Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Election Exclusive: தேற மாட்டார் ‘திண்டுக்கல்’ வேட்பாளர்.. ‘நத்தம்’ நிலைமை ரொம்ப மோசம்! உட்கட்சி உள்குத்து பாலிடிக்ஸ்!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: தேர்தல் நெருங்கி விட்ட நிலையில் ஒவ்வொரு கட்சியிலும் இருக்கும் முக்கிய தலைகள் தேர்தல் வேலைகளை தங்கள் தொகுதிகளில் தொடங்கி விட்டனர். ஆனால் தமிழகத்தின் மிகப்பெரிய மாவட்டமான திண்டுக்கலில் ஒரு முக்கிய கட்சியில் 'திண்டுக்கல்' மற்றும் 'நத்தம்' தொகுதி வேட்பாளர்கள் தங்கள் சொந்த நிர்வாகிகளாலே நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். அடுத்தடுத்து வெற்றி பெற்ற இந்த வேட்பாளர்கள் வரும் தேர்தலில் சிரமத்தை சந்திக்க போவது உறுதி என்கின்றனர் அவர்களது கட்சியினர்.

2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஆளும் கட்சியிலும் ஆண்ட கட்சியிலும் அமைச்சர்களாகவும் முன்னாள் அமைச்சர்களாகவும் இருந்தவர்கள், தங்கள் தொகுதியின் பக்கம் கவனத்தை செலுத்த ஆரம்பித்து இருக்கின்றனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வரை தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் செய்தாலும் தங்கள் சொந்த பகுதிகளை எப்போதும் கைக்குள்ளே வைத்திருப்பார்கள். ஆனால் தென் மாவட்டங்களில் அந்த நிலைமை சற்று வேறாக இருக்கும்.

TN Election Exclusive Tamil Nadu Assembly Election 2026 aiadmk

திண்டுக்கல் அரசியல்

நான்காண்டுகள் தொகுதிகளை கண்டுகொள்ளாமல் கடைசி நேரத்தில் தொகுதி மக்கள் மீது பாச மழை பொழிவது எம்எல்ஏக்களின் வழக்கம். தேர்தலில் தோற்றுப் போனவர்களும் நான்கு ஆண்டுகள் ஒதுங்கி இருந்து விட்டு தேர்தல் வரும் நேரத்தில் தொகுதி மக்கள் மீது திடீர் பாசம் காட்டுவார்கள். சில நேரங்களில் வெற்றி கிட்டினாலும் பல நேரங்களில் வாக்காளர்கள் தெளிவான முடிவெடுத்து அவர்களை வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். நான்காண்டுகள் கடக்கும். மீண்டும் தேர்தல் வரும். இதே காட்சிகள் அரங்கேறும்.

2026 சட்டமன்ற தேர்தல்

இது ஒரு புறம் இருந்தாலும் சொந்தக் கட்சி நிர்வாகிகளை மதிக்காவிட்டால் தேர்தல் நேரத்தில் பலத்த அடி வாங்குவது உறுதி தான். அப்படிப்பட்ட ஒரு சூழல் தான் திண்டுக்கல் மாவட்டத்தில் நிலவுகிறது. அதிமுகவின் தேர்தல் சின்னமான இரட்டை இலையை பெற்றுக் கொடுத்த இயக்கம், வேடசந்தூர் தொகுதியில் வெற்றி பெறுபவர்கள் தான் ஆட்சி அமைப்பார்கள் என்ற சென்டிமென்ட் கொண்ட மாவட்டம், கடந்த தேர்தலில் திமுகவுக்கு அதிக தொகுதிகளை கொடுத்த மாவட்டம் ( 4-3), திமுக - அதிமுகவில் முக்கிய புள்ளிகளான ஐ பெரியசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோரை கொண்ட மாவட்டம் என பல சிறப்புகள் அரசியலில் திண்டுக்கல்லுக்கு உண்டு.

'திண்டுக்கல்' வேட்பாளர்

இந்த நிலையில் தான் 'திண்டுக்கல்' மற்றும் 'நத்தம்' பகுதியைச் சேர்ந்த வேட்பாளர்கள் வரும் தேர்தலில் மிகப்பெரிய நெருக்கடியை எதிர்கொள்ளப் போகிறார்கள் என்கின்றனர் விவரம் அறிந்த அரசியல் கட்சியினர். என்ன ஏதென்று விசாரித்த போது தான் பல தகவல்கள் கிடைத்தது. திண்டுக்கல்லில் கடந்த முறை போட்டியிட்ட 'வேட்பாளர்' ஓரளவு வாக்குகளை பெற்றார். ஆனால் இந்த முறை மிகவும் மோசமான தோல்வியை சந்திக்க போகிறார் என்கின்றனர். காரணம் அந்த கட்சியின் ஒன்றியங்கள் 3ஆகப் பிரிக்கப்பட்டது. புதிதாக நியமனம் செய்யப்பட்டவர்கள் வேலை செய்யாத நிலையில், ஏற்கனவே இருப்பவர்கள் அதிருப்தியில் உள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

உட்கட்சி மோதல்

விசுவாசமானவர்கள் ஓரங்கட்டப்பட்டதும், வேலையே செய்யாதவர்கள் பதவிக்கு வரவழைக்கப்பட்டதும் அந்த 'திண்டுக்கல்' வேட்பாளரின் தோல்விக்கு காரணமாக இருக்கலாம் என்கின்றன. மேலும் நான்கு ஆண்டுகள் எங்கிருந்தார் என தெரியாமல் அரசியல் செய்து வந்த அவர் திடீரென தொகுதி மக்கள் மீது பாசம் வந்தது போல வலம் வரத் தொடங்கி இருக்கிறார். அவரை எங்கும் பார்க்காத மக்கள் தற்போது ஆச்சரியத்தில் இருக்கின்றனர். கூட்டணிகளும் மாறி இருக்கிறது. எதிர் வேட்பாளரும் வலுவான வேட்பாளராக களம் இறக்கப்படலாம் என்பதால் அந்த 'திண்டுக்கல்' வேட்பாளர் நிச்சயம் நெருக்கடியை எதிர்கொள்ளப் போவது உறுதி என்கின்றனர்.

'நத்தம்' தொகுதி

இதே போல 'நத்தம்' பகுதியில் நேருக்கு நேர் நின்ற வேட்பாளர்களில் ஒருவர் இந்த முறை கடும் சிக்கலை எதிர் கொள்ள வேண்டி இருக்கும் என்கின்றனர் அவரது ஆதரவாளர்களே. பாரம்பரியமான அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தாலும் கட்சியில் சக நிர்வாகிகளுக்கு உள்ளடி வேலை பார்த்ததால் இரு தரப்பினர் அவருக்கு எதிராக இருக்கின்றனர். கடந்த தேர்தல்களில் தன்னை ஒரு மிகப்பெரிய ஜாம்பவானாக காட்டிக் கொண்டதால் தோல்வியை சந்திக்க நேரிட்டது அந்த 'நத்தம் வேட்பாளருக்கு.. இந்த நிலையில் இந்த முறை எப்படியாவது ஜெயித்து விடலாம் என வெற்றி மிதப்பில் தொகுதிக்குள் வளம் வருகிறார் தேர்தல் வேலைகளையும் தொடங்கிவிட்டார்.

வேடசந்தூர் தேர்தல்

ஆனால் ஒன்றிய அளவிலான நிர்வாகிகள் வேலை செய்ய வேண்டுமே! போதாக்குறைக்கு அவரை பின்னுக்கு தள்ள வேண்டும் என சொந்த மாவட்டத்தில் இருக்கும் சில முக்கிய தலைவர்கள் உள்ளடி வேலை பார்த்து வரும் நிலையில், அவர் தேருவதும் கடினம் தான் என்கின்றனர். 'திண்டுக்கல்' 'நத்தம்' மட்டுமல்ல வேடசந்தூரிலும் இதே நிலைமைதான் தொகுதி பக்கமே எட்டிப் பார்க்காத 'வேடசந்தூர்' வேட்பாளர் தற்போது கடைசி காலத்தில் அதிரடியாக வலம் வரத் தொடங்கி இருக்கிறார். பதவியில் இருந்த போது தொகுதிக்குள் வராதவர் தேர்தல் நேரத்தில் தற்போது வரிந்து கொட்டிக் கொண்டு வலம் வருவது ஏன் என வாக்காளர்கள் மட்டுமல்லாது அவரது சொந்த கட்சியினரே பேசத் தொடங்கி இருக்கின்றனர். இப்படியாக திண்டுக்கல் மாவட்டத்தில் 'திண்டுக்கல்' 'நத்தம்' 'வேடசந்தூர்' வேட்பாளர்கள் பெறுவது சிரமம் தான் என்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+