தமிழக சட்டசபை தேர்தலில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில் 80 வயதுக்கு மேல் உள்ள முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குகள் அளிக்கலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உமேஷ் சின்ஹா கூறியுள்ளார். பீகாரில் அமல்படுத்தப்பட்ட தபால் வாக்குகள் திட்டம் இப்போது தமிழகத்திலும் அமல்படுத்தப்பட உள்ளதால் அரசியல் கட்சிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த பீகார் சட்டசபை தேர்தலில் 80 வயதுக்கும் மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்குகள் அளிக்கும் உரிமை அளிக்கப்பட்டது. இதன் மூலம் தேர்தல் பணியில் உள்ளவர்கள், ராணுவத்தினர், காவல்துறையினர் தவிர முதியவர்களுக்கும் தபால் வாக்குகள் அளிக்கும் உரிமை முதல் முறையாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த முறைவெற்றிகரமாக இருந்ததாக கூறி தமிழகம் உள்பட அனைத்து மாநில தேர்தலிலும் 80 வயதுக்கும் மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்குகள் முறையை அமல்படுத்த வேண்டும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.

தேர்தல் அதிகாரி
இந்த சூழலில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உமேஷ் சின்ஹா, தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில் 80 வயதுக்கும் மேற்பட்டவர்கள் மட்டும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்குகள் முறை அமல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். அத்துடன் ஒரு வாக்குச்சாவடிக்கு 1000 பேருக்கு மேல் இல்லாதவாறு வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் சாய்வு தளம், கழிவறை மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும் தேர்தல் அதிகாரி உமேஷ் சின்ஹா கூறினார்.

திமுக எதிர்ப்பு
இதற்கிடையே முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்குகள் அளிக்கும் தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு ஏற்கனவே திமுக தலைவர் முக ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியட்டிருந்தார். அவர் தனது அறிக்கையில், நடைமுறை சிக்கல்கள் உள்ளதாக பட்டியலிட்டார். அதன்படி,

வயது எப்படி நிர்ணயம்
தேர்தல் ஆணையம் சொல்லும் 'பீகார் மாடல்' தேர்தல் என்பது என்ன? பாஜக கூட்டணிக்கு ஆதரவாக, வாக்குப்பதிவில் சாதகமான சூழலை உருவாக்க, அம்மாநிலத் தேர்தலில் 'வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்கள்' என்ற புதிய வகை வாக்குப்பதிவுமுறை கண்டுபிடிக்கப்பட்டுத் திணிக்கப்பட்டது. மூத்த குடிமக்களும், மாற்றுத்திறனாளிகளும் இதில் அடங்குவார்கள். ஆனால், இவர்கள் குறித்த தனி வாக்காளர் பட்டியல் கிடையாது. வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் வயதும், வாக்காளரே தாமாகவே கொடுப்பதுதான். அதற்கு உரிய ஆவணங்களைச் சரிபார்த்து வாக்குப் பட்டியலில் வயது குறிப்பிடப்படுவதும் இல்லை.

விதிமுறை என்ன
அதைப் போல, தேர்தல் ஆணையம் ஒருவரை மாற்றுத்திறனாளி என்று எந்த வகையில் வகைப்படுத்துகிறது என்பதற்கான எவ்வித விதிமுறைகளும் வகுக்கப்படவில்லை. எல்லாவற்றையும் விட, யார் யாரெல்லாம் இப்படி வாக்களிக்கத் தகுதி படைத்தவர்கள் என்று முன்கூட்டியே தேர்தல் ஆணையம் ஒரு பட்டியலைத் தயார் செய்து அறிவிக்காது. இவ்வளவு குழப்பங்களும் குளறுபடிகளும் சந்தேகங்களும் நிறைந்த புதிய 'தபால் வாக்களிப்பு' முறையை அறிமுகப்படுத்தி; '80 வயதுக்கு மேற்பட்டோர் எல்லாம் மூத்த குடிமக்கள். அவர்கள் தபால் வாக்குகள் பதிவு செய்யலாம்' என்று தேர்தல் ஆணையம் கூறியிருப்பதாக கண்டித்திருந்தார்.

தபால் வாக்கு
திமுக மட்டுமின்றி பல்வேறு எதிர்க்கட்சிகள் தபால் வாக்குமுறை எதிர்த்தன. ஆனாலும் தேர்தல் ஆணையம் தமிழகத்தில் 80 வயதுக்கும் மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு நடைமுறை கொண்டுவரப்படும் என்று அறிவித்துள்ளது.
-
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications