சபாநாயகர் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி.. சட்டசபையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் பேசியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சபாநயகர் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அதிமுகவினர் சட்டசபையில் சுமார் 5 நிமிடத்திற்கும் மேலாக கடும் அமளியில் ஈடுபட்டதோடு, அதிமுகவினர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
சபாநாயகர் அப்பாவு தலைமையில், தமிழக சட்ட சபைக் கூட்டம் நேற்று தொடங்கியது. அக்டோபர் 17 ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு இக்கூட்டம் நடைபெறவுள்ளது. கூட்டத்தின் முதல் நாளான நேற்று மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அஞ்சலி மற்றும் கரூர் கூட்ட நெரிலில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு, மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதைத்தொடரந்து, இரண்டாவது நாள் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சார பரப்புரையின்போது கூட்ட நெரிசல் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சட்டசபையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தமிழக முதல்வர் ஸ்டாலின் கரூர் துயரச் சம்பவம் குறித்து விளக்கம் அளித்துப் பேசினார்.
தொடர்ந்து, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் பேசியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சபாநயகர் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அமைச்சர் பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று அதிமுகவினர் சட்டசபையில் கடும் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினரை இருக்கைகளில் சென்று அமர சபாநாயக் அறிவுறுத்தினார். ஆனாலும் தொடர்ந்து அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சட்டப் பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் அமலியில் ஈடுபட்டுள்ள நிலையில் அவைக் காவலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, அதிமுகவினர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
அரசுக்கு எதிராக முழக்கமிட்டபடி எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் சட்டசபையிலேயே அமர்ந்திருந்தனர். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எடப்பாடி பேசுவதற்கு முன்போ அவையை விட்டு வெளியேறினார்.
-
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
அதிகாலை 7 மணிக்குள் கள ஆய்வு பண்ணுங்க.. விஜய் அசத்தல்! மாநகராட்சி ஆணையர்களுக்கு அரசு உத்தரவு -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
அடித்து ஆடும் விஜய்! லஞ்சம் வாங்குனா காலி! சென்னை மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் -
விஜய் தலைமையில் நாளை முதல் அமைச்சரவை கூட்டம்.. ரெடியாகும் ஃபைல்ஸ்.. எடுக்கப்படும் முக்கிய முடிவு? -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்











Click it and Unblock the Notifications