போலி மின்னஞ்சல் வழக்கு: யூடியூபர் மாரிதாசுக்கு டிச.27 வரை நீதிமன்ற காவல்.. எழும்பூர் கோர்ட் உத்தரவு
சென்னை: தனியார் தொலைக்காட்சி அளித்த போலி மின்னஞ்சல் தொடர்பான வழக்கில் மாரிதாஸை டிச. 27 வரை நீதிமன்ற காவலில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மரிதாஸ் என்ற நபர் தனது Maridhas answers என்ற யூடியூப் பக்கத்தில் தொடர்ந்து திமுகவை விமர்சித்து வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.
இந்தச் சூழலில், பாலகிருஷ்ணன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன் மரிதாஸை தமிழ்நாடு போலீசார் மதுரையில் வைத்து கைது செய்தனர்.

மாரிதாஸ் கைது
கடந்த சில நாட்களுக்கு முன்பு மாரிதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் காஷ்மீருடன் தமிழ்நாட்டை ஒப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டிருந்தார். இந்த ட்வீட்டை அவர் சிறிது நேரத்திலேயே டெலிட் செய்துவிட்டார். இருப்பினும் இந்த ட்வீட் குறித்து பாலகிருஷ்ணன் அளித்த புகாரின் அடிப்படையிலேயே மரிதாஸ் கைது செய்யப்பட்டார். வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியது, சமூக நல்லிணக்கத்திற்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மற்றொரு வழக்கிலும் கைது
இதையடுத்து அவர் தேனி உத்தமபாளையம் கிளைச் சிறையில் மாரிதாஸ் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் ஏற்கனவே அவரை வரும் டிசம்பர் 23ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையே தனியார் தொலைக்காட்சி அளித்த போலி மின்னஞ்சல் தொடர்பான வழக்கிலும் மரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வரும் டிச.27 வரை நீதிமன்ற காவல்
இந்நிலையில், இந்த மோசடி வழக்கில் யூடியூபர் மாரிதாஸ் சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த எழும்பூர் நீதிமன்ற நீதிபதி, வரும் டிச. 27ஆம் தேதி நீதிமன்ற காவலில் மாரிதாஸை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து காவலர்கள் மாரிதாஸை மீண்டும் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
Recommended Video

பாஜக எதிர்ப்பு
முன்னதாக மரிதாஸ் கைது செய்யப்பட்டதற்குத் தமிழ்நாடு பாஜக சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில், " தேசியவாதி ஒருவர், கருத்துச் சுதந்திரத்திற்கு அருகில் ஒரு கருத்தைச் சொல்லும் போது அதைத் தேவையின்றி பிரச்சினை ஆக்குகிறார்கள். மாரிதாஸ் பேசியதில் என்ன தவறு? மரிதாஸ் ஜாமீன் தொடர்பான வழக்கிலும் கூட இதைப் பேச்சு சுதந்திரம் என்றே நீதிபதி குறிப்பிட்டார். மாரிதாஸ் டெலிட் செய்த ட்வீட்டில் என்ன வார்த்தை தவறு? இதை விட மோசமான பல ட்வீட்கள் உள்ளன" என்று கூறியிருந்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications