ஒரு காலத்தில் அதிமுகவில் சக்தி வாய்ந்த தலைவர்கள்.. இப்போது திமுக அமைச்சர்கள்..அந்த 8 பேரின் பின்னணி
சென்னை: ஒரு காலத்தில் அதிமுகவில் சக்தி வாய்ந்த தலைவர்களாக இருந்த எ.வ.வேலு, எஸ்.ரகுபதி, ஈரோடு S. முத்துச்சாமி, அனிதா ராதாகிருஷ்ணன், ராஜகண்ணப்பன், செந்தில்பாலாஜி, சேகர் பாபு உள்பட 8 பேர் இப்போது திமுகவின் அமைச்சர்களாகி உள்ளனர். அவர்களின் பின்னணியை இப்போது பார்ப்போம்.
தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றார் கொண்டார். அவருடன், 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்த அமைச்சர்களில் எ.வ.வேலு, எஸ்.ரகுபதி, ராஜகண்ணப்பன், செந்தில் பாலாஜி, ஈரோடு S. முத்துச்சாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், அனிதா ராதாகிருஷ்ணன், சேகர் பாபு ஆகிய 8 பேர் பல்வேறு காலகட்டங்களில் அ.தி.மு.கவில் இருந்து தி.மு.கவுக்கு வந்தவர்கள் ஆவர்.

பொதுப்பணித்துறை
எ.வ.வேலுவை முதலில் பார்ப்போம். காரணம், முதல்வர் ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமான தலைவர்களில் முக்கியமானவர். இவருக்குத்தான் மிகவும் செல்வாக்கான அமைச்சர் பதவியான பொதுப்பணித்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் திமுகவின் முக்கியமான தலைவராக இருக்கும் எ.வ.வேலு, எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் அதாவது 1984-ம் ஆண்டு தண்டராம்பட்டு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் ஆவார். ஆனால் எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு ஜானகி அணியில் சேர்ந்த காரணத்தால் ஜெயலலிதா இவரை சேர்க்கவில்லை. ஆனால் 1996ல் திமுகவில் இணைந்த எ.வவேலு இன்று அக்கட்சியில் படிப்படியாக வளர்ந்து தமிழகத்தின் பொதுப்பணி துறை அமைச்சராகி உள்ளார்.

வருவாய் துறை அமைச்சர்
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சராகி உள்ள கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் குறித்து இப்போது பார்ப்போம்.இவர் எம்ஜிஆர் ஆட்சியில் கூட்டுறவு, பொதுப் பணித் துறை, மின்சாரத் துறை அமைச்சராகப் பதவிவகித்தார். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்று கட்சி இரண்டாகப் பிரிந்தபோது, ஜெயலலிதாவை ஆதரித்த 32 எம்.எல்.ஏ-க்களை விருதுநகருக்குக் கொண்டு வந்து, தனது ஸ்பின்னிங் மில்லில் தங்கவைத்தவர். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்தவர், ஒரு காலக்கட்டத்தில் ஓரம்கட்டப்பட்டார். அதனால் திமுகவில் இணைந்தவர் அங்கு முக்கிய தலைவரானார் இப்போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சராகி உள்ளார்.

வீட்டு வசதித்துறை
வீட்டு வசதித்துறை அமைச்சராகி உள்ள முத்துச்சாமி எம்ஜிஆர் ஆட்சியில் . 1977,80,84 ஆகிய மூன்று தேர்தல்களில் ஈரோடு தொகுதியில் வென்றவர். எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்தவர். . 1991 ம் ஆண்டு ஜெயலலிதா அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். ஆனால் பின்னாளில் அ.தி.மு.கவில் புறக்கணிப்பட்டதால் 2010-ல் தி.மு.கவில் இணைந்தார். இப்போது ஈரோடு மேற்குத் தொகுதியில் போட்டியிட்டு வென்று வீட்டு வசதித்துறை அமைச்சராகி உள்ளார்.

