சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"பூமழை தூவி.. ஊர்வலம் நடக்கிறது"! தொண்டர்கள் வெள்ளத்தில் மிதந்தபடி .. அதிமுக அலுவலகம் வந்த எடப்பாடி!

Google Oneindia Tamil News

சென்னை: 72 நாட்களுக்கு பின் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகை புரிந்தார். தொண்டர்கள் வெள்ளம் சூழ, பெரும் வரவேற்பிற்கு இடையில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக அலுவலகம் வந்தார்.

அதிமுகவில் உட்கட்சி மோதல் தீவிரமாக நடந்து வருகிறது. ஓ பன்னீர்செல்வம் அணிக்கும், எடப்பாடி பழனிசாமி அணிக்கும் இடையில் கடுமையான மோதல் நிலவி வருகிறது.

இதில் மொத்தம் இரண்டு வழக்கு தீர்ப்புகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வந்தன. முதல் வழக்கு அதிமுக அலுவலக சீல் வழக்கு தீர்ப்பு, அதிமுக பொதுக்குழு கடந்த ஜூலை 11ம் தேதி ஓ பன்னீர்செல்வம் எதிர்ப்பை மீறி நடந்தது. இந்த பொதுக்குழுவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஓ பன்னீர்செல்வம் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு தனது தொண்டர்களுடன் சென்று அமர்ந்து இருந்தார்.

அவர் அதிமுக அலுவலகம் செல்லும் வழியிலும், அதிமுக அலுவலகத்திற்கு வெளியிலும் அதிமுக நிர்வாகிகள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அதிமுகவில் எடப்பாடி, ஓபிஎஸ் அணியினர் மாறி மாறி தாக்கிக்கொண்டனர்.

இங்கே 10.. அங்கே 3.. கொளுத்திப்போட்ட எடப்பாடி! இங்கே 10.. அங்கே 3.. கொளுத்திப்போட்ட எடப்பாடி!

சீல்

சீல்

இந்த சண்டை கலவரமாக முடிந்ததாக அங்கு மிகப்பெரிய சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து வட்டாச்சியர் சார்பாக அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து ஓ பன்னீர்செல்வம் தரப்பும், எடப்பாடி தரப்பும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கில் கடந்த மாதம் 20ம் தேதி, அதிமுக அலுவலகத்தின் சீலை நீக்கி அதன் சாவிகளை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என் சதீஷ்குமார் உத்தரவிட்டார்.

வெற்றி

வெற்றி

இந்த வழக்கில் எடப்பாடி வெற்றிபெற்றாலும் அவர் தனியாக மட்டுமே அதிமுக அலுவலகம் செல்ல வேண்டும். தொண்டர்களோடு செல்ல கூடாது. தொண்டர்கள் 1 மாதம் கழித்துதான் அதிமுக அலுவலகம் செல்ல வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டனர். இதையடுத்து எடப்பாடி எப்போது வேண்டுமானாலும் அதிமுக அலுவலகம் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில்தான் அதிமுக பொதுக்குழு வழக்கில் உயர் நீதிமன்ற தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பு வந்தது.

தீர்ப்பு

தீர்ப்பு

உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஜெயசந்திரன் வழங்கிய தீர்ப்பில் ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பில் கூறியது. ஜூன் 23ம் தேதிக்கு முன் இருந்த நிலை தொடர வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதாவது ஜூலை 23ம் தேதி நடந்த பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லும். அந்த பொதுக்குழுவில் எந்த பதவியும் உருவாக்கப்படவில்லை, நீக்கப்படவில்லை. அது தொடரும் என்று அறிவிக்கப்பட்டது. இது அதிமுகவில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியது.

எடப்பாடி

எடப்பாடி

இது எடப்பாடிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. எடப்பாடி மீண்டும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் ஆனார். இதனால் அவர் அதிமுக அலுவலகம் செல்லாமல், சொந்த ஊருக்கு சென்றார். இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி உயர் நீதிமன்றத்தில் இரட்டை நீதிபதி அமர்வு முன் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது . பொதுக்குழு செல்லாது என்று தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் இந்த தீர்ப்பை வழங்கி உள்ளனர். இதன் மூலம் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றி

வெற்றி

இந்த வழக்கில் வெற்றிபெற்ற நிலையில்தான் இன்று அதிமுக தலைமை அலுவலகத்திற்கு எடப்பாடி பழனிசாமி இன்று வந்தார். 72 நாட்களுக்கு பின் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகை புரிந்தார். தொண்டர்கள் வெள்ளம் சூழ, பெரும் வரவேற்பிற்கு இடையில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக அலுவலகம் வந்தார்.
அங்கு ஜெயலலிதா, எம்ஜிஆர் சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதையை செய்ய உள்ளார். இதை முன்னிட்டு அங்கு அதிக அளவில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

மேல்முறையீடு

மேல்முறையீடு

இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுடன் அதிமுக அலுவலகம் செல்ல உள்ள நேரம் பார்த்து அதிமுக அலுவலக சாவியை எடப்பாடிக்கு கொடுத்ததற்கு எதிராக ஓபிஎஸ் மேல்முறையீடு செய்துள்ளார். உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். அதிமுக அலுவலக சாவி தனக்கே கொடுக்கப்பட வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கு இந்த வாரம் விசாரணைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Edappadi Palanisamy will go to AIADMK head office after winning Seal and General council case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X