நீங்களாகவே போயிருங்க சாமி.. அதிமுக எடப்பாடியை நெருக்கும் சீனியர்கள்! அதகளமான அதிமுக! பரபர பாலிடிக்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. மாநிலங்களவை உறுப்பினர் விவகாரம் தொடர்பாக சில சீனியர்கள் எடப்பாடி மீது அதிருப்தியில் இருக்கின்றனர். இது ஒரு புறம் இருக்க பாஜக கூட்டணி வேண்டும் என்றும், பாஜக கூட்டணி முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என இரு குழுக்கள் உருவாகி இருப்பது எடப்பாடிக்கு கூடுதல் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தபோது ராணுவ கட்டுப்பாட்டோடு இயங்கும் இயக்கம் என பெயர் பெற்ற அதிமுக தற்போது பரிதாபகரமான நிலையில் இருக்கிறது. ஜெயலலிதா மறைந்த பிறகு முதலமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி நான்காண்டு ஆட்சியை நிறைவு செய்யவே அரும்பாடுபட்டார்.

சீனியர்கள் பிரச்சனை, சசிகலாவின் நெருக்கடி, ஓ.

edappadi palaniswami AIADMK BJP
பன்னீர்செல்வத்தின் குடைச்சல் என தொடர்ந்து பல பிரச்சனைகள் இருந்தது. அப்போதைய மத்திய அரசும் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமான அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு நடவடிக்கைகளை எடுத்து கூடுதல் தொல்லை கொடுத்தது.

இருந்த போதும் எப்படியோ நான்காண்டுகள் சமாளித்து ஆட்சியை நிறைவு செய்தார். 2021 சட்டமன்ற தேர்தலில் தோல்வி என்பது எடப்பாடி பழனிச்சாமி எதிர்பார்த்ததுதான். இந்த நிலையில் கட்சியை எப்படியாவது முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என நினைத்து ஒற்றை தலைமை கோரிக்கையை முன் வைத்தார். அவருக்கு ஆதரவாக பல அமைச்சர்கள் திரண்டு நிலையில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட சிலர் பிரச்சனை செய்தனர்.

தொடர்ந்து பொதுக்குழுவில் கலவரம், நீதிமன்ற வழக்கு என பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு அதிமுகவின் பொது செயலாளர் ஆனார். இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் அவருக்கு தோல்விதான் மிஞ்சியது. இதனால் கட்சிக்குள்ளேயே எடப்பாடி ஆதரவு அணி, எதிர்ப்புஅணி என இரு அணிகள் உருவானது. பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என சில அமைச்சர்களும், கூட்டணியே வேண்டாம் என சிலரும் கூறி வந்தனர்.

குறிப்பாக ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் பாஜக கூட்டணியே வேண்டாம் என கூறி வருகின்றனர். இதையெல்லாம் மீறி 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் இணைந்து அதிமுக தேர்தலை சந்திக்கும் என எடப்பாடி பழனிச்சாமி கூறி இருக்கிறார். இதனால் ஜெயக்குமார்,வளர்மதி உள்ளிட்ட மூத்த முன்னாள் அமைச்சர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க மாநிலங்களவைத் தேர்தலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தியது.

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு மட்டுமே இருக்க வேண்டிய நிலையில் கூட்டணி கட்சிகளையும், எதிர்ப்பில் இருக்கும் முன்னாள் அமைச்சர்களையும் சமாளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பாமக தேமுதிக மாநிலங்களவை சீட்டை எதிர்பார்த்த நிலையில், தனது கட்சியில் இருந்த இன்பத்துரைக்கும், தனபாலுக்கும் மாநிலங்களவை உறுப்பினர் சீட்டை கொடுத்தார் எடப்பாடி பழனிச்சாமி. இதனால் மாநிலங்களவை சீட்டு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த தேமுதிகவும் பாமகவும் கடும் அதிருப்தி அடைந்தது.

மேலும் மக்களவை தேர்தலிலும் தோல்வி சட்டமன்ற தேர்தலிலும் தோல்வி என விரக்தியில் இருந்த சில சீனியர்கள் மாநிலங்களவை உறுப்பினர் சீட்டை எதிர்பார்த்தனர். கடந்த தேர்தலில் சிவி சண்முகம் எப்படியோ போராடி எம்பி பதவியை பெற்றுவிட்டார். இந்த முறை ஜெயக்குமார், செம்மலை, கோகுல இந்திரா உள்ளிட்டோர் எம்பி பதவியை எதிர்பார்த்திருந்த நிலையில் அவர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது.

மாநிலங்களவை சீட்டும் போய்விட்டது, பாஜகவுடன் கூட்டணி என தங்களை எடப்பாடி வேண்டுமென்றே புறக்கணித்ததாக சில சினியர்கள் கருதுகின்றனர். இதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியுமா என்ற பதைபதைப்பில் இருக்கின்றனர் முன்னாள் அமைச்சர்கள். மேலும் கடந்த முறையை நாங்கள் சொன்னோம், நீங்கள் கேட்கவில்லை இந்த முறை மாநிலங்களவை சீட்டை எதிர்பார்த்து இருந்த நிர்வாகிகள் எடப்பாடி இடம் கொந்தளித்து பேசியதாக கூறப்படுகிறது.

மேலும் 2019 மக்களவைத் தேர்தலிலும் தோல்வி, 2021 சட்டமன்ற தேர்தலிலும் தோல்வி அடைந்த நிலையில், 2026 தேர்தலிலும் தோல்வியை சந்தித்தால் நீங்களாகவே தலைமை பதவியை விட்டு விலகி விடுவது நல்லது என கடந்த முறை நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் சென்னை பகுதியைச் சேர்ந்த ஒரு மூத்த முன்னாள் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் முகத்துக்கு நிறைய பேசியதாக சொல்லப்படுகிறது. மேலும் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திலும் அவர் இதே கருத்தை பேசி இருக்கிறார்.

இத்தனை நாள் தனக்கு ஆதரவாக இருந்தவர் மாநிலங்களவை சீட்டு தரவில்லை என்பதற்காக இப்படி எதிராக திரும்புவார் என்பதை எடப்பாடி பழனிசாமியே எதிர்பார்க்கவில்லை என்கின்றனர். இதனால் சற்றே அதிருப்தியில் இருந்தாலும் 2026 தேர்தல் ஆட்சியைப் பிடித்தால் தான் கட்சியில் தனக்கு எதிர்காலம் இருக்கும் என்பதை எடப்பாடி பழனிச்சாமி உணர்ந்திருக்கிறார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+