டாஸ்மாக்கில் மதுபான விற்பனைக்கு கட்டுப்பாடு.. குடிமகன்களுக்கு ஷாக்.. தேர்தலையொட்டி அதிரடி
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் டாஸ்மாக்கில் மது இருப்பு மற்றும் விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இது மதுபானம் குடிப்போருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. முறைகேடுகள், பிரச்சனைகள் இன்றி அமைதியான முறையில் தேர்தலை நடத்தி முடிக்கும் வகையில் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மே 4ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் தேதியானது கடந்த 15ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 15 முதல் தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன.

தேர்தலை முறைகேடுகள் இன்றி அமைதியாக நடத்தி முடிப்பதற்கான பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தில் 50,000க்கு மேல் ஆவணங்கள் இன்றி எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆவணங்கள் இன்றி ரூ.10 ஆயிரத்துக்கு மேலான பரிசு பொருட்கள், தங்கநகைகளை எடுத்து சென்றாலும் பறக்கும்படையினரால் பறிமுதல் செய்யப்படும்.
3 கட்டுப்பாடுகள்
இதன் அடுத்தககட்டமாக தான் தற்போது தமிழகத்தில் டாஸ்மாக்கில் மதுபானம் இருப்பு மற்றும் விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கட்டுப்பாடுகளை மாநிலத்தில் உள்ள 4,800 டாஸ்மாக் கடைகளும் பின்பற்றுகிறதா? என்பது தினமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சட்டசபை தேர்தலையொட்டி இதுதொடர்பாக 3 முக்கிய உத்தரவுகள் டாஸ்மாக்கிற்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
என்னென்ன கட்டுப்பாடுகள்?
* அரசியல் கட்சியினர் வழங்கும் டோக்கன் மற்றும் கூப்பன்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய கூடாது.
* ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளிலும் கடந்த ஆண்டு இதே தேதியில் இருந்த மதுபான இருப்பை விட 50 சதவீதத்துக்கு மேல் மதுபானம் இருப்பு வைக்க கூடாது.
* அதேபோல் இந்த மாதத்தில் மதுபான விற்பனையை 30 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். 30 சதவீதத்துக்கு மேல் விற்கப்படும் மதுபானம் மொத்த விற்பனையாகவும், 50 சதவீதத்துக்கு மேல் மதுபானம் இருப்பு வைத்தால் பதுக்கல் என்றும் எடுத்து கொள்ளப்படும் என்று வார்னிங் செய்யப்பட்டுள்ளது.
உத்தரவின் பின்னணி என்ன?
தமிழகத்தில் சட்டசபை தேர்தலையொட்டி வாக்காளர்களை கவரும் வகையில் மதுபானம் மொத்தம் மொத்தமாக வாங்கி செல்லப்படும். வாக்காளர்களுக்கு பணம், பொருட்களை கொடுப்பது சட்டப்படி குற்றவாகும். அதோடு தேர்தல் நடத்தை விதியை மீறும் செயலாகும்.
இந்நிலையில் தான் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபான விற்பனை மற்றும் மொத்த கொள்முதலில் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் தேர்தல் வேளையில் அதிகளவில் மதுபானம் வாங்கி குடிக்கலாம் என நினைக்கும் குடிமகன்களுக்கு இதன்மூலம் 'செக்' வைக்கப்பட்டுள்ளது.
பார்களுக்கும் வார்னிங்
இதுதொடர்பாக தற்போது டாஸ்மாக் நிர்வாகம் மாவட்ட மேலாளர்கள், சூப்பர்வைசர்களுடன் ஆய்வு கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த வரம்புகள் மீறப்படும்போது மாவட்ட மேலாளர் விளக்கம் கேட்டு வருகிறார். அதேபோல் மாநிலம் முழுவதும் பார்கள் இரவு 10 மணிக்கு மேலும், பகலில் அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்பு திறந்து விற்பனை செய் கூடாத என டாஸ்மாக் எச்சரித்துள்ளது.
இதனை மீறினால் பார்களின் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு, வைப்புத்தொகை வழங்கப்படாது. அதுமட்டுமின்ற வழக்குகள் பதிவு செய்யப்படும் என டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேவேளையில் டாஸ்மாக் விற்பனையாளர்கள் கூறும்போது மொத்தமாக மதுபானம் விற்பனை செய்ய வேண்டாம் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மொத்த விற்பனைக்கான வரையறை பற்றி தெளிவு எங்களுக்கு அளிக்கவில்லை என்றார்.
-
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications