ஸ்டாலின் Show off காட்டியதால் Back Off செய்யும் தென்கொரிய நிறுவனம்! எடப்பாடி விமர்சனம்
சென்னை: காலணிகளை உற்பத்தி செய்யும் தென் கொரியாவை சேர்ந்த ஹ்வாசங் பன்னாட்டு நிறுவனம், தமிழகத்தில் தொழிற்சாலை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுவிட்டு தற்போது ஆந்திராவுக்கு செல்வதாக அறிவித்துள்ளதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: கொரிய நாட்டைச் சேர்ந்த ஹ்வாசங் நிறுவனம், தமிழ்நாட்டில் தொழில் தொடங்கவுள்ளதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது தமிழகத்தை விட்டு, ஆந்திர மாநிலத்தில் தொழில் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
பொம்மை முதல்வர் , நான்கு ஆண்டுகளாக வெளிநாட்டு சுற்றுலா, உள்ளூரில் முதலீட்டாளர் மாநாடுகள் என "ஷோ" காட்டியதால் தமிழ்நாட்டிற்கு என்ன பயன்?
வருவதாக சொன்ன நிறுவனங்களே Back Off செய்யும் நிலையில் தான் ஸ்டாலினின் ஆட்சி இருக்கிறது.
இதற்கு ஆன காரணங்கள் ஆய்வு செய்ய வேண்டியது அவசியம், சீர்கெட்ட சட்டம் ஒழுங்கு,
படுகுழியில் பெண்கள் பாதுகாப்பு, விண்ணை முட்டும் கமிஷன் ஊழல்கள், என அடிப்படையே சீர்குலைந்த இந்த ஸ்டாலின் ஆட்சி, விளம்பர மாடல் நிகழ்ச்சிகளும், வர்ணஜால விளம்பரங்களையும் காட்டினால் மட்டும் தொழில் நிறுவனங்கள் வந்துவிடுமா?
பொம்மை முதல்வர் தான் இப்படி என்றால், அவர் அரசில் தொழில் துறைக்கு வாய்த்திருக்கும் அமைச்சரோ, வெள்ளைப் பேப்பரைக் காட்டும் அமைச்சராக தான் இருக்கிறார். இத்தகைய வெறும் Show-off ஆட்சியாளர்கள் நடத்தும் ஆட்சியில், எப்படி தொழில்கள் தமிழகத்திற்கு வரும்?
Tamil Nadu was a land of opportunities for industries. Today, it's a land of missed chances - the legacy of @mkstalin's regime. புதிய தொழில்களால் தங்களுக்கு வேலை கிடைக்கும் என நம்பிய தமிழக இளைஞர்களை ஏமாற்றிய கையாலாகாத ஸ்டாலின் அரசுக்கு எனது கடும் கண்டனம்.
But the story is not over. Tamil Nadu will rise, rebuild, and reclaim its industrial greatness under forthcoming #AIADMK regime. இன்று நம்மை விட்டுச் சென்ற தொழில் நிறுவனங்கள், 2026 @AIADMKOfficial ஆட்சி அமைந்ததும், மீண்டும் தமிழ்நாட்டைத் தேடி வரும்! இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தென்கொரியாவை சேர்ந்த ஹ்வாசங் எனும் பன்னாட்டு நிறுவனம் காலணிகளை உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிறுவனம் அடிடாஸ் உள்ளிட்ட பிரபல நிறுவனங்களுக்கு சப்ளையராக இருந்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த நிறுவனம் தமிழகத்தில் காலணிகளை உற்பத்தி செய்ய தொழிற்சாலை அமைக்க தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருந்தது. ரூ 1720 கோடி மதிப்பிலான இந்த திட்டத்தால் 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என அந்த நிறுவனம் அறிவித்திருந்தது.
இது தொடர்பாக தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிவிட்டிருந்தார். அதில் தற்போது தென்கொரிய நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வாபஸ் பெற்றுக் கொண்டது. ஆந்திரா மாநிலம் குப்பத்தில் தொழிற்சாலை அமைக்க, ஆந்திர அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சட்டசபை தொகுதியான குப்பத்தில் தொழிற்சாலை அமைக்க முடிவு செய்துள்ளது என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications