ஒன் மேன் ஆர்மி.. நானே செலவெல்லாம் பார்த்துக்கிறேன்.. அமித் ஷாவிடம் சொன்ன எடப்பாடி.. என்னாச்சு?
சென்னை: அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட 27 தொகுதிகளில் பல தொகுதிகள் திமுகவுடன் மோதுவதாக இருப்பதால் தமிழக பாஜகவினர் அதிர்ப்தியடைந்துள்ளனர். பியூஸ் கோயலிடமும், பி.எல்.சந்தோஷிடமும் இது குறித்து புகார்கள் வாசிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, கூட்டணி என்பது நமது வலிமையில் அதிமுகவும், அதிமுக வலிமையில் பாஜகவும் ஜெயிக்க வேண்டும். அது தான் தர்மம். ஆனால், இங்கு அது நடக்கவில்லை. அதனால் தொகுதிகளை மாத்தி வாங்க வேண்டும் என்கிற கோரஸ் எழுந்ததால்தான் இந்த புகார் வாசிப்பு என்கிறார்கள் கமலாலய தரப்பினர்.

இந்த பிரச்சனை ஒருபுறமிருக்க, தொகுதிகளை பாஜக தான் முடிவு செய்யும் என்கிற டெல்லியின் அழுத்தத்தை சாதுர்யமாக சாதித்து அதை அதிமுக தான் முடிவு செய்யும் என்று சத்தமில்லாமல் எடப்பாடி சாதித்ததில் ஒரு புது விசயம் இப்போது கிடைத்திருக்கிறது.
இது பற்றி அதிமுகவின் எடப்பாடிக்கு நெருக்கமானவர்களிடம் பல்ஸ் பார்த்த போது, '' அமித் சாவின் அழைப்பின் பேரில் எடப்பாடி டெல்லிக்கு கிளம்பிச் சென்றதை பார்த்து எங்களுக்கு சற்று பயம் தான். அதாவது, குறைந்தபட்சம் 100 தொகுதிகளில் தனது முடிவுகளுக்கேற்ப வேட்பாளர்கள் இருக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார் எடப்பாடி பழனிச்சாமி. அந்த வேட்பாளர்கள் களமிறக்க வேண்டுமானால் அவர்களுக் கான தொகுதிகளை அதிமுக தன் வசம் வைத்திருக்க வேண்டும். ஆனால், எடப்பாடியை கட்டுப்படுத்தி வரும் டெல்லியை சமாளித்து, அந்த தொகுதிகளை விட்டுக் கொடுக்காமல் பாதுகாக்க முடியுமா? என்கிற கேள்வி சீனியர்களுக்கு இருந்தது.
இந்த நிலையில், டெல்லிக்கு போன எடப்பாடி, அமித் சாவை சந்தித்தார். அப்போது நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு இறுதியில், இந்த முறை தேர்தல் செலவுக்கு பெரிய அளவில் பாஜக உதவ வேண்டும் என கோரிக்கை வைத்தார் எடப்பாடி. ஆனால், அமித் சா, கூட்டணிக்கு தலைமை நீங்கள் தானே ? அப்படித்தான் நீங்களும் சொல்லி வருகிறீர்கள். அப்படியானால் செலவுகளையும் நீங்கள் தான் ஏற்க வேண்டும் என சொல்லியுள்ளார்.
இந்த ஒரு பாயிண்ட் போதும் என நினைத்த எடப்பாடி, ஓ.கே. ஜி நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்றார். அப்போது, பாஜக தொகுதிகளையும் நீங்கள் தான் கவனித்துக் கொள்ள வேண்டும். அதற்கான பட்ஜெட்டை நாங்கள் அனுப்புகிறோம். அதனை நாங்கள் சொல்கிற நபரிடம் ஒப்படையுங்கள் என அமித் ஷா சொல்லியிருக்கிறார்.
ஆனால், எடப்பாடியோ, கூட்டணிக்கு நாங்கள் தானே தலைமை. அதனால், பாஜக தொகுதிகளுக்கான செலவுத் தொகையை உங்கள் தரப்பிடம் தருவதற்கு வாய்ப்பில்லை. நாங்களே செலவும் செய்கிறோம். தமிழக பாஜக தரப்பினர் மீது நம்பிக்கை குறைவாக இருக்கிறது. கடந்த காலங்களில் எங்களுக்கு கிடைத்த அனுபவம் இது என விளக்கியிருக்கிறார். அதன் பிறகு அமித் ஷா எதையும் வற்புறுத்தவில்லை.
இதனையடுத்தே, கூட்டணிக்கு தலைமை என்கிற அளவில், அனைத்தையும் ஒன் மேன் ஆர்மியாக நின்று பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கான சீட் ஷேரிங்கையும் தொகுதிகள் ஒதுக்கீட்டையும் ஏக தம்மில் முடித்தார் எடப்பாடி . கூட்டணிக்கு நீங்கள் தானே தலைமை என்ற அமித் சாவின் ஒற்றை வார்த்தையை வைத்து மொத்த அரசியலையும் செய்து முடித்து விட்டார் எடப்பாடி. இனி, தேர்தல் களத்தில் பாஜக வுக்கு செலவு செய்வதா? வேண்டாமா? என்பது களத்திற்கு எல்லோரும் வந்த பிறகு முடிவு செய்து கொள்ளலாம் என சொல்லிக் கொண்டிருக்கிறார் எடப்பாடி'' என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.
- சிறப்பு நிருபர் எழில்
-
GOAT படத்துல Traffic Police மாதிரி பேசிட்டு.. இது சினிமா இல்ல! மக்கள் பணி! அமைச்சரை விளாசிய அதிமுக! -
அதிமுக சிதறி சின்னாபின்னமாகிடுச்சு.. தவெகவில் இணைந்த கையோடு எடப்பாடியை வெளுத்த வெல்லமண்டி நடராஜன்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர் -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
உதிருது இரட்டை இலை! 4 இல்ல.. 10 பேர்! தவெகவுக்கு தாவும் 6 சமஉ.க்கள்? தனிப்பெரும்பான்மை நோக்கி விஜய் -
எடப்பாடிக்கு டிமிக்கி கொடுக்கும் 11 பேர்.. எஸ்கேப்பாகும் வேலுமணி.. அதிர்ச்சிக்கு ரெடியாகிறதா அதிமுக? -
ரெண்டு பேருமே பெரிய புள்ளி.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்! ரெடியான சண்முகம்! எடப்பாடிக்கு சிக்கல்! -
சிவி சண்முகம் எங்களுடன் தான் இருக்காரு.. அதிமுகவில் கருத்து வேறுபாடு சரியாகிவிட்டது.. எஸ்பி வேலுமணி! -
கீழ்தளத்தில் ராஜினாமா.. மேல்தளத்தில் இணைப்பு.. தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மை.. ஓ.எஸ்.மணியன்! -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
சிவி சண்முகத்துக்கு கடைசி சான்ஸ் இதுதான்! எடப்பாடியின் முன் மண்டியிடும் 14 பேர்! பின்னணி காரணம் என்ன -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications