Election Exclusive: மாப்ள அவரு தான்.. ஆனா சட்டை எங்களோடது! எடப்பாடியை நெருக்கும் பாஜக! அதகளமான அதிமுக.. என்னாச்சு?
சென்னை: அதிமுக கூட்டணியில் பாஜக இணைந்ததிலிருந்தே எடப்பாடி பழனிச்சாமிக்கு பல்வேறு மறைமுக நெருக்கடிகள் டெல்லி தலைமையால் கொடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு சீட்டு ஒதுக்கீடு, குறிப்பிட்ட தொகுதிகள் என அடுத்தடுத்து நெருக்கடி கொடுத்து வரும் பாஜக தற்போது ராஜ்யசபா சீட்டு விவகாரத்திலும் தலையிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜகவுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என அறிவித்த எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் கூட்டணி சேர்த்து இருக்கிறார். இதனால் அதிர்ச்சியில் சில கட்சிகள் வெளியேறி விட்டன. 2021 சட்டமன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் சேர்ந்து போட்டியிட்ட நிலையில், அதிமுக ஓரளவு கௌரவமான தொகுதிகளை பெற்றது.
அதற்கு பிறகு மக்களவைத் தேர்தலில் இந்த கூட்டணி உடைந்தது. அதற்கு அண்ணாமலை தான் காரணம் என சொல்லப்படுகிறது. தொடர்ந்து அதிமுக பாஜக கூட்டணி அவசியம் என கருதியை டெல்லி தலைமை நயினார் நாகேந்திரன் மூலம் காய்களை நகர்த்தியது.

அதிமுக பாஜக கூட்டணி
அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையோடு தமிழக பாஜ கஉடன் அதிமுக கூட்டணி அமைத்துக் கொண்டது. இந்த நிலையில் அதிமுக கூட்டணி பலமாக வேண்டும் என்றால் கூடுதலாக சில கட்சிகளை அழைத்து வர வேண்டும் என பாஜக விரும்பியது. டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா ஆகியோரை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என பாஜக வலியுறுத்திய நிலையில், டிடிவி தினகரனை மட்டும் கூட்டணியில் ஏற்றுக்கொண்டார் என சொல்லிவிட்டார்.
பாஜக
எடப்பாடி தொடர்ந்து பாமகவும் கூட்டணிக்குள் வந்துவிட்டது. இதற்கிடையே 60 சீட்டு வேண்டும் என பாஜக கேட்பதாக கோவில் தொகுதிகளை கேட்பதாகவும் சொல்லப்படுகிறது. அந்த தொகுதிகளில் எல்லாம் அதிமுக பலமாக இருப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து வருவதாக சொல்லப்படுகிறது. தற்போது கூடுதல் நெருக்கடியாக மாநிலங்களவை சீட்டு விவகாரத்திலும் டெல்லி தலைமை நேரடியாக தலையிட்டதாக சொல்கின்றனர்.
மாநிலங்களவை சீட்டு
மார்ச் மாதம் மாநிலங்களவை எம்பி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் 6 எம்பி பதவிகள் தமிழகத்தில் காலியாகிறது. நான்கு எம்பி சிட்டுகள் திமுகவுக்கு உறுதியாக கிடைக்கும் அதிமுகவுக்கு இரண்டு சீட்டுகள் கிடைக்கும். அதில் ஒன்றை பாமகவுக்கு தருவதாக ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி உறுதியளித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இரண்டாவது சீட்டை யாருக்கு தருவது என்பதுதான் எடப்பாடிக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி. அந்த ஒரு சீட்டால்தான் தேமுதிக கூட்டணிக்கு சென்று விட்டது.
டிடிவி தினகரன்
இதற்கிடையே ஏற்கனவே மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆன ஜிகே வாசன் அதனை எதிர்பார்க்கிறார். டிடிவி தினகரன் தேர்தலில் நிற்கப் போவதில்லை என அறிவித்திருக்கும் நிலையில் அவரது மனைவியை ஆண்டிப்பட்டி அல்லது தேனியில் நிறுத்தலாம் என சொல்லப்படுகிறது. மேலும் ராஜசபா சீட்டை குறி வைத்துதான் டிடிவி தினகரன் கை நகர்த்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது. ஜி கே வாசன், டிடிவி தினகரன் என இருவரும் சீட்டை கேட்கும் நிலையில் ஏற்கனவே எம்பியாக இருக்கும் தம்பிதுரை அந்த சீட்டை எதிர்பார்க்கிறார்.
ராஜ்யசபா சீட்டு
இதற்கிடையே ராஜ்யசபா சீட்டு விவகாரத்தில் எந்த முடிவும் எடுத்துவிட வேண்டாம் என நேரடியாக அமித்ஷாவை எடப்பாடி பழனிச்சாமி இடம் வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது. கூட்டணியில் இருக்கும் கட்சிகள் மாநிலங்களவை எம்பி சீட்டை எதிர்பார்க்கும் நிலையில் அதிமுகவுக்கு கொடுத்து விட்டால் கூட்டணி உடைபட வாய்ப்பு இருக்கிறது. எனவே, எதுவாக இருந்தாலும் பேச முடிவெடுத்துக் கொள்ளலாம் என சொன்னாராம். ஏற்கனவே கட்சி பாதி தனது கட்டுப்பாட்டில் இல்லை என எடப்பாடி பழனிச்சாமி புலம்பி வரும் நிலையில் பாஜகவின் அழுத்தத்தால் அவருக்கு மேலும் நெருக்கடி அதிகரித்துள்ளது என்கின்றனர்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications