பெரிய ‘பன்னீர்’ ரோஜா மாலை! பெஞ்சமினை பஞ்சராக்கிய எடப்பாடி! ’அண்ணன்’ கோச்சுப்பாரு.. அடடே ஆச்சரியகுறி!
சென்னை : சென்னை அதிமுக பொதுக்குழு கூட்டத்தின் போது முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் எடப்பாடி பழனிசாமிக்கு மாலை அணிவிக்க, "வேண்டாங்க... அட இருங்க... என்னங்க நீங்க வேற சும்மா..." என கடுமையாக திட்டிய நிலையில், தான் அவ்வாறு நடந்து கொண்டதற்கான காரணத்தை பெஞ்சமினை அழைத்து கூறியிருக்கிறார் இபிஎஸ்.
Recommended Video
பரபரப்பான சூழலில் நடந்து முடிந்த அதிமுக செயற்குழு - பொதுக்குழுக் கூட்டத்தில் முன்னெப்போது இல்லாத அளவுக்கு எடப்பாடி ஆதரவாளர்களால் அவமானப்படுத்தப்பட்டார் முன்னாள் முதல்வரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம்.
அவர் கூட்டத்தில் இருப்பதை கருத்தில் கொள்ளாமலே நடந்து முடிந்தர்து அந்த பொதுக்குழு என்றே சொல்ல வேண்டும். தனக்கான தரவு வட்டம் சுருங்கிவிட கிட்டத்தட்ட தனிமைப்படுத்தப்பட்டு அமர்ந்திருந்த பன்னீர்செல்வம், தன்னிடம் இருந்து சென்ற கேபி.முனுசாமியே எதிராகப் பேசியதால், ஒரு கட்டத்தில் எழுந்து வெளியேறினார்.

கடுப்பான எடப்பாடி பழனிசாமி
அப்போது பல்வேறு கூச்சல், குழப்பங்கள், நிர்வாகிகளின் இடையூறுகளுக்கு மத்தியில் பொதுக்குழு நடைபெற்ற நிலையில், எடப்பாடி பழனிசாமி பேசிக் கொண்டிருக்கும்போது திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் பெஞ்சமின் ரோஜா மாலை அணிவிக்க முயன்றதால் கடுப்பான எடப்பாடி பழனிசாமி, "அட இருங்கப்பா.. சும்மா" எனக் கடிந்துகொண்டார்.முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் தான் பொதுக்குழு ஏற்பாடுகளை மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்
இந்நிலையில் அதன் பின்னர் என்ன நடந்தது என எடப்பாடி பழனிசாமி பெஞ்சமினை தனியே அழைத்து பேசியுள்ளார். அப்போது, "தவறா நினைக்காதீங்க பெஞ்சமின். ஏற்கனவே அண்ணன் பன்னீரை உட்கார வெச்சு, அவர் முன்னாடி பெரிய பெரிய மாலை போடுறது, சால்வைகள் கொடுக்குறது இதெல்லாம் தவறுங்க...
இதெல்லாம் அவர ரொம்ப கேவலப்படுத்துன மாதிரி ஆகிவிடும்

நடந்ததற்கு விளக்கம்
அதனால சற்று உணர்ச்சிவசப்பட்டு கோபப்பட்டு விட்டேன் என 2 நிமிடங்கள் தன்னுடைய கார் அருகே அழைத்து பெஞ்சமினிடம் பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. ஏற்கனவே மற்ற நிர்வாகிகள் பேசியதை வைத்து நான் தான் அப்படி பேசியிருப்பேன் என அண்ணன் நினைச்சுருப்பாரு.. நீங்க வேற பெரிய பெரிய மாலைலாம் போட்டா தாப்பாகிடும், அதனால தான் அப்படி பண்ணிட்டேன்" என அன்பாக பேசியிருக்கிறார்.

தொண்டர்கள் உருக்கம்
இதனால் அங்கேயே நடந்ததை மறந்த பெஞ்சமின் மற்ற நிர்வாகிகளிடம், தனது ஆதரவாளர்களிடமும் எடப்பாடி பழனிசாமி தன்னிடம் பேசியது குறித்து சிலாகித்துள்ளார். அதில் எடப்பாடி பழனிசாமி இந்த குணத்தால் தான் தலைவர் பதவிக்கு வந்திருக்கிறார். எதிர் முகாமில் வெறும் ஆபாச வார்த்தைகள் தனிநபர் தாக்குதல் என எதையும் பேசாமல் அமைதியாய் இருந்த அவர், மேடையிலும் அண்ணன் என தான் பேசினார். என்ன நல்ல மனது பாருங்க என உருக்கமாக பேசியிருக்கிறார். இதனை அதிமுக ஐடி விங் நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்.












Click it and Unblock the Notifications