சென்னை விமானத்தில் நடுவானில்.. 25 வயது பெண்ணிடம் 45 வயது நபர் செய்த சேட்டை.. சிக்க வைத்த செல்போன்
சென்னை: சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு கர்நாடக மாநிலம் மங்களூருவில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. இதில் 86 பயணிகள் இருந்தனர். இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்த போது அதில் பயணம் செய்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணா தனது பக்கத்து இருக்கையில் கைக்குழந்தையுடன் அமர்ந்திருந்த இளம்பெண்ணை ரகசியமாக புகைப்படம் எடுத்ததாக போலீசில் ஒப்படைக்கப்பட்டார். அவரது பயணம் இறுதியில் ரத்து செய்யப்பட்டது.
விமானத்தில் வரும் பயணிகள் சேட்டைகள் செய்யாமல் அமைதியாக வருவது நல்லது. சிலர் தேவையற்ற செயல்களை செய்து சிக்கலில் சிக்கி கொள்கிறார்கள்.. சென்னைக்கு விமானத்தில் வருவோர், விமானத்தில் புகைப்பிடிப்பது, பக்கத்தில் உள்ளவர்களை தவறாக பார்ப்பது போன்ற தவறான செயல்களை சிக்கி போலீசிடம் சிக்குகிறார்கள். சிலர் இன்னும் மோசமாக அவசர கால வழிகளை திறக்க முயற்சிக்கும் சம்பவங்களும் நடந்தது உண்டு. சிலர் பெண்களிடம் அத்துமீறிய சம்பவங்களும் நடக்கிறது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

கர்நாடக மாநிலம் மங்களூருவில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று சம்பவம் நடந்த அன்று சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தது. இதில் 86 பயணிகள் இருந்திருக்கிறார்கள். இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்த போது அதில் பயணம் செய்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 45 வயதாகும் கோபாலகிருஷ்ணா என்பவர் தனது பக்கத்து இருக்கையில் கைக்குழந்தையுடன் அமர்ந்திருந்த 29 வயது இளம் பெண் ஒருவரை செல்போனில் ரகசியமாக புகைப்படம் எடுத்ததாக சொல்லப்படுகிறது.
இதைப்பார்த்த அந்த இளம் பெண் ஆத்திரமடைந்து, கோபாலகிருஷ்ணாவிடம் என்னை எதற்காக போட்டோ எடுத்தீர்கள்? என்று கேட்டு வாக்குவாதம் செய்தார். இதுபற்றி விமான பணிப்பெண்களிடமும் புகார் அளித்தார். கோபாலகிருஷ்ணாவிடம் விமான பணிப்பெண்கள் விசாரித்த போது, நான் புகைப்படம் எடுக்கவில்லை என்று மறுத்தார். இதை அடுத்து விமான பணிப்பெண்கள் கோபாலகிருஷ்ணாவின் செல்போனை வாங்கி ஆய்வு செய்தனர். அதில் இளம்பெண் மற்றும் கைக்குழந்தையின் புகைப்படங்கள் பல கோணங்களில் இருந்ததை கண்டனர்.
இதனால் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்திற்குள் பரபரப்பு எழுந்தது சக பயணிகள் ஆத்திரமடைந்து, கோபாலகிருஷ்ணாவை தாக்க முற்பட்டனர். ஆனால் விமான பணிப்பெண்கள், சக பயணிகளை சமாதானப்படுத்தினர். இது பற்றி விமான கேப்டனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் செல்போனை பறிமுதல் செய்து வைத்தனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு, விமானம் சென்னையில் தரை இறங்கியது. அப்போது கோபாலகிருஷ்ணாவை சென்னை விமான நிலைய போலீசில் பயணிகள் ஒப்படைத்தனர். பாதிக்கப்பட்ட இளம்பெண்ணும் காவல் நிலையம் சென்று, வாய் மொழியாக புகார் தெரிவித்தார்.
சென்னை விமான நிலைய போலீசார் நடந்த சம்பவங்களை புகாராக எழுதிக் கொடுக்கும்படி கூறி அனுப்பி வைத்தனர். இதற்கிடையே கோபாலகிருஷ்ணா, நான் தவறான நோக்கத்தில் புகைப்படம் எடுக்கவில்லை என்றும், அந்த குழந்தை அழகாக சிரித்ததால், குழந்தையின் சிரிப்பில் மயங்கி, செல்போனில் புகைப்படம் எடுத்ததாகவும் என்னை மன்னித்து அனுப்பி விடுங்கள் என்றும் கூறினார்.
மேலும் என்ஜினீயராக பணியாற்றும் தான் சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்வதற்காக, மங்களூருவில் இருந்து டிரான்சிட் பயணியாக வந்ததாக தெரிவித்தார். ஆனால் போலீசார் கோபாலகிருஷ்ணாவின் சிங்கப்பூர் பயணத்தையும் ரத்து செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications