வெறும் பஞ்ச் டயலாக் தான்.. அதுவும் காமெடி.. அண்ணாமலையால் பாஜகவுக்கு வீழ்ச்சி.. சீண்டிய காயத்ரி!
இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட கூட்டணி கட்சி வாய்ப்பு அளித்துள்ளது, ஆனால் அண்ணாமலையால் வேட்பாளரை அறிவிக்க முடியவில்லை என காயத்ரி சீண்டியுள்ளார்.
சென்னை : ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக கூட்டணியின்றி ஈபிஎஸ் போட்டியிடுகிறார். பாஜகவிடம் கேட்காமல் வேட்பாளரை அறிவிக்கிறார் ஓபிஎஸ். சில தமிழ்ப் படங்களைப் பார்த்துவிட்டு பிரஸ் மீட்டில் வெறும் பஞ்ச் டயலாக்குகளை பேசுகிறார் ஐ.பி.எஸ். இப்போது பேனர் பிரச்சனைக்காக டெல்லிக்கு ஓடியுள்ளார் என அண்ணாமலையைச் சீண்டியுள்ளார் காயத்ரி ரகுராம்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உடனான மோதலைத் தொடர்ந்து, அவரை மறைமுகமாக விமர்சித்ததால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம், தொடர்ச்சியாக அண்ணாமலையை நேரடியாக அட்டாக் செய்து வருகிறார்.
அந்தவகையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அதிமுகவின் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் வேட்பாளரை அறிவித்துள்ள சூழலில், அண்னாமலையை சீண்டியுள்ளார் காயத்ரி ரகுராம்.

காயத்ரி - அண்ணாமலை மோதல்
பாஜகவில் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் தலைவராகச் செயல்பட்டு வந்த காயத்ரி ரகுராம், அண்ணாமலையை மறைமுகமாக விமர்சித்து ட்விட்டரில் தொடர்ச்சியாக பதிவிட்டு வந்த நிலையில், கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தொடர்ந்து அண்ணாமலைக்கு எதிராகவும் அண்ணாமலை பெண்களை குறிவைத்து அவதூறு கிளப்புவதற்காகவே வார் ரூம் வைத்திருப்பதாகவும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார் காயத்ரி. முதலில் மறைமுகமாக தாக்கி வந்தவர், பின்னர் நேரடியாகவே அண்ணாமலையை அட்டாக் செய்யத் தொடங்கினார்.

காயத்ரி அட்டாக்
பாஜகவில் இருந்து விலகுவதாக காயத்ரி அறிவித்த நிலையில் அவரை கட்சியில் இருந்து நீக்கினார் அண்ணாமலை. இதையடுத்து பாஜகவுக்கு எதிராக நடைபயணம் செல்லப்போவதாக அறிவித்த காயத்ரி ரகுராம், நாள்தோறும் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து ட்விட்டரில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அண்ணாமலை தன்னை எதிர்த்துப் போட்டியிடுமாறு சவால் விடுத்தார் காயத்ரி. தொடர்ந்து ஈரோடு தேர்தல் களம் தொடர்பாக அண்ணாமலையைச் சீண்டி வருகிறார்.

டெல்லி சென்ற அண்ணாமலை
இந்நிலையில் தான் நேற்று அதிமுகவின் இரு அணிகளும் வேட்பாளர்களை அறிவித்தன. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக தங்கள் நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்காத நிலையில், ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் அடுத்தடுத்து வேட்பாளரை அறிவித்தனர். மேலும், ஈபிஎஸ் அணியின் பேனரில் பிரதமர் மோடி படம் இடம்பெறவில்லை. இப்படியான சூழலில் டெல்லிக்குச் சென்றுள்ளார் அண்ணாமலை. டெல்லி மேலிடத்திடம் நிலையைச் சொல்லி, டெல்லியின் உத்தரவைப் பெற்று வருவார் எனக் கூறப்படுகிறது.

வெறும் பஞ்ச் டயலாக் தான்
இந்நிலையில் மீண்டும் அண்ணாமலையை சீண்டி பதிவிட்டுள்ள காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக கூட்டணியின்றி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக போட்டியிடுகிறது. பாஜகவிடம் கேட்காமல் வேட்பாளரை அறிவிக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். சில தமிழ்ப் படங்களைப் பார்த்துவிட்டு பத்திரிகையாளர் சந்திப்பில் வெறும் பஞ்ச் டயலாக்குகள் மட்டுமே கொடுக்கிறார் ஐ.பி.எஸ். அது காமெடியாக மாறி வருகிறது.

பாஜகவுக்கு பெரிய வீழ்ச்சி
2024 தேர்தலில் கூட்டணி இல்லாமல் பாஜக தனித்து போட்டியிடும் என்பது முதல் பஞ்ச் டயலாக். 25 இடங்களில் வெற்றி பெறுவோம் என்பது இரண்டாவது பஞ்ச் டயலாக். ஈரோடு இடைத்தேர்தல் மூலம் கூட்டணி கட்சி என்ன செய்ய முடியும் என்று காட்டிய பிறகு, இப்போது பேனர் பிரச்சனைக்காக டெல்லிக்கு ஓடியுள்ளார் ஐ.பி.எஸ். இப்போதே இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட ஐபிஎஸ் தனது பலத்தையும் வளர்ச்சியையும் காட்ட கூட்டணி கட்சி வாய்ப்பு அளித்துள்ளது. ஆனால் அவரால் வேட்பாளரை அறிவிக்க முடியவில்லை. தமிழ்நாட்டில் பாஜகவுக்கு பெரிய வீழ்ச்சி" என்று குறிப்பிட்டுள்ளார்.
-
புதுச்சேரியில் பிரதமர் மோடி ரோடுஷோ.. மலர்தூவி உற்சாக வரவேற்பு கொடுத்த மக்கள்.. -
அமர், வினோஜ், சூர்யா.. அண்ணாமலை ஆதரவாளர்களுக்கும் சீட் இல்லை.. பாஜக வேட்பாளர் பட்டியல் சொல்லும் சேதி -
அண்ணாமலை மிஸ்ஸிங்.. அமித் ஷா பிளான்.. அடுத்து என்ன? அண்ணாமலை எடுக்கும் முடிவு இதுதான்? -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஒரு சோர்ந்துபோன கூட்டணி.. புதுச்சேரியில் விஜய் பிரச்சாரம்! -
"அண்ணாமலை ஆதரவாளரா?You are rejected!" புதிய பிரச்சார வாகனத்துடன்நொந்து போன அமர்பிரசாத் ரெட்டி ! -
2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியில்லை? மொடக்குறிச்சியை திணிக்கும் பாஜக மேலிடம்? Annamalai அப்செட் -
இங்க இருக்குற திருவண்ணாமலைக்கு ஏர்போர்ட்.. அந்த பேச்சு பேசின அஸ்வத்தாமன் பெயர் லிஸ்டில் இல்லையே! -
அண்ணாமலையை "ஓவர்லுக்" செய்ததா டெல்லி? பாஜக வேட்பாளர் பட்டியலில் மிஸ்ஸான பெயர்! ஆட்டம் குளோஸா? -
சர்ப்ரைஸ் வானதி சீனிவாசன்.. நோஸ் கட் அண்ணாமலை.. 2021 தேர்தல் பாஜக பிளாஷ்பேக் -
கோவை வடக்கில் வானதி சீனிவாசன் களம்: யார் இவர்? 2026 தேர்தலில் மீண்டும் கவனம் ஈர்க்கும் பாஜக முகம் -
திருநெல்வேலி 35 வருட அடையாளம் சார்.. யார் இந்த நயினார் நாகேந்திரன்.. சாத்தூரில் மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications