எடப்பாடி பிரதமர் ஆக சான்ஸ் இருக்கு என சொன்ன ராஜேந்திர பாலாஜி.. ஓபிஎஸ் கொடுத்த ரியாக்ஷன் இதுதான்
சென்னை: எடப்பாடி பிரதமர் ஆகவும் சான்ஸ் இருக்கு என சொன்ன அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது குறித்து முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்திடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு ஓபிஎஸ் அளித்த பதிலை பார்க்கலாம்.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அண்மையில் அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசுகையில், எடப்பாடி பழனிசாமியே கூட இந்திய பிரதமராக வர வாய்ப்பு இருப்பதாக கூறினார். மேலும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம், புதுவை என 40க்கு 40 தொகுதிகளிலும் அதிமுகவை வெற்றிபெற வைக்க வேண்டும் என்றும், யார் பிரதமர் என்பதை எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யும் வகையில் பெரும் வெற்றியை கொடுக்க வேண்டும்.

சூழ்நிலை வந்தால் எடப்பாடி பழனிசாமியே கூட இந்திய பிரதமராக வர வாய்ப்பு உள்ளது" என்று பேசினார். ராஜேந்திர பாலாஜியின் இந்த பேச்சு குறித்து அண்ணாமலையிடம் கேட்ட போது, ராஜேந்திர பாலாஜி கூறியதற்கு சிரிப்புதான் என் பதில்" என்றார். பின்னர் இது குறித்தும் பேசிய ராஜேந்திர பாலாஜி தனது கருத்தை எல்லோரும் ஜோக் அடிப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி பிரதமராக எப்படி வாய்ப்பு உள்ளது என்றும் பேசியிருக்கிறார்.

இது தொடர்பாக ராஜேந்திர பாலாஜி கூறும் போது, எடப்பாடி பழனிசாமி அவர்கள் கூட்டணியில் விரல் காட்டுபவர்கள் பிரதமராக வர வேண்டும். அல்லது எடப்பாடி பழனிசாமியே பிரதமராக வர வேண்டும். நான் இதை சொன்னவுடன் சில பேர் நக்கல், ஜோக் என்று சொல்கிறார்கள்.. கர்நாடகாவின் தேவகவுடா பிரதமராக வரவில்லையா?, 10 எம்பிக்களை வைத்திருந்தவர்கள், ஒரு எம்பியை வைத்தவர்கள் கூட பிரதமராக வந்திருக்கிறார்கள்.
ஒரு எம்பியை வைத்திருக்கிறவர்கள் கூட பிரதமராக வரும்போது, 2 கோடி உறுப்பினர்களை வைத்திருக்கின்ற அதிமுக பொதுச்செயலாளர் ஏன் வர முடியாது" என்றார். முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் இந்த பேச்சு குறித்து முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்திடம் செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த ஓ பன்னீர் செல்வம், "இதெல்லாம் கேட்க கேட்க.. எங்களுக்கு எல்லாம் தலையே சுத்துகிறது" என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications