Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புறவாசல் வழியாக ஆட்சிக்கு வந்த திமுக அரசு.. ஆலோசனைக்குப் பிறகு ‘அட்டாக்’ செய்த எடப்பாடி பழனிசாமி!

Subscribe to Oneindia Tamil

சென்னை : நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைத் தந்து புறவாசல் வழியாக ஆட்சிக்கு வந்த திமுக, மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திணறிக் கொண்டிருப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு முதன்முறையாக எடப்பாடி பழனிசாமி இன்று காலை அதிமுக தலைமை அலுவலகம் வந்தார்.

72 நாட்களுக்குப் பிறகு இன்று அதிமுக தலைமைக் கழகத்திற்குச் சென்ற எடப்பாடி பழனிசாமி, தனது ஆதரவு நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்நிலையில், தலைமைக் கழகத்திற்கு வருகை தந்து உற்சாக வரவேற்பு அளித்த நிர்வாகிகள், தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

மோதல்

மோதல்

அதிமுகவை கைப்பற்றுவதில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட கடும் மோதலுக்கு மத்தியில் ஜூலை 11ஆம் தேதி, எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஜூலை 11ஆம் தேதி தலைமை அலுவலக்த்தில் ஏற்பட்ட கலவரம் அதைத் தொடர்ந்து வழக்குகள் காரணமாக, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டு சுமார் இரண்டு மாதங்கள் ஆனாலும் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வராமலே இருந்தார்.

குனிந்து வணங்கிய ஈபிஎஸ்

குனிந்து வணங்கிய ஈபிஎஸ்

எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு முதன் முறையாக இன்று காலை 11 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகம் வந்தார். அதிமுக தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது திருஉருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அலுவலகத்திற்குள் செல்லும்போது குனிந்து வணங்கினார்.

குவிந்த ஆதரவாளர்கள்

குவிந்த ஆதரவாளர்கள்

இன்று காலை கட்சி தலைமை அலுவலகம் வந்த எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை, அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து கட்சி அலுவலகம் செல்லும் வரையிலும் சாலையின் இரண்டு பக்கமும் தொண்டர்கள் கூடி நின்று வரவேற்பு அளித்தனர். எடப்பாடி பழனிசாமி, தலைமைக் கழகத்திற்கு வந்தபோது, தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி, எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், அதிமுக தொண்டர்கள் ஆகியோர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

 ஈபிஎஸ் ஆலோசனை

ஈபிஎஸ் ஆலோசனை

கட்சி அலுவலகத்தின் உள்ளே சென்று, கடந்த ஜூலை 11ஆம் தேதி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள், கட்சி தொண்டர்களால் அடித்து நொறுக்கப்பட்ட இடங்களை எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து, அதிமுகவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஈபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

அறிக்கை வெளியிட்ட ஈபிஎஸ்

அறிக்கை வெளியிட்ட ஈபிஎஸ்

ஈபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்ற நான் இன்று அதிமுக தலைமைக் கழகத்திற்கு வருகை தந்தபோது, வருகை தந்து உற்சாகம் பொங்க வரவேற்று வாழ்த்து தெரிவித்த தலைமைக் கழக நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட செயலாளர்கள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள், தொண்டர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

புறவாசல் வழியாக

புறவாசல் வழியாக

மேலும், கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைத் தந்து புறவாசல் வழியாக ஆட்சிக்கு வந்த திமுக, மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திணறிக் கொண்டிருப்பதாகவும், தற்போதைய சூழலில் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி இருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஜெ. சபதம்

ஜெ. சபதம்

தொடர்ந்து, "எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அதிமுக மக்களுக்காகவே இயங்கும்" என்று சூளுரைத்த ஜெயலலிதாவின் சபதத்தை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. கழக நிர்வாகிகள், உடன்பிறப்புகளின் ஒத்துழைப்போடு சிறந்த முறையில் கட்சியை வழிநடத்தி அதிமுக ஆட்சி மலர்வதற்கு இரவு பகல் பாராமல் அயராது பணியாற்றுவேன்" என்றும் உறுதியளித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+