சட்டத்துறை அமைச்சர்
சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி. 1991ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர். பின்னர் தி.மு.கவில் இணைந்த இவர் திருமயம் சட்டமன்றத் தேர்தலில் வென்று சட்ட அமைச்சராகி உள்ளார்.

மின்சார துறை அமைச்சர்
தமிழகத்தின் மின்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் செந்தில் பாலாஜி ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தினகரன் அணியில் இருந்தார். ஆனால் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, 2018 டிசம்பரில் தி.மு.கவில் இணைந்தார். அரவக்குறிச்சி தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். தற்போது, கரூர் தொகுதியில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை வென்று எம்எல்ஏ ஆகி அமைச்சராகவும் மாறி உள்ளார்.

போக்குவரத்துறை
போக்குவரத்து துறை அமைச்சராகி உள்ள இராஜகண்ணப்பன் . ,1991ல் ஜெயலிதாவின் அமைச்சரவையில் பொதுப்பணித் துறை, மின்சாரத் துறை, நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்தவர். 2000-ம் ஆண்டில் அ.தி.மு.கவில் இருந்து விலகி, மக்கள் தமிழ் தேசம் எனும் கட்சியைத் தொடங்கினார். 2001 தேர்தலில் சேர்ந்தார். மீண்டும் 2009-ம் ஆண்டு திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் மீண்டும் சேர்ந்தார். ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு திமுகவில் இணைந்து இன்று அமைச்சராகி உள்ளார்.

மீனவர் நலத்துறை
தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராகி உள்ள அனிதா ராதாகிருஷ்ணன் 2001 2006 ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அதிமுகவின் முக்கியமான தலைவராக இருந்தவர். 2001-ல் கால்நடை வளம் மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை துறை அமைச்சராகப் பணியாற்றினார். 2010-ல் அதிமுக தலைமை மீது அதிருப்தி அடைந்த தி.மு.கவில் இணைந்தவர் இப்போது திமுக அரசில் மீன்வளத்துறை அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறை
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகி உள்ள சேகர் பாபு. ஜெயலலிதாவின் தீவிரமான விசுவாசி ஆவார். 2011 ல் திடீர் என்று கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால் திமுகவில் இணைந்தார். தி.மு.க சார்பில் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு வென்று இப்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகி உள்ளார்.
-
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
ஒன்றரை மாதத்தில் என்ன ஆகும்? அரியணை ஆட்டம்.. 2016 Vs 2021.. தமிழக தேர்தல் களத்தின் 'பவர்' ரிப்போர்ட் -
தனித்தொகுதிகள்.. கோட்டையை இழந்த அதிமுக... களம் வென்ற திமுக! 2016 vs 2021 vs 2026 என்ன நடக்கும்? -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
1989ல் திமுக இமாலய வெற்றி! 91இல் ஆட்சியைக் கலைத்த ஜெயலலிதா.. சிவாஜியின் புதுக்கட்சி எங்கே? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
இரட்டை இலை சின்னத்தில் ஆம்ஸ்ட்ராங் மனைவி போட்டி? எடப்பாடி போடும் அதிரடி பிளான்! -
இன்னும் 4 நாள் ஆகும்.. அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு காலதாமதம்.. அமித்ஷா – எடப்பாடி மீட்டிங் முடிவு -
பதவியைக் காக்க கருணாநிதியிடம் ஆதரவு கேட்ட ஜானகி? 1988இல் ஆட்சி கலைப்பு.. ஜெயலலிதா எடுத்த சபதம்? -
இது திமுக கோட்டை.. அதிமுகவுக்கு ஒத்துவராது.. சென்னையை கூட்டணி கட்சியிடம் தாரைவார்க்க தயாரான எடப்பாடி -
தொகுதிப் பங்கீடு என்னாச்சு? டெல்லிக்கு பறந்த எடப்பாடி பழனிசாமி.. நயினார் சொன்ன மேட்டர்!












Click it and Unblock the Notifications