கமுக்கமா வச்சிருந்து கடைசி நேரத்துல.. ஓஹோ.. அவர் பார்த்த வேலை தானா? ஓபிஎஸ்ஸை திணறவைத்த 'டாப்' லீடர்!
சென்னை : டெல்லியில் இருந்து எடப்பாடி பழனிசாமிக்கு வந்த லெட்டர், ஓ.பன்னீர்செல்வத்துக்கு உச்சகட்ட டென்ஷனை ஏற்படுத்திய நிலையில், அந்த லெட்டருக்கு பின்னணியில் வேலை பார்த்தது டெல்லியில் இருக்கும் எடப்பாடி அணியின் எம்.பி தானாம்.
எடப்பாடி பழனிசாமியை, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எனக் குறிப்பிட்டு மத்திய அரசு ஜி20 ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்புக் கடிதம் அனுப்பியது. அந்த கடிதத்தை ஏற்று எடப்பாடி பழனிசாமி அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அதிமுக சார்பாக எடப்பாடி பழனிசாமிக்கு டெல்லி அழைப்பு விடுத்ததை அறிந்து டென்ஷனாகி ஓபிஎஸ் டெல்லி வட்டாரத்தில் எப்படி நடந்தது என விசாரித்துள்ளார். அதில் தான், ஈபிஎஸ் டீமின் எம்.பியான பாஜக முக்கிய புள்ளிகளுக்கு நெருக்கமான தம்பிதுரையின் கை இந்த விஷயத்தில் இருந்ததைக் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்தே, அவசரமாக ஆலோசனை மேற்கொண்டு, பாஜக புள்ளிகளுடனும் பேசி, மத்திய அமைச்சருக்கு உடனே ஓபிஎஸ் கடிதம் எழுதினார் என்கிறார்கள் விவரமறிந்த வட்டாரத்தினர்.

டென்ஷனான ஓபிஎஸ்
அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜி 20 மாநாட்டை நடத்துவது தொடர்பாக 40 கட்சிகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி அண்மையில் டெல்லியில் பூர்வாங்க ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில் பங்கேற்க அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அவர் டெல்லி சென்று கலந்து கொண்டார். அதிமுகவுக்கு தலைமை யார் என்ற சர்ச்சை நீடித்து வரும் நிலையில் ஜி20 மாநாடு ஆலோசனை கூட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதால் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஓபிஎஸ் உச்சகட்ட டென்ஷனுக்கே போய்விட்டார்.

புருவம் உயர்ந்தது
மத்திய அரசு எடப்பாடி பழனிசாமியை, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எனக் குறிப்பிட்டு அழைப்புக் கடிதம் அனுப்பியது. இது எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்தது. அதேசமயம், ஓபிஎஸ் தரப்பினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எடப்பாடி பழனிசாமியை பாஜக மேலிடம் அங்கீகரித்து விட்டதா எனக் கேள்வி எழுந்தது. ஒரு விவகாரம் டிஸ்பியூட்டில் இருக்கும்போது மத்திய அரசின் அமைச்சகமே, இடைக்கால பொதுச் செயலாளர் என எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்தது பலரையும் புருவம் உயர்த்தச் செய்தது.

பணிந்ததா பாஜக?
எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியில் இருக்கும் செல்வாக்கை பாஜக உணர்ந்துதான் அவரை அங்கீகரித்துள்ளது. 2024 தேர்தலுக்கான வேலைகளை தொடங்க தீர்மானத்துடன் பாஜக தயாராகிவிட்டது. ஓ.பன்னீர்செல்வத்துக்காக எடப்பாடி பழனிசாமியை தவிர்த்துவிட்டு பாஜக இங்கு தேர்தலை எதிர்கொள்ள முடியாது என்பதால் அவரை அங்கீகரித்து விட்டது பாஜக தலைமை என்ற பேச்சுகளும் எழத் தொடங்கின. இது ஓபிஎஸ் தரப்புக்கு கடும் ஷாக்கை ஏற்படுத்தியது. இந்த விஷயம் எப்படி நடந்தது என ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் விசாரிக்கத் தொடங்கினார். அப்போதுதான் இதன் பின்னணியில் என்ன நடந்தது எனத் தெரியவந்துள்ளது.

தம்பிதுரையின் கை
எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்ட விவகாரத்தில், பாஜக மேலிட புள்ளிகளுக்கு நெருக்கமான, ஈபிஎஸ் ஆதரவாளரான தம்பிதுரை கை இருந்ததாகக் கூறப்படுகிறது. அரசாங்க உத்தரவாதங்களுக்கான குழு தலைவராக இருக்கும் தம்பிதுரைக்கு நீண்டகால டெல்லி தொடர்பின் அடிப்படையில் நாடாளுமன்ற விவகாரக் குழுவின் முன்னணி தலைகளோடும், அதிகாரிகளோடும் நல்ல பழக்கம் உண்டு. அந்தவகையில், அதிமுகவுக்கு யாருக்கு அழைப்பு அனுப்ப வேண்டும் என டெல்லியில் பேச்சு ஓடியபோது, ஓபிஎஸ் - ஈபிஎஸ் சிக்கலை உள்ளே கொண்டு வராமல், எதிர்க்கட்சி தலைவர் என்பதை முன்வைத்து எடப்பாடி பழனிசாமிக்கே அனுப்பச் செய்துவிட்டார் என்கிறார்கள்.

