மக்களை சந்தோசப்படுத்தும் தேர்தல் அறிக்கை வருது.. 2026ல் அதிமுக ஆட்சி தான்! எடப்பாடி பழனிசாமி உறுதி
சேலம்: அடுத்த ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி பெறும் வகையில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் எனவும். அதிமுக ஆட்சி அமைந்ததது அனைத்து தரப்பு மக்களுக்குமான வசதிகள் செய்து தரப்படுமென அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியளித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திமுக மற்றும் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்தும் சுமார் 100க்கும் மேற்பட்டோர் அந்த கட்சிகளில் இருந்து இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.
கட்சியில் இணைந்தவர்ளுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி," பல்வேறு கட்சியில் இருந்து பலர் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். இன்று முதல் அதிமுக கட்சி உங்கள் கட்சி. இதை எண்ணி நீங்கள் செயல்பட வேண்டும்.

நான் சேலம் மாவட்டத்தில் இருக்கின்றவன். அதிமுக பொதுச்செயலாளர் என்ற பொறுப்பில் இருக்கின்ற இந்த காலகட்டத்தில் நீங்கள் அனைவரும் கழகத்தில் இணைந்தது பெரும் மகிழ்ச்சியை அடைய செய்துள்ளது.
2011ஆம் ஆண்டுக்கு முன்பு சேலம் மாவட்டம் எப்படி இருந்தது இதற்கு பின்பு சேலம் மாவட்டம் எப்படி இருந்தது என எண்ணி பார்க்க வேண்டும். சேலம் மாவட்டம் முழுவதும் சிறப்பான சாலை வசதி செய்து கொடுத்தோம்.
விவசாயிகளுக்கு தேவையான தடுப்பணைகள் கட்டி தரப்பட்டது. இதன் மூலம் நிலத்தடி நீர் மட்டும் அதிகரித்தது.
விவசாயிகளுக்கு பல்வேறு அடிப்படை வசதிகல் செய்து கொடுத்தோம். இந்தப் பகுதி அதிமுக ஆட்சியில் செழிப்பாக இருந்தது. தற்போது விசைத்தறி தொழில் நசிவடைந்து உள்ளது. இந்த ஆட்சி மீண்டும் எப்போது வரும் என்ன பொதுமக்கள் எண்ணி உள்ளனர். அதிமுக ஆட்சி மலரும் அப்போது மீண்டும் நெசவுத்தொழில் வளர்ச்சி அடைய வழிவகை செய்வோம். மரம் ஏறும் தொழிலாளர்கள் இறந்துவிட்டால் உரிய நிவாரணத் தொகை கிடைக்க அனைத்து வசதிகளும் செய்யப்படும்.
நாடார் சமுதாயம் உழைப்பாளிகள் . இதுபோல விசைத்தறி மற்றும் நெசவாளர்களும் உழைப்பாளிகள். அதிமுக ஆட்சி அமைந்ததும் இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். நூறு ஏரித் திட்டத்தில் நான்கு சட்டமன்ற தொகுதியில் உள்ளவர்கள் பயனடைகிறார்கள். நான்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள ஏரி குளங்கள் நிரம்ப அதிமுக ஆட்சியில் திட்டம் கொண்டுவரப்பட்டது. முதலில் 6 ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு வந்தோம். திருக ஆட்சி ஏற்பட்ட பிறகு இந்த பணி ஆமை வேகத்தில் நடந்தது. வேண்டுமென்றே திமுக அரசு விவசாயிகளை வஞ்சிக்கின்ற நோக்கத்தில் செயல்பட்டது.
அரசியல் காழ்புணர்ச்சி காரணத்தால் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதால் திட்டத்தை வேகப்படுத்தவில்லை. இந்தத் திட்டத்தை மெல்ல மெல்ல செயல்படுத்துகின்றனர். மீண்டும் அதிமுக ஆட்சி மலர்ந்ததும் உங்கள் அத்தனை பேர் துணையோடு இந்த திட்டம் நிறைவேற்றப்படும். அதிமுக ஆட்சி அடுத்த ஆண்டு மலரும் போது 100 ஏரி திட்டம் முழுவதும் நிறைவேற்றப்படும். விவசாயிகளுக்கு பொதுமக்களுக்கும் குடிநீர் கிடைக்க வழிவகை செய்வோம்.
இன்று மேட்டூர் அணை நிரம்பி உபரி நீர் வீணாக கடலில் கலக்கிறது. உண்மையில் இந்த அரசு நினைத்திருந்தால் இந்த திட்டத்தை ஒரே ஆண்டில் நிறைவேற்றியிருக்கலாம். அதிமுக ஆட்சியில் இருந்தபோது 75 சதவிகிதம் நடந்திருந்தது திமுக அரசு நினைத்திருந்தால் மீதி பணியை உடனே செய்து முடித்து இருக்கலாம். வேண்டும் என்றே திட்டமிட்டு பல்லாண்டு காலமாக இந்த பணியை தாமதப்படுத்தி இந்த பணி நிறைவு பெறாத காரணத்தால் பல ஏரிகள் இன்னும் வறண்டு கிடக்கிறது.
இப்படி மக்கள் விரோத ஆட்சியை அகற்ற வேண்டும். இது நமது எண்ணமாக இருக்க வேண்டும். குறிப்பாக கிராமத்தில் வாழும் மக்கள் விவசாயத்தை நம்பி உள்ளனர் .விவசாயிகளுக்கு பசுமை வீடு கட்டி தந்தோம் எதிர்காலத்தில் வீடு இல்லாமல் அதுவும் கூரை வீடு இல்லாத நிலையை ஏற்படுத்துவோம். இவர்களுக்கு
கான்கிரீட் வீ டுகள் கட்டித்தர அதிமுக ஆட்சி அமைந்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும். நிலமே இல்லை என்றாலும் கூட அரசு நிலம் வாங்கி கொடுத்து ஏழைகளுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் கான்கிரீட் வீடு கட்டித் தரப்படும்.
ஒரு வண்டிக்கு இரண்டு சக்கரம். இரண்டு சக்கரமும் சரியாக இருந்தால் தான் சரியாக செல்ல முடியும். அடுத்த ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியை பெரும் வகையில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். அனைத்து தர மக்களுக்கும் அனைத்து வசதிகளும் செய்து தருவோம்" என்றார்.












Click it and Unblock the Notifications