சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் அதிகமான வாக்கு எங்கே.. குறைவான வாக்கு எங்கே.. 234 தொகுதிகளின் முழு நிலவரம்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 72.76 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
234 தொகுதிக்கும் வாக்கு சதவீதம் குறித்து இறுதி பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் நேற்று சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. பெரிய அளவில் வன்முறை சம்பவங்கள் எதுவும் இல்லாமல் அமைதியாகவே தேர்தல் நடந்து முடிந்தது.

இந்த தேர்தலில் 72.76 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எந்த தொகுதியில் எவ்வளவு சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது என்பது குறித்து தேர்தல் ஆணையம் பட்டியல் வெளியிட்டுள்ளது.

எடப்பாடி

எடப்பாடி

அந்த பட்டியிலில் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் 87.33 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது, இதேபோல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி போட்டியிட்ட, எடப்பாடி தொகுதியில் 85.6 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. அமைச்சர் சி.விஜயபாஸ்கர் போட்டியிட்ட புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் 85.43 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.,

மைலாப்பூர்

மைலாப்பூர்

தமிழகத்தில் குறைவான வாக்குப்பதிவு என்பது சென்னையில் தான் உள்ளது. சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் 55.52 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. தி.நகர், வேளச்சேரி, மைலாப்பூர், சைதாப்பேட்டையில் 55 முதல் 57% அளவிற்கே வாக்குப்பதிவு நடந்துள்ளதாக தேர்தல் ஆணையத்தில் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சோழிங்கநல்லூர், சேப்பாக்கம், துறைமுகம் உள்பட சென்னையின் பெரும்பாலான தொகுதிகளில் 60%க்கு கீழ் வாக்குப்பதிவு நடந்துள்ளது.

பென்னாகரம்

பென்னாகரம்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் 84.19 சதவீதமும், பாப்பிரெட்டிபட்டியில் 82.04 சதவீதமும், திருவண்ணாமலை மாவட்டம் செய்யூரில் 81.67 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளது. திருப்பூர் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் 82.06 சதவீமும், சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதியில் 83.14 சதவீதமும், ஓமலூரில் 83.33 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளது.

கோவை

கோவை

திருச்சி மேற்கு தொகுதியில் 67.02 சதவீதமும், திருச்சி தெற்கு தொகுதியில், 66.86 சதவீதமும். கோவை தெற்கு தொகுதியில் 60.72 சதவீதமும், கோவை வடக்கில் 59.08 சதவீதமும், தொண்டாமுத்தூரில் 71.04 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் 77.92 சதவீதமும், சேலம் மேற்கில் 71.9 சதவீதமும், சேலம் வடக்கில் 72.06 சதவீதமும், சேலம தெற்கில் 76 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளது.

மதுரை மேற்கு

மதுரை மேற்கு

ஆயிரம் விளக்கு தொகுதியில் 58.4 சதவீதமும், கொளத்தூரில் 60.52 சதவீதமும், எழும்பூரில் 59.29 சதவீதமும், அண்ணா நகரில் 57.02 சதவீதமும், விருகம்பாக்கத்தில் 58.23 சதவீதமும் காட்பாடியில் 74 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளது. வேலூரில் 69.14 சதவீதமும், மதுரை வடக்கில் 63.58 சதவீதமும், மதுரை மேற்கில் 65.15 சதவீதமும், மதுரை தெற்கில் 63.58 சதவீதமும், மதுரை மத்தியில் 61.21 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளது.

English summary
The Election Commission has officially announced that 72.76 per cent votes have been registered in the Assembly elections held in Tamil Nadu. The Election Commission has released the final vote percentage list of 234 constituencies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X