சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் மறுவாக்குப் பதிவு நடைபெறும் வாக்குச் சாவடிகள் இவைதான்.. வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் மறுவாக்குப் பதிவு நடைபெறும் வாக்குச் சாவடிகள் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

நாடு முழுவதும் ஏப்ரல் மாதம் 18-ஆம் தேதி 2-ஆம் கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. தேனி மாவட்டத்தை பொருத்தமட்டில் தேனி மக்களவைத் தொகுதி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம் சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது.

ELection Commission releases the names of the polling stations which are going to repoll

இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கோவையிலிருந்து 50 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேனி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

10 பெட்டிகளில் இருந்த வாக்குப் பதிவு இயந்திரங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டது. எனினும் இந்த விவகாரத்துக்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் தருமபுரி, திருவள்ளூர், கடலூர், ஈரோடு, தேனி ஆகிய இடங்களில் உள்ள 13 வாக்குச் சாவடிகளுக்கு மறுவாக்குப் பதிவு நடத்தப்படும் என தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார்.

இந்த நிலையில் மறுவாக்குப் பதிவு நடைபெறும் இடங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

திருவள்ளூரில் பூந்தமல்லி சட்டசபை தொகுதியில் மேட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் இருந்த 195-ஆவது வாக்குச் சாவடி

கர்ஜனை என கத்துகிறார் போர்ஜரி வீரர்... சீமான் குறித்து முரசொலியில் விமர்சனம் கர்ஜனை என கத்துகிறார் போர்ஜரி வீரர்... சீமான் குறித்து முரசொலியில் விமர்சனம்

தருமபுரி எம்பி தொகுதிக்குட்பட்ட 181, 182,192,193, 194, 195, 196, 197 ஆகிய 8 வாக்குச் சாவடிகள்.

கடலூர் தொகுதியில் பண்ருட்டியில் திருவதிகை நகராட்சி பள்ளியில் உள்ள 210-ஆவது வாக்குச் சாவடி.

ஈரோடு தொகுதியில் காங்கேயம் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் 248-ஆவது வாக்குச் சாவடி

தேனி தொகுதியில் ஆண்டிப்பட்டி பாலசமுத்திரம் அரசு பள்ளியில் 67-ஆவது வாக்குச் சாவடி, பெரியகுளம் தொகுதியில் உள்ள வடுகப்பட்டி, சங்கரநாராயணன் நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடி.

ஆகிய வாக்குச் சாவடிகளில் மீண்டும் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

English summary
Election Commission releases the list of booths which are going to face repoll in TN.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X