நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில் சமவாய்ப்பு கொள்கை! மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு!
சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில் சமவாய்ப்பு கொள்கை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
இதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் நலன்கள், உரிமைகள் மற்றும் அவர்களது முன்னேற்றத்தில் அக்கறை செலுத்தக் கூடிய முன்னோடி மாநிலம் என்ற பெருமையை தமிழகம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமவாய்ப்பு கொள்கை பற்றி மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது;

சமவாய்ப்பு கொள்கை
பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளில் மாற்றுத்திறனாளிகள் பணிபுரிய உகந்த பணியிடங்களைக் கண்டறிதல், மாற்றுத்திறனாளிகள் பணிபுரியும் இடங்களில் தடைகளற்ற சூழ்நிலைகளை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு சம வாய்ப்பு வழங்குவதை உறுதி செய்வதே சமவாய்ப்பு கொள்கை ஆகும்.

மண்டல அளவில்
மாற்றுத்திறனாளிகளின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், வேலை வாய்ப்புகளில் அவர்களுக்கான சம வாய்ப்பினை உறுதிபடுத்துவதற்காகவும், மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார மையம் என்ற அமைப்பின் மூலம் மாநில அளவிலும், சென்னை,கோயம்புத்தூர், திருச்சி, சேலம், திருநெல்வேலி,திருவண்ணாமலை என 6 மண்டல அளவிலும், செயல்படுத்திட தொண்டு நிறுவனம் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

தொண்டு நிறுவனங்கள்
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தனியார் கம்பெனிகளை நேரில் பார்வையிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பினை கண்டறியும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர். இக்குழுவானது தனியார் நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகள் நல உரிமைகள் சட்டம் 2016ன்படி பணியிடங்களில் சமவாய்ப்பு கொள்கையினை நடைமுறைப்படுத்தும் பணியினை மேற்கொள்ளும்.

இணையதளம்
சமவாய்ப்பு கொள்கை குறித்த விவரங்களை ஒவ்வொரு தனியார் நிறுவனமும் தங்களது இணைய தளம் மற்றும் தங்கள் அலுவலகத்தில் அனைவரும் பார்க்கும் வண்ணம் வெளியிடப்பட வேண்டும். இச்சமவாய்ப்பு கொள்கையில் மாற்றுத்திறனாளிகளால் செய்யக்கூடிய பணிகளாக கண்டறியப்பட்ட பணிகள் குறித்த விவரம், மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படுத்தப்பட்ட தடைகளற்ற வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கென பிரத்யேகமாக நியமனம் செய்யப்பட்டுள்ள தொடர்பு அலுவலர் பற்றிய விவரங்கள் குறிப்பிடப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்பு
டிசம்பர் 2021 முதல், தனியார் நிறுவனங்கள், கம்பெனிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு 14 விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. தனியார் வேலை வாய்ப்பு முகாம்களில் 533 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத் தரப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு கோரும் 1935 மாற்றுத்திறனாளிகளிடமிருந்து அவர்தம் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.

முதல் முறையாக
தமிழகமானது இந்தியாவிலேயே முதன்முறையாக சமவாய்ப்பு கொள்கையினை நடைமுறைப்படுத்துவதற்கென இதுபோன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது. இப்பணிகளை துரிதப்படுத்திட மாவட்டந்தோறும் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மூலம் தனியார் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications