ஒன்னுமே இல்லாத பட்ஜெட்.. எல்லாத்துக்கும் ஸ்டிக்கர் தான் ஒட்டியிருக்காங்க.. விளாசிய எடப்பாடி பழனிசாமி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பட்ஜெட்டில் எந்த ஒரு புதிய அறிவிப்பும் இல்லை. ஏற்கனவே இருந்த திட்டத்தை பெயர் மாற்றி ஸ்டிக்கர் ஒட்டி அறிவித்து இருக்கிறார்கள். ஆட்சி அமைந்து 85 நாட்கள் ஆகியும் இதுவரை ஒரு புதிய திட்டம் கூட அறிவிக்கவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார். மேலும், தவெக அளித்த வாக்குறுதிகள் என்ன ஆனது எனவும் எல்லாம் ஏமாற்று வேலை என்றும் கூறியுள்ளார்.

குறிப்பாக தவெக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத்தொகை 2,500 வழங்கப்படும் என சொன்னார்.. விலையில்லா 6 சிலிண்டர்கள் தருவோம் என்றார்.. முதியோர் உரிமைத்தொகை ரூ.3000 வழங்கப்படும் என்றார், பயிர்க்கடன் ரத்து என்ன ஆனது, ஆனால் எந்த ஒரு அறிவிப்புகளும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என எடப்பாடி கூறினார்.

Edappadi Palaniswami lashes out in TN Budget absolutely nothing in it they ve just slapped stickers on everything

தமிழகத்தில் விஜய் அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அமைச்சர் மரிய வில்சன் 2026- 2027 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்தார். பலரும் எதிர்பார்த்த மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500, பெண்களுக்கு பேருந்துகளில் இலவச பயணம் என எந்த ஒரு வாக்குறுதிகளையும் தவெக அரசு நிறைவேற்றவில்லை. இது குறித்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

புதிய அறிவிப்பு இல்லை - எடப்பாடி

பட்ஜெட்டில் எந்த புதிய அறிவிப்பும் இல்லை. ஏற்கனவே இருந்த திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டி அறிவித்து இருக்கிறார்கள். ஆட்சி பொறுப்பேற்று 85 நாட்கள் ஆகியுள்ளன. இந்த ஆட்சியில் எந்த ஒரு புதிய திட்டமும் அறிவிக்கப்படவில்லை. வெறும் வசனம் பேசியே ஓட்டிவிட்டார்கள். எல்லாவற்றிற்கும் ரீல்ஸ்தான் போடுகிறார்கள். ஆட்சி வருவதற்கு முன்பாக மக்கள் எதிர்பார்க்கும் திட்டம் நிறைவேற்றப்படும் என்று கூறினார்கள்.

ஆனால் பட்ஜெட்டில் எந்த ஒரு திட்டமும் முழுமையாக இல்லை. புதிய திட்டம் எதுவும் இல்லை. தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஆட்சிக்கு வந்ததும் மகளிர் உரிமைத்தொகை 2,500 வழங்கப்படும். ஆண்டுக்கு 6 சிலிண்டர் வழங்கப்படும்.. வேலையில்லா பட்டதாரிகளுக்கு 4 ஆயிரம் வழங்கப்படும் என்று பல அறிவிப்புகளை வெளியிட்டார்.

எப்படி சரி செய்ய போகிறார்கள்?

5 ஏக்கருக்கு கீழ் உள்ள விவசாயிகளுக்கு பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தது. ஆனால், எதுவும் அறிவிக்கப்படவில்லை. திட்டங்கள் எதுவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை. வருவாய் பற்றாக்குறை 55 ஆயிரம் கோடிக்கு மேல் என சொல்லியிருக்கிறார்கள். நிதி பற்றாக்குறை 1 லட்சம் கோடிக்கு மேல் சொல்லியிருக்கிறார்கள். இதை எல்லாம் எப்படி சரி செய்ய போகிறார்கள் இதற்கு இந்த அரசு எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.

ஏற்கனவே இருந்த திமுக அரசு ஒரு நிபுணர் குழு அமைப்பதாக கூறியது. பிறகு 5 ஆண்டுகளில் 5 லட்சம் கோடி கடன் வாங்கியது. தற்போதைய தவெக அரசும் அதே மாதிரி அறிவிப்பை வெளியிட்டு நிதி நிலமையை சரி செய்வோம் என்று கூறியுள்ளது. எப்படி சரி செய்ய முடியும். தவெக குறுகிய காலத்தில் 20 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளது. நாங்கள் கொரோனா காலத்தில் கூட சிறப்பாக செய்தோம். ஒரு ரூபாய் கூட அரசுக்கு வருவாய் வராத நேரத்திலும் பல திட்டங்களை நாங்கள் செயல்படுத்தினோம்" என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+