கலெக்டராக இருக்க தகுதியற்றவர்.. நேரில் ஆஜராக வேண்டியிருக்கும்! தஞ்சாவூர் ஆட்சியருக்கு ஹைகோர்ட் கெடு
சென்னை: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் கோவில் குளங்கள், நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை 12 வாரங்களில் அகற்ற கோரி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆட்சியராக இருக்க தகுதியற்றவர் என்றும், ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் தஞ்சாவூர் ஆட்சியர் அக்டோபர் 28 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கோவில் குளங்களில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அங்கு பெரிதாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது போல் இல்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகளிடம், அரசு வழக்கறிஞர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் வழங்கிய கடிதத்தை காண்பித்தார். அந்த கடிதத்தை படித்து பார்த்த நீதிபதிகள், இந்த கடிதம் திடுக்கிட வைக்கக் கூடியதாக உள்ளது என்று அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
மேலும் மாற்று இடங்கள் வழங்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் தரப்பில் சொல்லப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதிகள் அவர் மாவட்ட ஆட்சியராக இருக்க தகுதியானவர் இல்லை என்பது தெளிவாகிறது என்ற கண்டனத்தையும் நீதிபதிகள் பதிவு செய்தனர்.
மேலும் கும்பகோணம் கோவில் குளங்கள் மற்றும் நீர் செல்லக்கூடிய பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் 12 வாரங்களில் அகற்ற வேண்டும் என்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் வரும் அக்டோபர் 28 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று கெடு விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications