Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யாரும் மிரட்டவில்லை.. அரசு சொன்னதை நம்பி போராட்டம் வாபஸ்.. இடைநிலை ஆசிரியர்கள் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: எங்களின் கோரிக்கைகளை மூன்று மாதத்தில் நிறைவேற்றுவதாக அரசு உறுதியளித்ததை அடுத்து உண்ணாவிரதப்போராட்டத்தை விலக்கிக்கொள்வதாக இடைநிலை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இன்று முதல் பணிக்கு திரும்ப உள்ளதாகவும் ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.

சமவேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி ஒரு வாரத்துக்கும் மேலாக சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்களும் போராட்டம் நடத்தி வந்தனர்.

Equal Work to Equal Pay Teachers hunger strike called off from Today

இரவு பகலாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதால் உடல் நலம் பாதிக்கப்பட்டு 200க்கும் அதிகமான ஆசிரியர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தங்களது கோரிக்கையை நிறைவேற்றக் கோரி அரசு தரப்பிடம் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதும் உடன்பாடு எட்டப்படாததால் போராட்டம் தொடர்ந்து வந்தது.

நேற்றைய தினம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின்னர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

"இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் பரிந்துரைகள் 3 மாத காலத்திற்குள் இறுதி செய்யப்பட்டு அறிக்ககை சமர்ப்பிக்கப்படும். 171 தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியர்களை முறையான ஊதிய விகிதத்திற்கு கொண்டு வருவது குறித்த அரசாணை விரைவில் வெளியிடப்படும்.

பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் 10 ஆயிரம் ரூபாயிலிருந்து 12,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்" என்று தெரிவித்தார். தங்களது கோரிக்கைகள் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படாததால் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதாக ஆசிரியர்கள் நேற்று இரவு அறிவித்தனர். இந்த சூழலில் இன்று காலை டிபிஐ வளாகத்திற்குள் வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் ராஜரத்தினம் ஸ்டேடியம் மற்றும் அதன் அருகே உள்ள சமூகநலக் கூடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து பகுதிநேர ஆசிரியர்கள் அரசின் அறிவிப்பை ஏற்று தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர். பிற்பகலுக்கு மேல் இடைநிலை ஆசிரியர்களும் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக அறிவித்தனர்.

இந்த நிலையில் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இன்றைய தினம் போராட்டத்தை தொடர்ந்தனர். அவர்களை பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார். பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள், தங்களின் உண்ணாவிரதப்போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். போராட்டத்தை வாபஸ் பெறச்சொல்லி யாரும் மிரட்டவில்லை என்றும் எங்களின் கோரிக்கைகளை 3 மாதத்தில் நிறைவேற்றுவதாக அரசு உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தை தற்காலிகமாக திரும்ப பெற்றுள்ளதாக கூறியுள்ளனர் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+