நாங்க என்ன ஏமாளியா? பாஜகவுக்கு எடப்பாடி எண்ட் கார்ட்! பாய்ந்து வந்த ’வார் ரூம்’.. கூட்டணியில் குண்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பாஜக கூட்டணியில் மோதல் வெடித்திருக்கிறது. ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல என திமுக தரப்புக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி, பாஜக தரப்புக்கு பல்ப் கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் அதிமுகவுக்கு வாக்கு இல்லை என பாஜகவினர் சமூக வலைதளங்களில் கொந்தளித்து வருகின்றனர். தேர்தல் வரை இந்த கூட்டணி நிலைத்திருக்குமா என்ற கேள்வியும் இதனால் எழுந்திருக்கிறது.

2026 சட்டமன்ற தேர்தலையொட்டி பாஜக - அதிமுக கூட்டணி மீண்டும் அமைந்திருக்கிறது. பாஜக கூட்டணியால் அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கு பல்வேறு சிக்கல்கள் இருக்கிறது. முதல் பிரச்சனையே கூட்டணி ஆட்சி தான்.

பாஜக தலைவர்கள் கூட்டணி ஆட்சி எனக் கூற, அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் எனக் கூறி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. இப்படி முதல் கோணலே முற்றும் கோணல் என்பது போல அதிமுக கூட்டணி பொருந்தா கூட்டணி என விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.

Edappadi Palaniswami AIADMK Vijay

தேர்தலுக்கு இன்னும் பத்து மாதங்கள் இருக்கும் நிலையில் முன்னதாகவே பாஜக அதிமுக கூட்டணி அமைக்கப்பட்டது தான் பிரச்சனைக்கும் மூல காரணம் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள். ஏற்கனவே அதிமுக தலைவர்களை விமர்சித்ததால் தான் பாஜக அதிமுக கூட்டணி உடையப்பட்டது. இந்த நிலையில் பாஜக தலைவர் நாகேந்திரன் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என கூறி வந்தாலும், தமிழக பாஜக முன்னாள் தலைவரான அண்ணாமலை அமித்ஷா சொல்வதுதான் வேதவாக்கு. நிச்சயம் கூட்டணி ஆட்சி தான் என சொல்லி வருகிறார்.

இந்த கேள்விதான் பரபரப்புக்கு காரணம். தொடர்ந்து திமுகவும் பிற கட்சிகளும் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு சாத்தியமில்லை, அதிமுகவை பாஜக அழிக்க பார்க்கிறது என்ற விமர்சனத்தை முன் வைத்தனர். இதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய எடப்பாடி பழனிச்சாமி பாஜக கூட்டணியில் தான் இருக்கிறது. திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். அதே நேரத்தில் ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஏமாளி அல்ல என கூறி இருக்கிறார். இதனால் சமூக வலைதளங்களில் பாஜகவினர் கடும் கொந்தளிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மேலும் 'அதிமுகவுக்கு ஓட்டு இல்லை' என்ற ஹாஷ்டேக்கையும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, எடப்பாடி பழனிச்சாமியின் எண்ணமே பாஜகவை கழட்டி விடுவது தான் என்பது போலத்தான் இருக்கிறது. பாஜக கூட்டணிக்கு வந்தால் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் அதிமுக கூட்டணிக்கும், பின்பு அதிமுகவுக்குள்ளும் வர முயற்சிப்பார்கள் என்பதால் பாஜக கூட்டணியை விட்டு விலகி இருக்கவே விரும்புகிறார்.

தற்போது அரசியல் சூழல் மாறிவரும் நிலையில் தமிழக வெற்றிக் கழகம், பாமக, தேமுதிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை ஒருங்கிணைத்து மெகா கூட்டணியை உருவாக்கி தேர்தலை சந்தித்தால் திமுக ஆட்சியை அகற்றி விடலாம் என்பதை எடப்பாடி பழனிச்சாமியின் எண்ணம். காங்கிரஸ் வராவிட்டாலும், தேமுதிக, பாமக, தமிழக வெற்றிக் கழகம் நிச்சயம் தங்கள் கூட்டணிக்கு வரும் என்பதை தான் பிரம்மாண்ட கட்சி ஒன்று எங்கள் கூட்டணிக்கு வர இருக்கிறது என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதனால் பாஜகவை கூட்டணியிலிருந்து கழட்டிவிட எடப்பாடி திட்டம் போட்டு அதனை வெளிப்படுத்தும் வகையிலேயே பேசி வருகிறார் என்கின்றனர் அதிமுகவினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+