சென்னை பிராட்வேயில் பிரம்மாண்ட பேருந்து நிலையம் + ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்.. கிடைத்தது கிரீன் சிக்னல்!
சென்னை: சென்னை பிராட்வே பேருந்து நிலையம், குறளகம் கட்டிடத்தை மறுசீரமைத்து போக்குவரத்து முனையம், வணிக வளாகம் அமைக்கும் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்துள்ளதால் விரைவில் கட்டுமான பணிகள் தொடங்க உள்ளது.
சென்னை பிராட்வேயில் செயல்பட்டு வந்த பேருந்து நிலையத்தை மறுகட்டமைப்பு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. தற்போதைய பேருந்து நிலையத்தில் இடநெருக்கடி அதிகரித்துவிட்டது. பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை. வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புற மயமாதலுக்கு ஏற்ப பிராட்வே பேருந்து நிலையத்தை புதுப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சி பிராட்வே பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு, மல்டி மாடல் போக்குவரத்து அம்சங்களுடன் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடிவு செய்துள்ளது. மேலும் மிகப்பெரிய வர்த்தக காம்ப்ளக்ஸ் ஒன்றும் கட்டப்படுகிறது. இது மொத்தம் பத்து மாடிகள் கொண்டதாக இருக்கும்.
இரண்டு பேஸ்மெண்ட்கள், பேருந்துகள் நிறுத்துவதற்கு இரண்டு தளங்கள், எஞ்சிய ஆறு தளங்களும் வர்த்தக பயன்பாட்டிற்காக கடைகள் உள்ளிட்டவை அமைக்கப்படும். பிராட்வே பேருந்து நிலையத்தை கட்டமைக்கும் பணியில் சென்னை மெட்ரோ அசெட் மேனேஜ்மென்ட் லிமிடெட் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இது சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகம் ஆகியவற்றின் கூட்டு நிறுவனம் ஆகும்.
முதன்மை திட்டம் 566.6 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும். ஒட்டுமொத்த மல்டி மாடல் காம்ப்ளக்ஸ் பேருந்து நிலைய திட்டத்திற்கான மதிப்பீடு 822 கோடி ரூபாய் . பேருந்து நிலையத்தை அடுத்த 24 மாதங்களிலும், வர்த்தக கட்டிடம் மற்றும் குறளகம் கட்டிடத்தை அடுத்த 30 மாதங்களிலும் கட்டி முடிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
பிராட்வே புதிய பேருந்து நிலையத்தில் மொத்தம் 73 பஸ் வேக்கள் இடம்பெறும். அதில் தரைத்தளத்தில் 36, முதல் தளத்தில் 23, குறளகம் இறுதி பகுதியில் 14 என அமைக்கப்படுகின்றன. பீக் ஹவர்களில் 3,000க்கும் மேற்பட்ட பயணிகளை கையாளும் அளவிற்கு மிகவும் பிரம்மாண்டமாக பேருந்து நிலையம் இருக்கும். 400-க்கும் மேற்பட்ட கார்கள், 1,100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை நிறுத்தும் அளவிற்கு வசதிகள் செய்து தரப்படும்.
புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் வசதிக்காக 30 எலிவேட்டர்கள், 27 எக்ஸ்குலேட்டர்கள் அமைக்கப்படும். இது தவிர பயணிகள் நடை மேம்பாலம், சுரங்க நடைபாதை பேருந்து நிலைய நடைபாதை, ஏசி வசதிகளுடன் கூடிய தரைத்தளம் எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் வசதிகள் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன.
பிராட்வே பேருந்து நிலையப் பணிகள் நடைபெறுவதால் 1.5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ராயபுரம் பகுதியில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ராயபுரம் என்.ஆர்.டி பாலத்திற்கு அருகில் 3.45 ஏக்கர் பரப்பளவில் நிலத்தில் பேருந்து நிலையம் அமைக்கப்படுகிறது.
இந்நிலையில், பிராட்வே பேருந்து முனைய வளாகம், பல்நோக்கு வணிக வளாகம் அமைக்கப்படும் திட்டத்திற்கு அனுமதி வழங்கியது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம். ரூபாய் 566 கோடியில் கட்டுமான பணிகளுக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்துள்ளதால் விரைவில் கட்டுமான பணிகள் தொடங்க வாய்ப்பு உள்ளது. பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து வளாக கட்டடம் 1,08,290 சதுர மீட்டர் பரப்பளவில் அமைகிறது. பேருந்து வளாக கட்டடத்தில் 2 அடித்தள நிலைகள், ஒரு தரைத்தளம் மற்றும் 8 மேல் தளங்கள் அமைகின்றன. 2 அடித்தள நிலைகள், தரைத்தளம் மற்றும் 9 மேல் தளங்களுடன் குறளகம் கட்டடம் அமைகிறது.
-
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக் -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
LPG Shortage: சமையல் கேஸ் சிலிண்டர் புக் செய்ய முடியவில்லையா! இந்த App-ல் டிரை செய்து பாருங்க! -
சென்னையில் மூடப்பட்ட பங்குகள்.. பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு! இப்படியே போனா கஷ்டம் -
13 வயது சிறுமியை 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு.. விசாரணையை சென்னைக்கு மாற்ற தந்தை கோரிக்கை -
வீட்டில் இருக்குற தண்ணி டேங்க் மட்டும் தான் கழட்டிட்டு வரல.. திரும்பி பார்க்க வைத்த சென்னைவாசி -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.. டேட்டாவுடன் உள்துறை செயலர் விளக்கம் -
உரிமைத் தொகை ₹1000 பதில் 2000 தந்தால்? சென்னை டூ திருச்சி சிறுமி சம்பவத்தில் பொங்கிய டிடிவி தினகரன் -
சென்னையின் இருதயத்தில் நடக்கும்.. பைபாஸ் சர்ஜரி.. 100 கி.மீ சாலைகள் விரிவாக்கம்.. அடியோடு மாறுது!












Click it and Unblock the Notifications