ஓபிஎஸ்ஸுக்கு ‘பெரிய’ அடி.. ‘ஷார்ப்’ பாயிண்ட்டோடு ரெடியாகும் ஈபிஎஸ்.. இது மட்டும் நடந்தா.. அவ்ளோதான்!
சென்னை : ஓ.பன்னீர்செல்வத்துக்கு 'செக்' வைக்கும் வகையில் அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் எடப்பாடி பழனிசாமி அடுத்ததாக ஒரு முக்கியமான அஸ்திரத்தை ஏவ இருக்கிறாராம்.
உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தனக்கு ஆதரவான தீர்ப்பைப் பெற்ற எடப்பாடி பழனிசாமி, அதிமுக தலைமைக் கழகத்திற்கும் பிரவேசம் செய்தார்.
ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தை நாடியிருக்கும் நிலையில், எடப்பாடி தரப்பு கேவியட் மனுக்களை தாக்கல் செய்துவிட்டுக் காத்திருக்கிறது. எங்கு வேண்டுமானாலும் செல்லட்டும், பார்த்துக்கொள்ளலாம் என டிஃபன்ஸ் மோடில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆட்டத்துக்கு ஒரேயடியாக 'செக்' வைக்கும் வகையில், அவர் மீது இன்னொரு முக்கியமான வழக்கையும் தொடுக்க தயாராகி வருகிறாராம் ஈபிஎஸ்.

அதிமுகவில் அடுத்து
எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என ஐகோர்ட் இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து, அந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார் ஓபிஎஸ். முன்னதாக, எடப்பாடி பழனிசாமியும், தலைமை கழக நிர்வாகிகளும் கேவியட் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். மேலும், அதிமுகவை வசப்படுத்துவது தொடர்பாக, நீதிமன்றம் தாண்டி அடுத்தகட்ட நடவடிக்கைகளையும் ஓபிஎஸ் - ஈபிஎஸ் தரப்பினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மோதிப் பார்க்கும் ஓபிஎஸ்
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக நேற்று முன் தினம் எடப்பாடி பழனிசாமி, அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் சென்றார். இதற்கிடையே ஓ.பன்னீர்செல்வமும் விரைவில் தலைமை அலுவலகம் செல்ல முயற்சித்து வருகிறார். அதற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஜே.சி.டி.பிரபாகர் மனு அளித்தார். ஆனால், பாதுகாப்பு தரமறுத்துள்ளது காவல்துறை. அதைத் தொடர்ந்து டிஜிபி அலுவலகத்திலும் ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி மனு அளித்துள்ளார்.

சென்றே தீருவோம்
எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றுள்ளதால், தொண்டர்களுக்கு நம் பக்கம் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் நாமும் செல்ல வேண்டும் என ஓபிஎஸ் ஆலோசித்து முடிவெடுத்துள்ளார். ஓபிஎஸ் தான் ஒருங்கிணைப்பாளர், அதிமுக அலுவலகத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் எப்போது வேண்டுமானாலும் செல்வார். அலுவலகத்திற்கு செல்வதற்காக பாதுகாப்பு கேட்டோமே தவிர ஓபிஎஸ் கழகப் பணிகளை மேற்கொள்ள எப்போது வேண்டுமானாலும் உள்ளே செல்வார். யாராலும் தடுக்க முடியாது என நேற்று கூட ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்திருந்தார்.

செக் வைக்க திட்டம்
இதனால் உஷாராகியிருக்கும் எடப்பாடி பழனிசாமி தரப்பு, ஓபிஎஸ் டீமுக்கு செக் வைக்கும் வகையில் இன்னொரு ஷார்ப்பான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறதாம். அதாவது, அதிமுகவிற்கு ஓபிஎஸ் எந்த வகையிலும் சொந்தம் கொண்டாட முடியாது என்றும், அவர் கட்சியிலேயே இல்லை என்பதால், அதிமுக எனும் பெயரையே பயன்படுத்த முடியாது என்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர ஈபிஎஸ் டீம் திட்டமிட்டுள்ளதாம்.

ஈபிஎஸ் டீமின் கேம்
ஓபிஎஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இல்லாத நிலையில், அவர் தொடர்ந்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்று கூறி வருவது தவறானது. ஓபிஎஸ் அதிமுக தலைமைக் கழகம் வருவது சட்டவிரோதம். கட்சிக்கு தொடர்பில்லாத அவர் அதிமுக பெயரை பயன்படுத்துவது தவறு. அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஈபிஎஸ் டீம் நீதிமன்றத்தில் முறையிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்சியிலேயே இல்லை
ஓபிஎஸ் சொல்வது போல அவர் ஒருங்கிணைப்பாளர் எல்லாம் இல்லை. பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு வந்தபோதே, அவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டதும் செல்லும் என்றாகிவிட்டது. ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி குறித்து எந்த முடிவும் தெரிவிக்க விரும்பவில்லை, பிரதான வழக்கில் பார்த்துக்கொள்ளுங்கள் என நீதிபதி கூறியதன் மூலம் அந்த பதவி வழக்கு சர்ச்சையில் இருப்பதாக அர்த்தம். அதனால், அதனை ஓபிஎஸ் கிளெய்ம் செய்ய முடியாது என்கிறார்கள் ஈபிஎஸ் தரப்பினர்.

அடிமடியிலேயே
எடப்பாடி பழனிசாமி இந்த வழக்கைத் தொடர்ந்து, அதுவும் ஓபிஎஸ்ஸுக்கு எதிராக அமைந்தால், அலுவலகம் செல்வது மட்டுமல்ல, அஇஅதிமுக எனும் பெயரையே ஓபிஎஸ் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். வேறு பெயரில் போட்டி அதிமுகவைத்தான் ஓபிஎஸ் நடத்த வேண்டியிருக்கும். எனவே, இந்த நகர்வை நோக்கிச் செல்வதற்கான தீவிர ஆலோசனையில் ஈபிஎஸ் தரப்பு ஈடுபட்டு வருகிறதாம்.

தேர்தல் திட்டம்
விரைவில் தேர்தலை நடத்தி, எடப்பாடி பழனிசாமி நிரந்தர பொதுச் செயலாளர் ஆகவும் திட்டமிட்டு வருகிறார். 10 மா.செக்கள் வழிமொழியவும், முன்மொழியவும் வேண்டும் என்பதால், வேறு எவரும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தேர்தலில் போட்டியிட முடியாத சூழலே ஏற்படுத்தப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியை ஏகமனதாக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படுவார். அதற்கு எதிராக ஓபிஎஸ் வழக்கு தொடுப்பதிலும், ஈபிஎஸ் தொடரப்போகும் இந்த வழக்கு பாதிப்பை ஏற்படுத்தும்., நமக்குத்தான் வெற்றி என எடப்பாடி தரப்பு கணக்குப் போட்டுள்ளதாம்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications