ஆளுநருடன் ஓபிஎஸ்-இபிஎஸ் இன்று சந்திப்பு: கோடநாடு விவகாரம் குறித்து பேச்சு?
சென்னை: கோடநாடு எஸ்டேட் கொலை வழக்கில் விசாரணை மீண்டும் சூடுபிடித்துள்ள நிலையில், சென்னையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று சந்திக்கிறார்கள் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர்.
Recommended Video
ஆளுநர் மாளிகையில் இன்று காலை 11.30 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.
கோடநாடு வழக்கில் மீண்டும் விசாரணை தீவிரமாகியுள்ளது. அந்த வழக்கில் சாட்சியமாக உள்ள சயன் என்பவரிடம் நேற்று ஊட்டியில் 3 மணிநேரம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர்.

முக்கிய புள்ளி
இந்த விசாரணையின்போது, இந்த கொலைக்கு பின்னணியில் அதிமுகவை சேர்ந்த ஒரு முக்கிய புள்ளி இருப்பதாக அவர் தெரிவித்ததாகக் கூறப்பட்ட.து இது தொடர்பாக இன்று காலை ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில் சட்டசபைக்குள் இந்தப் பிரச்சினையைக் கிளப்பியது அதிமுக தரப்பு. பொய் வழக்கு போட்டு, அதிமுக தலைவர்களை சிக்க வைக்க முயற்சி செய்வதாக அவர்கள் குற்றம் சாட்டினர் .

தன்னை சிக்க வைக்க முயல்வதாக எடப்பாடி பேட்டி
சட்டசபைக்கு வெளியே வந்து பேட்டியளித்த எடப்பாடிபழனிசாமி, இந்த வழக்கில் தன்னை சிக்கவைப்பதற்கு திமுக அரசு முயற்சி செய்வதாக நேரடியாக குற்றம் சாட்டினார். மேலும் இதை கண்டித்து இரண்டு நாட்களுக்கு சட்டசபையை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது.

ஸ்டாலின் பேச்சு
அதேநேரம் சட்டசபைக்குள் பேசிய முதல்வர் முக ஸ்டாலின், கோடநாடு எஸ்டேட் விவகாரம் பற்றி விசாரணை நடத்தி தண்டனை பெற்று தரப்படும் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தோம் . தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று அதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. நாங்கள் தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற தொடங்கினால் அவர்களின் வெளிநடப்பு செய்கிறார்கள். தங்கள் மீதான குற்றத்தை அவர்களே ஒப்புக் கொள்வது போல இருக்கிறது. எங்க அப்பா குதிருக்குள் இல்லை என்ற பழமொழியை நிரூபிப்பது போல அதிமுக வழக்கை எதிர்க்கிறது, என்று குற்றம்சாட்டினார்.

ஆளுநரை சந்திக்கும் இபிஎஸ், ஓபிஎஸ்
இந்த நிலையில்தான், இன்று காலை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து சந்திக்க உள்ளனர். கோடநாடு விவகாரத்தில் அதிமுக தலைவர்களை சிக்க வைக்க முயற்சி நடைபெறுகிறது என்று அவர்கள், குற்றம் சாட்ட இருப்பதாக கூறப்படுகிறது.

சோதனைகள் பற்றி புகார்
மேலும் சமீபத்தில் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, எம்ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தியிருப்பது போன்ற விவகாரங்கள் பற்றி ஆளுநரிடம் அதிமுக தலைவர்கள் முறையிட உள்ளதாக கூறப்படுகிறது.

ஆளுநர் மாளிகையில் அரசியல் மையம்
அதிமுக ஆளும் கட்சியாக இருக்கும்போது அதன் அமைச்சர்கள் மீது பெரிய ஊழல் குற்றச்சாட்டுகளை பட்டியலாக தயாரித்து ஆளுநரிடம் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் உள்ளிட்டோர் திமுக தரப்பில் சென்று வழங்கியிருந்தனர். இப்போது திமுக ஆளுங்கட்சியாக உள்ள நிலையில், அதிமுக ஆளுநர் மாளிகையை நோக்கி செல்கிறது. அரசியலில் என்னவெல்லாம் மாற்றங்கள் நடக்கிறது பாருங்கள்.
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications