சட்டமன்றத்தில் மரபை மீறலாமா.. கொதித்த எடப்பாடி.. சட்டென பதிலடி கொடுத்த சபாநாயகர்
சென்னை: சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் தவெக ஆட்சி அமைப்பதற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. திமுக கூட்டணி கட்சிகளான சிபிஎம், சிபிஐ,
விசிக, ஐயூஎம்எல் ஆதரவுடன் தவெக ஆட்சியை பிடித்துள்ளது. தவெக 13ம் தேதிக்குள் (இன்று) சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் உத்தரவிட்டார். அதன்படி தவெக ஆட்சியை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. சட்டமன்றத்தில் மரபு மீறப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். இதற்கு சபாநாயகர் ஆதாரத்துடன் பதிலடி கொடுத்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என்று நான்கு முனை போட்டி நிலவியது. இதில் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. 108 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றிருந்தாலும் ஆட்சியமைப்பதற்கு தேவையான 118 தொகுதிகள் அவர்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் விஜய் முதல்வராக பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டது. சிபிஎம், சிபிஐ, விசிக, ஐயூஎம்எல் ஆதரவுடன் தவெக ஆட்சியை பிடித்துள்ளது.
மேலும் அதிமுகவில் வேலுமணி அணி மற்றும் அமமுக எம்எல்ஏ காமராஜ் ஆகியோர் தவெகவுக்கு ஆதரவளிப்பதாக கூறியுள்ளனர். ஆளுநரின் உத்தரவுப்படி தவெக ஆட்சிக்கான பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "சட்டமன்றத்தில் மரபுகள் கடைபிடிக்கப்பட்டு வந்தன. இன்றைய தினம் அந்த மரபுகளை கடைபிடிக்கவில்லை.
முதலமைச்சர் அரசியல் தீர்மானத்தை முன்மொழிந்துள்ளார். அதை வழிமொழிகிறேன் என்பதுதான் மரபு" என்று அவர் பேசி கொண்டிருக்கும்போது குறுக்கிட்ட சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர், "இதற்கு முன்பு நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பிலும் உறுப்பினர்கள் கருத்து சொல்வதற்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்று விளக்கமளித்தார். மீண்டும் தொடர்ந்த எடப்பாடி, கருத்து வேறுபாடுகள் எல்லா கட்சியிலும் இயல்பு. அதில் ஒரு தரப்பினருக்கு ஆதரவு வழங்குவது எப்படி நியாயமாக இருக்கும்.
குதிரை பேரம் நடந்துள்ளதாக வந்துள்ள புகார் கவலையளிக்கிறது. அதிமுகவில் வெற்றி பெற்றுள் 47 எம்எல்ஏக்களும் மக்கள் எங்கள் கட்சி, சின்னத்தை நம்பி வாக்களித்துள்ளனர். 64 சதவீதம் வாக்காளர்கள் ஆளுங்கட்சிக்கு எதிராக வாக்களித்துள்ளனர்" என்று பேசினார்.
-
கீழ்தளத்தில் ராஜினாமா.. மேல்தளத்தில் இணைப்பு.. தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மை.. ஓ.எஸ்.மணியன்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்..மீண்டும் இணையும் அதிமுக கோஷ்டிகள்! கரங்கள் இணையும்..மனங்கள் இணையுமா? -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
சென்னை சிறுவனுக்கு பாலியல் தொல்லை! கோட் சூட் போட்டோஷூட் நடத்தினால் மட்டும் போதாது! இபிஎஸ் அட்வைஸ் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்!












Click it and Unblock the Notifications