Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போதை பொருள் கடத்தல்.. ஜாபர் சாதிக்கின் பல கோடி சொத்துகளை முடக்கிய ED.. சொகுசு கார்களும் பறிமுதல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் பிரபல சினிமா பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். அமலாக்கத் துறையும் அவர் மீது போதைப்பொருள் வழக்கைப் பதிவு செய்துள்ள நிலையில், இப்போது அவரது ரூ.55 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் கடந்த பிப்ரவரி மாதம் மிகப்பெரிய அளவில் போதைப் பொருட்கள் பிடிபட்டது. மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய இந்த ரெய்டில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலான போதைப் பொருட்கள் பிடிபட்டதாகக் கூறப்பட்டது.

jaffer sadiq enforcement directorate

போதைப் பொருள்: டெல்லி கைலாஷ் பார்க் பகுதியில் இருந்த குடோனில் தான் இந்த ரெய்டு நடந்தது.. அதில் போதைப் பொருட்களைத் தயாரிக்கத் தேவையான மூலப் பொருட்களைப் பெரியளவில் அதிகாரிகள் கைப்பற்றினர். இந்தச் சம்பவம் தொடர்பாக முதலில் சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபுர், விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அப்போதே இந்த விவகாரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பிரபல தயாரிப்பாளர் ஒருவருக்குத் தொடர்பு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே கைதானவர்களிடம் போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பிரபல சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கிற்கு இதில் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த மார்ச் 9ஆம் தேதி மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் ஜாபர் சாதிக்கை கைது செய்தனர்.

ரூ. 55 சொத்துகள் பறிமுதல்: போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் ஒரு பக்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், அமலாக்கத் துறையும் சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் ஜாபர் சாதிக்கை கைது செய்தது. இதற்கிடையே அமலாக்கத் துறை அதிகாரிகள் இப்போது ஜாபர் சாதிக்கின் சொத்துகளை முடங்கியுள்ளனர். ஜேஎம்சி ரெசிடென்சி, சொகுசு பங்களா, ஜாகுவார், மெர்சிடிஸ் உள்ளிட்ட 7 கார்கள் ஆகிய முடக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.55 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை இப்போது பறிமுதல் செய்துள்ளது.

ரத்து செய்ய மனு: முன்னதாக சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் தன்னை சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக் கோரி ஜாஃபர் சாதிக் தாக்கல் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு நேற்று புதன்கிழமை விசாரணைக்கு வந்த நிலையில், இப்போது இரு தரப்பும் பல்வேறு வாதங்களை முன்வைத்தனர். காரசாரமாக விவாதம் நடந்த நிலையில், ஜாபர் சாதிக் மனுவுக்குப் பதிலளிக்கும்படி, அமலாக்கத்துறை, திகார் சிறை நிர்வாகத்திற்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+