நுட்பமாக
அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்த அவதானிப்பு அற்ற அந்த துறை அதிகாரிகளும், இந்த சிக்கலை உணராமல் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு அனுப்ப தயாராகிவிட்டனராம். இந்த இடத்தில், தம்பிதுரை இன்னொரு நுட்பமான வேலையையும் செய்ததாக கூறப்படுகிறது. கட்சி சார்பாக பங்கேற்க அழைப்பு விடுக்கப்படுவதால் கட்சிப் பதவியை குறிப்பிட்டு அழைப்புக் கடிதம் அனுப்புங்கள் எனக் கூறி, எடப்பாடி பழனிசாமி‘இடைக்கால பொதுச் செயலாளர்' என்பதையும் சொல்லி, தம்பிதுரையே அழைப்புக் கடிதம் பெற்றுவிட்டார் எனக் கூறுகின்றனர்.

கமுக்கமாக
மேலும், இந்த அழைப்புக் கடிதம் கடந்த நவம்பர் மாதமே எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு கிடைத்துவிட்டது. நாடு முழுவதுமுள்ள மற்ற கட்சிகளின் தலைவர்களுக்கும் அப்போதே கிடைத்துவிட்டது. முதல்வர் ஸ்டாலின் இந்த மீட்டிங்கில் பங்கேற்க டெல்லி செல்கிறார் என்ற விவரம் சில நாட்களுக்கு முன்னர் கடிதம் கிடைத்ததுமே தெரிவிக்கப்பட்டு விட்டது. ஆனால், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இந்த கடிதம் கிடைத்தது பற்றியோ, டெல்லி செல்லப்போகிறார் என்பது பற்றியோ அவர்கள் மூச்சுவிடாமல் கமுக்கமாக இருந்துவிட்டு ஒரு நாள் முன்னதாகத்தான் கடிதத்தை வெளியில் கசிய விட்டனர்.

பின்னணி காரணம்
எடப்பாடி பழனிசாமிக்கு வந்த இந்த அழைப்புக் கடிதம் வந்த தகவலை முன்கூட்டியே வெளியே விட்டிருந்தால், ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் மூவ் செய்து, தன்னையும் மத்திய அரசு அழைக்கும்படி செய்திருப்பார். லோக்சபாவில் இருக்கும் ஒரே ஒரு அதிமுக எம்.பியான ரவீந்திரநாத் மூலம் தனக்கான பிரதிநிதித்துவத்தை ஓபிஎஸ் பெற்றிருப்பார் என கணக்கு போட்டிருக்கிறது ஈபிஎஸ் தரப்பு. அதனால் தான், அதற்கு வாய்ப்பே தராமல், கடைசி நேரத்தில் கடிதத்தை வெளியே விட்டு, ஓபிஎஸ் டெல்லியில் மூவ் செய்ய நேரம் கொடுக்காமல் ‘செக்' வைத்தது எடப்பாடி தரப்பு என்கிறார்கள்.

அவசரம் - ஆலோசனை
கடைசி நேரத்தில் இந்த தகவலை அறிந்ததும் ஓபிஎஸ் டெல்லியில் முயற்சி செய்து பார்த்துள்ளார். ஆனால், எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டதால் இனி அழைப்புக்கு வாய்ப்பில்லை எனக் கை விரித்துள்ளனர். இதையடுத்து, தமிழகத்தில் இருக்கும் பாஜகவுக்கு நெருக்கமான புள்ளிகளிடம் ஆலோசித்துள்ளார். அவர்கள் கொடுத்த ஆலோசனைகளின்படியே, மத்திய அமைச்சகத்துக்கு உடனே கடிதம் அனுப்பினார் ஓபிஎஸ். நான் தான் ஒருங்கிணைப்பாளர், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது நீதிமன்றத்திலும் விசாரணையில் இருக்கிறது, தேர்தல் ஆணையமும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈபிஎஸ் அணி செய்த குழப்பம்
ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தியும் இந்த விவகாரத்தில் தம்பிதுரையின் கை இருந்ததை ஒப்புக்கொண்டார். நாடாளுமன்ற விவாகார அமைச்சகத்தில் எடப்பாடி அணியினர் ஏற்படுத்திய குழப்பமே இதற்கு காரணம் என அவர் கூறியிருக்கிறார் அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு அதிமுகவில் என்ன பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது என்பது முழுமையாக தெரிய வாய்ப்பில்லை. அதைப் பயன்படுத்தி எடப்பாடி அணியைச் சேர்ந்தவர்கள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர் எனக் கூறியுள்ளார்.

நம்பத்தகுந்த வட்டாரம்
மேலும், ஈபிஎஸ் அணியைச் சேர்ந்த தம்பிதுரைதான் இந்த செயலில் ஈடுபட்டதாக நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து எங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இது குறித்து மக்களவை அதிமுக எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத்திடமாவது அவர்கள் கேட்டிருக்க வேண்டும். ஏன் அதைச் செய்யவில்லை என்று தெரியவில்லை எனக் கூறியிருக்கிறார் புகழேந்தி. தம்பிதுரையின் தலையீடு இருந்ததை டெல்லி புள்ளிகளிடம் உறுதி செய்த பிறகே ஓபிஎஸ் தரப்பு அதுபற்றி பேசியது என்கிறார்கள் விவரமறிந்த வட்டாரத்தினர்.
-
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications