நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு புதிய சிக்கல்.. அமலாக்கத்துறை அதிரடி உத்தரவு
சென்னை: போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா இருவரும் கடந்த ஜூன் மாதம் நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் இருவருக்கும் அடுத்த சிக்கல் ஏற்பட்டுள்ளது.நிபந்தனை ஜாமீனில் உள்ள இருவருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஸ்ரீகாந்த் வரும் 28 ம் தேதியும், கிருஷ்ணா வரும் 29ம் தேதியும் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் போதைப் பொருள் கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையை தடுக்கும் விதமாக தனிப்படை போலீசார் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அப்படித்தான் கடந்த ஜூன் 17-ம் தேதி இரவு ரோந்து சென்ற போது, சந்தேகத்தின்பேரில் இளைஞர் ஒருவரை பிடித்து நுங்கம்பாக்கம் போலீஸார் விசாரித்தனர். அவரது பையில் 11 கிராம் கொகைன் போதைப் பொருள் இருந்தது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த போலீஸார், இதை வைத்திருந்த சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சேர்ந்த பிரதீப் குமார் என்ற பிரடோவை (38) கைது செய்தார்கள்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில், அவருக்கு போதைப்பொருள் விநியோகித்ததாக மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவைச் சேர்ந்த ஜான் (38) என்பவரை கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கடந்த ஜூன் 18-ம் தேதி கைது செய்தனர். அவரை சென்னை அழைத்து வந்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர் யாருக்கெல்லாம் போதைப்பொருளை விநியோகம் செய்தார் என்று கூறினார். அந்த பட்டியலில் தமிழ் நடிகர் ஸ்ரீகாந்தும் இடம்பெற்றிருந்து.
இதையடுத்து நுங்கம்பாக்கம் போலீஸார் சந்தேகத்தின் பேரில் ஸ்ரீகாந்திற்கு ரத்த மாதிரி பரிசோதனை செய்தனர். அதனை தொடர்ந்து ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டில் கைதானார். அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ஸ்ரீகாந்த்தை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவை போலீசார் கைது செய்தனர். அவரையும் புழல் சிறையில் அடைத்தனர். இருவரும் சிறையில் இருந்து வந்த நிலையில், ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இருவரையும் நிபந்தனை ஜாமீனில் விடுவித்தது.
இந்நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகிய இருவருக்கும் அடுத்த சிக்கல் ஏற்பட்டுள்ளது.நிபந்தனை ஜாமீனில் உள்ள இருவருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஸ்ரீகாந்த் வரும் 28 ம் தேதியும், கிருஷ்ணா வரும் 29ம் தேதியும் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications