த திட்டங்களை தீட்டியதாக சயான் போலீசில் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. இப்படி வழக்கில் போகஸ் எடப்பாடி பக்கம் திரும்பி உள்ளது. இந்த நிலையில்தான் வழக்கு தற்போது சிபிசிஐடி வசம் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+