டைவெர்ட் ஆன அட்டென்ஷன்! திண்டுக்கல் சீனிவாசன் மட்டும் ஏன் இப்படி? நொந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி!
சென்னை: ஸ்டாலினை மீண்டும் முதலமைச்சராக்குவோம் எனப் பேசி அதிமுக ஆர்ப்பாட்டத்தின் மொத்த அட்டென்ஷனையும் டைவெர்ட் செய்ததால் மாஜி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது எடப்பாடி பழனிசாமிக்கு ஏக கோபமாம்.
காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஊடகங்கள் மற்றும் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக காய்கறி மாலைகளை அணிந்துகொண்டு அதிமுக முக்கியப் பிரமுகர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

அதேபோல் ஆர்ப்பாட்டத்திற்கு பெருமளவில் கூட்டத்தையும் சேர்த்திருந்தனர். இதனால் அதிமுக ஆர்ப்பாட்டம் தான் அன்றைய நாளின் தலைப்புச் செய்தியாக இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு அந்த எதிர்பார்ப்பை சுக்கு சுக்காக உடைத்தெறிந்தது. ஸ்டாலினை மீண்டும் முதலமைச்சராக்குவோம் என அவர் பேசிய வீடியோ கிளிப் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அதுமட்டுமல்ல நேற்றைய தினம் தமிழகமெங்கும் நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டங்களை திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு இருட்டடிப்பு செய்துவிட்டது. அதிமுக ஆர்ப்பாட்டம் குறித்த அட்டென்ஷன் மொத்தமாக டைவெர்ட் ஆனதால் திண்டுக்கல் சீனிவாசன் மீது மிகவும் நொந்து கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
திண்டுக்கல் சீனிவாசன் வாய் தவறி பேசினாரோ எப்படி பேசினாரோ தெரியவில்லை, மொத்தத்தில் எடப்பாடி பழனிசாமியின் அதிருப்தியையும், கோபத்தையும் சம்பாதித்திருக்கிறார். இதனிடையே மதுரையில் நடைபெறவுள்ள அதிமுக மாநாட்டில் திண்டுக்கல் சீனிவாசனுக்கு பேச வாய்ப்பு தருவதா வேண்டாமா என்ற யோசனையை எழச் செய்யும் வகையில் அவரது நேற்றைய பேச்சு அமைந்துவிட்டதாக கருதுகிறது அதிமுக தலைமை.
-
எங்களை தொட்டுருக்கவே கூடாது குழந்தை.. தவெகவுக்கு அதிமுக பைனல் வார்னிங் -
விஜய் பர்த்டே ஸ்பெஷல்: இரண்டு ‘விஜயபாஸ்கர்’களின் அதிரடி மூவ்! இத்தனை இடிக்கு எடப்பாடி தலை தாங்குமா? -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
Mithun: எடப்பாடி பழனிசாமி மகன் மிதுனை அரசியலுக்கு அழைப்பது தவறு! ராஜசத்யன் கடும் எதிர்ப்பு -
அதிமுக என்னும் மாபெரும் மதில் இடியும் போதும்.. மௌனம் காக்கும் எடப்பாடி.. ஒரு வார்த்தை பேசலையாமே! -
"எங்கே சென்றது சிங்கப்பெண் அதிரடி படை?" கும்மிடிப்பூண்டி வழக்கில் இபிஎஸ், அன்புமணி கண்டனம் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?"












Click it and Unblock the Notifications