பட்டாபிராம், ஆவடி மின்சார ரயில்கள் நாளையும் நாளை மறுநாளும் ரத்து! ஏன் என்னாச்சு!
சென்னை: சென்னை கடற்கரையிலிருந்து பட்டாபிராமுக்கு செல்லும் மின்சார ரயிலும் அங்கிருந்து ஆவடிக்கு புறப்படும் மின்சார ரயிலும் நாளை வெள்ளிக்கிழமையும் நாளை மறுநாள் சனிக்கிழமையும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
சென்னை ரயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை கடற்கரையில் இருந்து பட்டாபிராமுக்கு இரவு 11.15 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், பட்டாபிராமில் இருந்து ஆவடிக்கு இரவு 11.55 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (சனிக்கிழமை) முழுவதுமாக ரத்து செய்யப்படும்.

பட்டாபிராமில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு (மூா் மாா்க்கெட் வளாகம்) அதிகாலை 3.20 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (சனிக்கிழமை) முழுவதுமாக ரத்து செய்யப்படும்.
இதற்கு பதிலாக பட்டாபிராமில் இருந்து சென்ட்ரலுக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமை அதிகாலை 3.50 மணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும். இதுபோல் ஆவடியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு அதிகாலை 3.50 மற்றும் அதிகாலை 4 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (சனிக்கிழமை) முழுவதுமாக ரத்து செய்யப்படும்.
பயணிகள் வசதிக்காக இந்த தேதிகளில் அதிகாலை 4 மற்றும் 4.05 மணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். மேலும், பட்டாபிராமில் இருந்து சென்னை கடற்கரைக்கு இரவு 10.25 மணிக்கு செல்லும் மின்சார ரெயில் நாளை (வெள்ளிக்கிழமை) , நாளை மறுநாள் ஆவடியுடன் நிறுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications