Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமைச்சரவைக்கு வந்த உடனே.. புதிய அமைச்சர் போட்ட அதிரடி.. எடப்பாடிக்கு மெசேஜ்.. யாருன்னு பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: வக்ஃப் வாரிய சட்டத் திருத்தம் தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்திற்கு பல இஸ்லாமிய அமைப்புகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தவறான செய்தியை தெரிவித்துள்ளார் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு சிறுபான்மைத்துறை வெளியிட்டுள்ள செய்திகள், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட செய்தியில், ஒன்றிய அரசு உத்தேசித்துள்ள வக்ஃப் ஊரிய சட்டத் திருத்தம் தொடர்பான நாடாளுமன்றக் கூட்டுக்குழு கூட்டத்திற்கு பல இஸ்லாமிய அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்காத அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதாக, உண்மைக்கு புறம்பான செய்திகளை தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு, வக்ஃப் சட்டத்தினை திருத்துவதற்கு, வக்ஃப் வாரிய சட்டத் திருத்த முன்வரைவினை (The Wagt Amendment B. 2024), மாநிலங்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளை கலந்து ஆலோசிக்காமல் மக்களவையில் அறிமுகம் செய்தது. 1இச்சட்ட திருத்த முன்வரைவு நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்விற்கு அனுப்பப்பட்டது (Referred to Joint Parliamentary Committee).

edappadi palanisamy dmk m k stalin

வக்ஃப் திருத்தச் சட்டம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் (Joint Parliamentary Committee) கருத்துக் கேட்கும் கூட்டம் 30.09.2024 இன்று சென்னையில் நடத்தப்படுவது குறித்து மக்களவை செயலகம் மாநில அரசுக்கு தெரிவித்தது. ஒன்றிய அரசின் சிறுபான்மையினர் அமைச்சகம் (Ministry of Minority Affairs) இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்தது. இக்கூட்டத்தில் மாநில அரசு பிரதிநிதிகள் வக்ஃப் வாரியம், மாநில சிறுபான்மையினர் ஆணையம்.

இதர சம்பந்தப்பட்ட அமைப்புகள், திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் பிரதிநிதிகள். பார் கவுன்சில் பிரதிநிதிகள், வழக்குரைஞர்கள், முத்தவல்லி மற்றும் உலமாக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தனர். இது தவிர இதர பங்கேற்பாளர்களாக மக்களவை செயலகத்தின் அனுமதி பெற்று விவசாயிகளின் பிரதிநிதிகள், பல்வேறு மிய அமைப்புகளின் பிரதிநிதிகள். பொது நல அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை குழுவிடம் தெரிவித்தனர்.

சென்னையில் கருத்து கேட்பு கூட்டம் நடத்துவதற்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளித்தது. எனவே மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர். ஒருசில இஸ்லாமிய அமைப்புகளை அழைக்காமல் அரசு புறக்கணித்தது என்று கூறுவது உண்மைக்கு மாறானது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அமைச்சரவை மாற்றம்: பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே தமிழ்நாடு அமைச்சரவை நேற்று முதல்நாள் மாற்றம் செய்யப்பட்டது.

செந்தில் பாலாஜி உள்பட 4 பேர் நாளை அமைச்சர்களாக சேர்க்கப்படும் நிலையில் மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே ராமச்சந்திரன் ஆகியோர் தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்யப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் மஸ்தான் வசம் இருந்த சிறுபான்மையினர் துறை சா.மு.நாசருக்கு வழங்கப்பட்டு உள்ளது.

நாசர் அமைச்சரவைக்கு வந்து வெளியிட்ட முதல் செய்தி குறிப்பே எடப்பாடியை தாக்கி வெளியாகி உள்ளது. எடப்பாடி குறிப்பிட்ட தவறான செய்திக்கு விளக்கமாக இந்த செய்தி வெளியாகி உள்ளது.

சட்டம் சொல்வது என்ன? முன்னதாக பெரும் பரபரப்பு.. எதிர்ப்புகளுக்கு இடையே வக்பு வாரியத்தின் அதிகாரங்களைக் குறைக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு லோக்சபாவில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. வக்ஃப் சட்டம், 1995ல் திருத்தம் கொண்டுவரும் புதிய மசோதாவை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் தாக்கல் செய்தார். பொதுவாக ஒரு சட்டத்தில் திருத்தங்களை செய்தால் ஒன்று, இரண்டு திருத்தங்களை செய்வார்கள். அதிகபட்சம் 10 திருத்தங்கள் கூட செய்யப்படுவது வழக்கம்.

ஆனால் 40 க்கும் மேற்பட்ட திருத்தங்களுடன், வக்ஃப் வாரியங்களை நிர்வகிக்கும் சட்டமான வக்ஃப் சட்டத்தில் உள்ள பல ஷரத்துகளை ரத்து செய்ய இன்று தாக்கல் செய்யப்பட்ட மசோதா முன்மொழிந்துள்ளது. இஸ்லாமிய பெண்கள் மற்றும் முஸ்லீம் அல்லாதவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வது உட்பட, பல மாற்றங்களை இந்த சட்டத்தில் செய்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+