பாயிண்ட்! திருப்பி அனுப்பிட்டாங்கள்ல.. “எடப்பாடி தனிக்கட்சி தொடங்கப்போறார்” வைத்திலிங்கம் ஒரே போடு!
சென்னை : தேர்தல் ஆணையம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளது. அதை திருப்பி அனுப்பியதாக பத்திரிகைகளில் செய்தி வருகிறது. அதை திருப்பி அனுப்பினால் எடப்பாடி பழனிசாமி அதிமுகவை விட்டு தனிக்கட்சி தொடங்கப் போகிறார் என்று அர்த்தம். அதிமுகவில் இருப்பதற்கு அவர்களுக்கு தகுதி இல்லை என்று தெரிவித்துள்ளார் ஓபிஎஸ் அணியின் இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்.
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அனுப்பிய கடிதத்தை அதிமுக அலுவலகம் திருப்பி அனுப்பியுள்ளது. தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட பதவிகளில் யாரும் இல்லை எனக்கூறி அக்கடிதத்தை அதிமுக நிர்வாகிகள் திருப்பி அனுப்பி வைத்தனர்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டு அனுப்பிய கடிதத்தை பெற எடப்பாடி பழனிசாமி தரப்பு மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், அதைக் குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமி தனிக்கட்சி தொடங்கப்போவதாக கூறியுள்ளார் வைத்திலிங்கம்.

அதிமுகவுக்கு அழைப்பு
அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றைத் தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ், ஈபிஎஸ் இரு அணிகளாகப் பிரிந்துள்ளனர். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் தான் தான் என எடப்பாடியும் ஒருங்கிணைப்பாளர் நான் தான் என ஓ.பன்னீர்செல்வமும் கூறி வருகின்றனர். அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாக்களிக்க தேர்தல் ஆணையம் வடிவமைத்த ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து விளக்கம் அளிக்க அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்திருந்தது.

ஓபிஎஸ் - ஈபிஎஸ்
ஏற்கனவே ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி விவாதிக்க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என குறிப்பிட்டு மத்திய சட்ட ஆணையம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓபிஎஸ் தரப்பு, சட்ட ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியதோடு, மாநில தேர்தல் அதிகாரியிடமும் புகார் அளித்தது. இதனையடுத்து, தேர்தல் ஆணையம் ரிமோட் வோட்டிங் பற்றிய விளக்கக் கூட்டத்திற்காக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டு கடிதம் அனுப்பியது. இதனை ஓபிஎஸ் தரப்பு வரவேற்றது.

திருப்பி அனுப்பிய ஈபிஎஸ் டீம்
இந்தக் கடிதம் அதிமுக தலைமை அலுவலகத்தில் கொடுக்கப்பட்டது. அப்போது தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட பதவிகளில் யாரும் இல்லை எனக் கூறி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அனுப்பிய கடிதத்தை அதிமுக தலைமை அலுவலக நிர்வாகிகள் பெற்றுக்கொள்ள மறுத்து திருப்பி அனுப்பியுள்ளனர். தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பெற்றுக்கொள்ள மறுத்து திருப்பி அனுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈபிஎஸ் தரப்பு பங்கேற்காது?
இந்தநிலையில் இது தொடர்பாக விளக்கம் அளித்த தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு டெல்லியில் இருந்து இந்திய தேர்தல் ஆணையம் கொடுத்த ஆவணங்களின் படியே அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பெயர் போட்டு ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது எனத் தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தை ஈபிஎஸ் தரப்பு நிராகரித்துள்ளதால் தேர்தல் ஆணையத்தின் ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி தரப்பு பங்கேற்காது எனக் கூறப்படுகிறது.

வைத்திலிங்கம்
இதுஒருபுறம் இருக்க, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்துபிட்டார். தற்போது ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கம் ஆகியோரே இருக்கின்றனர் என ஓபிஎஸ் தரப்பு கூறி வருகிறது. இந்நிலையில் இன்று தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அதிமுக (ஒபிஎஸ் அணி) அலுவலகத்தில்வைத்திலிங்கத்தை கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

எடப்பாடி தனிக்கட்சி
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வைத்திலிங்கம், "இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பிய ஆவணங்களின்படி, தமிழக தேர்தல் ஆணையம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி ஆகியோருக்கு கடிதம் அனுப்பி உள்ளது. அதை திருப்பி அனுப்பியதாக பத்திரிகைகளில் செய்தி வருகிறது. அதை திருப்பி அனுப்பினால் எடப்பாடி பழனிசாமி அதிமுகவை விட்டு தனிக்கட்சி தொடங்கப் போகிறார். அதிமுகவில் இருப்பதற்கு அவர்களுக்கு தகுதி இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் விடுத்த சவால்
சமீபத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தனிக்கட்சி தொடங்க தயாரா என சவால் விடுத்துப் பேசி இருந்தார். அதற்கு எடப்பாடி தரப்பினர், அதிமுக எங்களிடம் தான் இருக்கிறது, ஓபிஎஸ் வேண்டுமானால் புதிதாக கட்சி தொடங்கட்டும் என பதிலடி கொடுத்திருந்தனர். இந்நிலையில், அதிமுகவுக்கு அனுப்பிய தேர்தல் ஆணைய கடிதத்தை திருப்பி அனுப்பி இருப்பதால், ஈபிஎஸ் தனிக்கட்சி தொடங்கப்போகிறார் என விமர்சித்துள்ளார் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே












Click it and Unblock the Notifications