சிறையில் நடந்ததை கரூர் மதியழகன் சொன்னதும்! துக்கம் தொண்டையை அடைத்து கண்ணீரூடன் கட்டி அணைத்த விஜய்!
சென்னை: சென்னை பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்தில், அண்மையில் சிறையில் இருந்து வெளியே வந்த கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன், நகரச் செயலாளர் பவுன்ராஜ் ஆகியோர் தங்கள் குடும்பத்தினருடன் விஜய்யை சந்தித்து பேசினர். அப்போது விஜய் மதியழகனை கட்டி அணைத்து கண்ணீர் விட்டதாக சொல்லப்படுகிறது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27ஆம் தேதி தவெக சார்பில் பிரச்சார பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்துவிட்டனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தவெக மீதும் விஜய் மீதும் ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன. இதனால் கடந்த 27ஆம் தேதி கரூரில் இருந்து சென்னையில் உள்ள நீலாங்கரை வீட்டிற்கு சென்ற விஜய், கடந்த 16 நாட்களுக்கும் மேலாக எந்த நிகழ்விலும் கலந்து கொள்ளாமல் வீட்டிலேயே இருந்தார்.
இந்த கரூர் சம்பவத்தில் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் மூவரும் தலைமறைவானார்கள். அவர்களை தனிப்படை போலீஸ் தேடி வந்த நிலையில் மதியழகன் பிடிபட்டார். அவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக நகரச் செயலாளர் பவுன்ராஜையும் போலீஸார் கைது செய்தனர்.
இந்த நிலையில் கரூர் சம்பவம் தொடர்பாக ஹைகோர்ட் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தவெக சார்பில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பிலும் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து தவெக மாவட்டச் செயலாளர் மதியழகன், பவுன்ராஜ் ஆகியோர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
அது போல் இந்த தீர்ப்புக்கு பிறகு புஸ்ஸி ஆனந்தும் நிர்மல்குமாரும் வெளியே வந்தனர். இந்த நிலையில் மதியழகன், பவுன்ராஜ் ஆகியோர் தங்கள் குடும்பத்தினருடன் விஜய்யின் பனையூர் கட்சி அலுவலகத்தில் காத்திருந்தனர்.
அப்போது விஜய் அங்கு வந்தார். மதியழகனையும் பவுன்ராஜையும் கட்டி அணைத்து ஆறுதல் கூறினார். நடந்த சம்பவங்கள் குறித்து அவர்களிடம் கேட்டார். சிறையில் என்ன நடந்தது என்று மதியழகன் கண்ணீருடன் விஜய்யிடம் விளக்கினார்.
அப்போது விஜய், "எதையும் சமாளிப்போம், உண்மை வெளியே வரும், பயப்பட வேண்டாம். நான் இருக்கிறேன். நீங்கள் கரூரில் இருப்பதாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணையாக இருங்கள். அவர்களுக்கு என்ன தேவை என்றாலும் நீங்கள் என்னிடம் சொல்லுங்கள்" என விஜய் கேட்டுக் கொண்டாராம். தான் விரைவில் கரூர் வருவதாகவும் அவர்களிடம் விஜய் தெரிவித்தாராம். ஒரு கட்டத்தில் மதியழகனை கட்டி அணைந்து விஜய் கண்ணீர் விட்டதாகவும் சொல்லப்படுகிறது. அப்போது மதியழகனும் அவரது குடும்பத்தினரும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படவும் தவெக தலைமையில் ஆட்சி அமையவும் எத்தனை துன்பங்களையும் இந்த மாநில மக்களுக்காக பொருத்துக் கொள்ள தயாராக இருக்கிறோம் என்றனராம்.
-
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு!












Click it and Unblock the Notifications