Election Exclusive: அன்னைக்கே சொன்னாரே அன்புமணி.. திமுகவில் சேலம் அருள்? ஆதரவாளர்களுடன் ரகசிய ஆலோசனை! அப்போ ராமதாஸ்?
சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி அரசியலில் ஏற்படும் மாற்றங்கள் பல்வேறு கட்சிகளுக்குள் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், ராமதாஸ் - சசிகலா கூட்டணி அறிவிப்பைத் தொடர்ந்து, பாமக தரப்பில் உள்ள சில முக்கிய நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, சேலம் பாமக எம்எல்ஏ அருள் திமுகவில் இணையலாம் என்ற தகவல் தற்போது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியலில் இந்த முறை நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது. திமுக, அதிமுக, தவெக மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தலைமையில் கடும் போட்டி நிலவுகிறது. இதில் அதிமுக கூட்டணியில் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமக இடம் பெற்றுள்ளது.
அதே நேரத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பினர் தனி பாதையைத் தேர்வு செய்து பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முயற்சி மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சசிகலா பொதுச் செயலாளராக சேர்ந்திருக்கும் அஇபுதமமுக உடன் ராமதாஸ் கூட்டணி அமைத்ததாக அறிவித்தது பரபரப்பைக் கிளப்பியது.

ராமதாஸ் சசிகலா கூட்டணி
இந்த கூட்டணி தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த முடிவுக்கு பாமக கட்சிக்குள் உள்ள சில நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் முக்கியமாக, சேலம் மேற்கு தொகுதியைச் சேர்ந்த பாமக எம்எல்ஏ அருள். கடந்த காலங்களில் அன்புமணி ராமதாஸ் மீது விமர்சன நிலைப்பாட்டில் இருந்த அருள், ராமதாஸ் மீது நம்பிக்கை கொண்ட தீவிர ஆதரவாளராக கருதப்பட்டு வந்தார்.
சேலம் அருள்
ஆனால் சசிகலாவுடன் கூட்டணி அமைத்தது அவருக்கு விருப்பமில்லாத முடிவாக இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பேசிய அவர், சசிகலாவுடன் ராமதாஸ் கூட்டணி வைத்திருப்பதில் எனக்கோ, ஜி.கே. மணிக்கோ விருப்பமில்லை. கட்சியில் உள்ள பெரும்பாலான நிர்வாகிகளும் இதே கருத்தில் உள்ளனர். இந்த கூட்டணி குறித்து கட்சி மேலிடத்தில் நான் அதிருப்தி தெரிவித்துள்ளேன். இருப்பினும், ராமதாஸை விட்டு வேறு கட்சிக்கு செல்லும் எண்ணம் இல்லை. கடைசி வரை அவருடன் இருப்பேன்" என்று தெரிவித்திருந்தார்.
எம்எல்ஏ அருள் திமுகவில்?
இந்நிலையில், பரபரப்பு தகவல் ஒன்று சேலம் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதாவது, சசிகலாவுடன் ராமதாஸ் கூட்டணி வைத்திருப்பதால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, சேலம் பாமக எம்எல்ஏ அருள் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் வரும் திங்கட்கிழமை இணையக் கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ரகசிய ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
ரகசிய ஆலோசனை
மேலும், திமுகவில் இணைந்த பிறகு மீண்டும் சேலம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்திருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்த கோரிக்கையை திமுக தலைமை பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் உண்மையாகி, அருள் திமுகவில் இணைந்தால் அது ராமதாஸ் தரப்புக்கு ஒரு பெரிய பின்னடைவு என பார்க்கப்படுகிறது.
பாமக வாக்கு வங்கி
குறிப்பாக சேலம் மாவட்டத்தில் பாமக வாக்கு வங்கியில் இது தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்ற ராமதாஸ் - சசிகலா கூட்டணி அறிவிப்பைத் தொடர்ந்து உருவாகியுள்ள இந்த புதிய அரசியல் பரபரப்பு, தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளதற்கான இன்னொரு எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அருள் திமுக ஆதரவாளராக இருப்பதாகவும், பாமக பிரச்சினைக்கு அவர் தான் காரணம் என அன்புமணி ராமதாஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications