ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத் துறை ரெய்டு! இதுவரை எந்தெந்த அமைச்சர்கள் வீட்டில் ED சோதனை?
சென்னை: திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் ரெய்டு நடந்து வரும் நிலையில் இதுவரை யார் யார் வீட்டில் எல்லாம் ரெய்டு நடந்தது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். அமலாக்கத் துறை ரெய்டில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவை குறித்தும் பார்க்கலாம்.
தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக உள்ளவர் ஐ.பெரியசாமி. திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர். இவர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று காலையிலேயே அமைச்சர் பெரியசாமியின் இல்லத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஐ.பெரியசாமிக்கு சொந்தமான சென்னை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் உள்ள நிறுவனங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று காலை முதலே சோதனை நடத்தி வருகிறார்கள்.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது தெரியவருகிறது. கடந்த திமுக ஆட்சியின் போது வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்த போது அப்போதைய முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த அதிகாரிகளுக்கு வீட்டுமனை ஒதுக்கீடு செய்ததாக ஐ.பெரியசாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்ட போதிலும் அண்மையில் அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இதனால் கிரீன்வேஸ் சாலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இதுவரை ஆளும் கட்சிக்குச் சொந்தமானவர்களின் வீடுகளில் எங்கெல்லாம் அமலாக்கத் துறை சோதனை நடந்தது என்பதை பார்க்கலாம்.
கடந்த ஜனவரி மாதம், திமுக பொதுச் செயலாளரும், நீர் வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் வீட்டில் இன்று அமலாக்கத் துறை ரெய்டு நடத்தப்பட்டது. வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள அமைச்சர் துரைமுருகனுக்கு சொந்தமான வீட்டில்தான் இந்த ரெய்டு நடந்தது.

அது போல் திமுக எம்பியும் துரைமுருகனின் மகனுமான கதிர் ஆனந்தின் வீட்டிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது. 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது வேலூரில் திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான இடத்தில் இருந்து ரூ 11 கோடி பணத்தை வருமானவரித் துறை பறிமுதல் செய்தது.
அது போல் கடந்த ஏப்ரல் மாதம், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, அவரது மகன் அருண் நேரு உள்ளிட்டோர் வீட்டில் அமலாக்கத் துறை ரெய்டு நடத்தப்பட்டது. கடந்த 2013 ஆம் ஆண்டு வங்கிகளில் பெறப்பட்ட கடன் தொகை தொடர்பாக சிபிஐ, கடந்த 2021 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. மேலும் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது. கிட்டதட்ட 12 ஆண்டுகள் கழித்து அமலாக்கத் துறை இந்த சோதனையை நடத்தியது.

அது போல் திமுக மூத்த தலைவரும் பொதுப் பணித் துறை , நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலுவின் திருவண்ணாமலை வீடு, அலுவலகங்களில் வருமான வரித் துறை சோதனை கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடத்தியது. அவருக்கு சொந்தமான கலை கல்லூரிகள், பொறியியல், மருத்துவக் கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள், ஹோட்டல்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகாரின் பேரில் சோதனை நடத்தப்பட்டது.
-
விசிகவுக்கு திருப்போரூர், பெரியகுளம் உள்பட 8 தொகுதிகள்! உத்தேச பட்டியல் வெளியீடு! -
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
SV Shekher: 'புதருக்கு பின்னால் ஏன் அந்த பொண்ணு போகணும்' சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் எஸ்வி சேகர் -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
திமுகவையும் விடாத பிரேமலதா.. 3 சிட்டிங் எம்எல்ஏக்களை கைவிட ஸ்டாலினுக்கு அழுத்தம்.. புது தலைவலி -
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
கோவையில் போட்டியிடும் செந்தில் பாலாஜி.. நிர்வாகிகளுக்குப் பறந்த மெசேஜ் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications