சென்னையில் ஒரு "துபாய்" வெறும் 1 அடி தோண்டினாலே வருகிறது எண்ணெய்!.. வீடியோவை பாருங்க.. கொடுமை
சென்னை: எண்ணூரில் மழை வெள்ளத்திற்கு இடையே அடுத்தடுத்து இயற்கை பேரழிவுகள் ஏற்படும் நிலையில்.. தற்போது புதிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. சென்னையில் மழை வெள்ளத்திற்கு இடையே மணலி சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (சிபிசிஎல்) நிறுவனத்திலிருந்து மழை நீர் உடன் கச்சா எண்ணெய் வெளியேற்றப்பட்டது. இதில் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தானாக முன் வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.

சிபிசிஎல் எனப்படும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையிலிருந்து கச்சா எண்ணெய் வெளியாகியிருக்கிறது. இது வெள்ளத்தில் வந்து அங்கே இருக்கும் வீடுகளுக்குள் புகுந்தது. இந்த வெள்ளத்தில் மீன்களும் எண்ணெய் காரணமாக செத்து மிதந்து உள்ளன.
கடைசியில் பக்கிங்காம் கால்வாயில் கலந்து, கொசஸ்தலை ஆற்றின் வழியாக கடலில் கலந்திருக்கிறது. இதனால் இந்த பகுதியில் மீன் வளம் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இது தொடர்பாக செய்திகள் வெளியான நிலையில், தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தானாக முன் வந்து வழக்குப்பதிவு செய்திருக்கிறது.
மக்கள் அதிர்ச்சி: இந்த சம்பவம் அங்குள்ள மக்களின் உடல்நிலை, ஆரோக்கியத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக அங்கே மீன்கள் வளம், கடல் வளத்தையும் பாதித்து உள்ளது. அங்கே கடலில் கலந்த எண்ணெய் பெருமளவில் நீக்கப்பட்டாலும்.. இதை மொத்தமாக நீக்குவது என்பது நடக்கவே முடியாத காரியம் என்கிறார்கள் கடலியல் வல்லுனர்கள்.
வைரல்: இந்த நிலையில்தான் தற்போது புதிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி நெட்டுக்குப்பம் கடற்கரை, எண்ணூர் பகுதியில் இருந்து எண்ணெய் வெளியேறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது பீச் மணலை தோண்டும் நேரத்தில் திடீரென உள்ளே மணலில் இருந்து எண்ணெய் வெளியேறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடல் மணலை தோண்டினால் நண்டு வரும். சில இடங்களில் தண்ணீர் கூட வரும். ஆனால் இங்கிருந்து எண்ணெய் வருவது அதிர்ச்சி அளித்துள்ளது.
சுற்றுசூழல் ஆர்வலர் நித்யானந்தா ஜெயராமன் செய்துள்ள போஸ்டில், இங்கு தொழிற்சாலைகள் அமைக்கப்படுவதற்கு முன்பு வரை வெறும் 2 அடிக்கே இனிப்பு நீர் கிடைத்து வந்தது. ஆனால் தற்போது எண்ணூர் துபாய் போல் உள்ளது. 1 அடிக்கும் குறைவாக எண்ணெய் கிடைக்கிறது." எங்கள் குழந்தைகள் உங்களை மன்னிக்க மாட்டார்கள் நெட்டுக்குப்பம் கடற்கரை, எண்ணூர் பகுதியில் இந்த வீடியோ எடுக்கப்பட்டது, என்று அவர் தெரிவித்துள்ளார்.
எண்ணெய் கசிவு: இது போல இன்று சென்னையை அடுத்த எண்ணூர் கோரமண்டல் ரசாயன தொழிற்சாலையில் இருந்து, கடலுக்கடியில் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நள்ளிரவில் அமோனியம் வாயு கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு உண்டானது. எண்ணூர் சுற்றுவட்டார மக்கள் மூச்சுத்திணறலால் அவதி அடைந்தனர்.
அருகே இருந்த குடியிருப்புகளுக்குள் இந்த அமோனியம் வாயு பரவியது. கடலில் 2 கிமீ தூரத்தில் இருந்து கசிந்து வெளியேறிய வாயு.. ஊருக்குள் வந்தது. இதனால் ஊருக்குள் இருந் மக்கள் பலருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டது. மக்கள் பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர்.
"We used to get sweet water at 2 feet before the industries were set up here. Now, Ennore is like Dubai. We get oil at less than 1 feet." Our children will not forgive you @chennaipetro #SaveEnnoreCreek @CMOTamilnadu @supriyasahuias Video frm 24.12.23. Nettukuppam beach, Ennore pic.twitter.com/kRBxruTDK3
— NityanandJayaraman (@NityJayaraman) December 26, 2023
சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் உள்ள மக்கள் பலரும் இதனால் வேறு வழி இன்றி வீட்டை விட்டு ஓடினார்கள். பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். பதற்றம் அடையாமல் வீடுகளுக்கு செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தினர்.
மூச்சு திணறல்: எண்ணூர் ரசாயன தொழிற்சாலையில் அமோனியம் வாயு கசிவு ஏற்பட்டதால் மக்கள் பலரும் கடுமையாக மூச்சு திணறல் காரணமாக பாதிக்கப்பட்டனர். அங்கே உள்ள ரசாயன தொழிற்சாலையில் இருந்து திடீரென அமோனியம் வாயு வெளியேறியதால் அப்பகுதி மக்கள் பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.












Click it and Unblock the Notifications